Monday, April 4, 2011

SCHIZOPHRENIA



SCHIZOPHRENIA (ஸ்கிட்ஸோ ஃபெர்னியா) என்பது ஒரு வகையான மனச்சிதைவு.அதிகப்படியான பய உணர்வு இதற்கு அடிப்படை.இதை நிறைய பேர் நோய் என்றும் ஒத்துக்கொள்வதில்லை.இந்த நோயை கண்டுபிடிப்பது நோயாளியின் மூலமாக மட்டுமே முடியும்.அவரிடமும் அவரை சார்ந்தவர்களிடம் தீர விசாரித்த பின்னரே அறிய முடியும்.இன்று வரை இதற்கு லேப் (ஆய்வுக்கூட) பரிசோதனைகள் இல்லை.காதில் ஒலி கேட்பது போன்ற உணர்வு அதாவது யாராவது பேசுவது போலவும் அவர்கள் இவர்களை வழி நடத்துவது போலவும் ஒரு உணர்வு இருக்கும்.அதிகப்படியாக பயந்து பயந்து மிரளுதல்,ஒழுங்கற்ற பேச்சு,செய்கின்ற வேளையில் கவனமின்றி இருத்தல் என்று இந்நோயின் முக்கிய அம்சங்கள் ஆகும்.குறிப்பாக 13 to 25 வயதிற்குள் உட்பட்டவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
எப்படி வருகின்றது?
டோபமைன் என்ற என்சைம் மூலையில்  அதிகமாக சுரப்பதால் ,மருந்துகளை மருத்துவர் அனுமதியின்றி தானே அதிகமாக உட்கொள்ளுதல்,போதைக்கு அடிமையாகுதலும் காரணிகளாகும்.
எதன் மூலம் வருகின்றது?
மரபு வழியாக வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது.அம்மா அப்பா இருவருக்கும் இந்த நோய் இருந்தால் நூறு சதவிகிதம் குழந்தைக்கும் அது வரும்.எவரேனும் ஒருவருக்கு என்றால் பத்து சதவிகிதம் வாய்ப்பு உண்டு.பிற உறவுகளிடம் இருந்து அதற்கும் கீழான சதவிகித வாய்ப்புகள் உண்டு.அதே சமயம் உறவுகளில் இருந்து வரவே வராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.குடும்ப சூழ்நிலை ,நீண்ட காலம் வேலையின்றி இருப்பது,வறுமை,சிறுவயதில் ஏதேனும் ஒரு விஷயத்தால் பயங்கரமாக பாதிக்கப்படுதல் ,வளர்ந்த விதம் என்று இந்நோய் உருவாகக்காரணமாக இருக்கின்றது.
அறிகுறிகள் 
1.காதில் ஒலி கேட்பது போன்ற பிரம்மை(hallucination)
2.மிரட்சி (delusion)
3.திரிபுனர்வுப்பிணி (paranoid)
4.தனக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டது போல பிதற்றுதல் 
5.யாரிடமும் ஒட்டாமல் தனிமையில் காலம் கழித்தல் 
6.நிர்மலமான முக பாவனை (ஒன்றுமே கண்டுபிடிக்கமுடியாது முகத்தில்)
7.தூக்கத்தில் பிரச்சனை -அதிகப்படியாக தூங்குவார்கள்
8.வித்தியாசமான முக பாவனைகள்
9.தூக்கத்தில் உளறுதல்

10.நடக்கின்ற விதம் உடல் அடிக்கடி அதிருதல் 
11.அடிக்கடி காரணமின்றி கோபம் மற்றும் எரிச்சல் இன்ன பிற 
இரு வகைகள்
பாசிடிவ் -சாதரணமா இருக்கிற நபர்களை விட சில அதிகப்படியான உணர்வுகள் ஒலிகேட்குதல்,கண்டபடி சிந்தனை அதாவது இந்த நோய்க்குரிய அறிகுறிகள் அதிகம் காணப்படும்.இது மோசமானது 
நெகடிவ்-சாதரணமாக இருக்கின்ற நபர்களை விட சில விஷயங்கள் கம்மியா இருக்கும். 
மருந்து
அடிபிகள் ஆண்டிசைகொடிக் மருந்துகள் 
எனக்கு தெரிந்தது ஒலாஞ்சைன் ,ஒலேநெக்ஸ்  ,ஒலியான்ஸ் இன்ன பிற
இந்த ஆண்டிசைகொடிக் மருந்துகள் தான் தற்பொழுது அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் 
இதன் பக்கவிளைவுகள் மிக மோசமானவை.இருப்பினும் மருத்துவர்கள் அதிகம் சொல்ல மாட்டார்கள்.
உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரிக்கும்
பாலியல் உணர்வுகளை மழுங்கடிக்கும்.எனவே எப்பொழுதாவது மட்டுமே தோன்றும் அவர்களுக்கு.அதன் காரணமாகவே இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு குழந்தை பிறப்பு விகிதம் கம்மியாகவே இருகின்றது.
உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த மாட்டார்கள்.நாட்கள் செல்ல செல்ல நாம் என்ன சொல்கிறோம் என்பதை கேட்டு புரிவதற்கே நேரம் அதிகம் எடுத்துக்கொள்வார்கள்.
இந்த மருந்துகளை வருடக்கணக்கில் உட்கொள்ள நேரிடும்.மருத்துவர்கள் அறிவுரையின் படி அதை நீட்டிக்கவோ குறைக்கவோ செய்யவேண்டும்.அதிகபடியான தூக்கம் இந்த மாத்திரைகள் கொடுக்கும்.மிக சோம்பேறிகளாக இருப்பார்கள்.ஆனால் அவர்களுக்கு பிடித்த ஒன்றை மட்டும் விரும்பி நன்றாக செய்யும் திறமை இருக்கும்.
பொதுவாக இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சொல்வது சில வருடங்களில் குணம் ஆகி விடும் என்பதுதான்.ஆனால் பெரும்பாலும் இந்த நோய் ஒரு மெதுவான ப்ரோசெச்ஸ் ஆகும்.ஆகவே நோயாளிகள் மனம் வெறுத்து சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக பல வருடங்கள் சாப்பிட வேண்டும் என்பதை சொல்ல மாட்டார்கள்.
வரையறுத்து இதற்குள் சரியாகி விடும் என அவர்களாலேயே சொல்ல இயலாத ஒன்று.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எக்காரணம் கொண்டும் திருமணத்தை பரிந்துரைக்க மாட்டார்கள்.
நோயாளிகளும் திருமணம் மருத்துவரின் ஆலோசனை இன்றி செய்து
எந்த பெண்/ஆண் வாழ்க்கையும் கெடுத்துவிடாதீர்கள் 
இந்த நோய் உள்ளவர்களுக்கு அவர்கள் குடும்பத்தார் கொடுக்கின்ற ஆதரவும் சமூகத்தின் அரவணைப்பும் மட்டுமே நல்லபடியாக கொண்டு செல்லும்.இருப்பினும் அவர்களிடம் இருக்கும் சோம்பேறித்தனத்தை பொறுத்துக்கொண்டு அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ளுதலே குடும்பத்தாருக்கு மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரை.
இந்த நோயால் பாதிக்கப்பட்டும் சாதனை புரிந்து நோபல் பரிசு பெற்ற கணித மேதை "திரு.ஜான் நேஷ் "அவர்கள்.இவரை பற்றிய "எ ப்யூட்டி ஃபுல் மைன்ட் "மிக அருமையான படம் 

இதற்கு என்றே இருபத்தி ஐந்து வருடங்களாக schizophrenia research and foundation of india 
சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகின்றது.இங்கே இலவசமாகவே மருத்துவ ஆலோசனையும் வழங்கி வருகின்றார்கள்.மிக சிறந்த சேவையை முடிந்த அளவு கொடுக்கின்றார்கள்.





2 comments:

நெல்லை கபே said...

இந்த பிரச்னை ஒன்றும் புதிது அல்ல. இந்தியாவில் பழங்காலத்திலேயே உண்டு. ஆனால் மனநோய் என்று இந்தியர்கள் பெயரிடவில்லை. அதில் ஒரு வாய்ப்பு ஒளிந்திருந்ததை கண்டார்கள். இப்போது உள்ள நிலையிலிருந்து "மனம்அற்ற நிலைக்கு"(enlightenment) போவதுக்கு முன்பு ‘மனசிதைவு’ ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதாலேயே அதிகமான பக்தியை சிறுவயதில் பழக்கிவிட்டால்,இல்லை பெரியவள் ஆனதும் தொடர்ந்தாலும் ஓகேதான்...இது நோயே அல்ல.

தத்துவக்கல்வியும் அந்த நாளில் உண்டு. தத்துவ ஈடுபாடு எண்ணங்களின் விரைதலை மட்டுப்படுத்தும்.

பிராமணர்களுக்கு இது அதிகம் வருகிறது. இதை (அந்தக்கால)பிராமணர்கள் ஆத்மசாதனைக்காக வாய்ப்பாக கருதினார்கள். இதை கடந்துதான் ஞானிகள் ஞானிகளானார்கள். இந்த கால பிராமணர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. இது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இல்லையெனில் யாரும் ஆத்மசாதனைக்காக முன்வரவேமாட்டார்கள் இப்படி ஒரு பிரச்னை இருக்கே என்று.(ஓஷோ சொன்னது)

பிராமணர்களின் பழைய வாழ்க்கை (ஆச்சாரப்படி,அதிக பக்தியாக,வெளி உலக விவகாரங்களை குறைத்துக்கொள்கையில்...)இது வரம் என்று புரியவரும்.இதுவே பிராமணர்கள் அக்ரஹாரத்தில் ‘தனிச்சூழலில்’ வாழ்ந்ததற்கான காரணம்.

பிராமணர்களின் நம்பிக்கை(இல்லை உண்மை) என்னவெனில் முற்பிறவிகளில் அதீத இறைதேடலில் ஈடுபட்டவர்களுக்கு இப்பிறவியில் இதுமாதிரி நடக்கும். இதை மேலும் மேலும் பக்தியில் ஈடுபடுத்தினால் மீராவைப்போல ‘பித்து நிலைக்கு’ இட்டுப்போய் ‘உண்மை’(ஞானமடைதல்)க்கே இட்டுச்செல்லும்.

மேற்கத்திய உளவியல் நோயாக பகுத்ததில் பிரச்னையாகிவிட்டது. இது கலைகளில் ஈடுபடவும் உதவும்.

இப்போது ஏன் இந்த உண்மையை விஷயம் தெரிந்தவர்கள் சொல்வதில்லை எனில் சும்மாவே உலகம் முழுக்க கடவுள் பக்தியை காய்ச்சி எடுப்பார்கள். இதில் "மனசிதைவு"தான் கடவுள் தேடலில் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்றுதான்...

ரமண மஹரிஷியின் கேள்வி-பதில்கள் படியுங்கள்...அவர் மனதைப்பற்றி அபாரமாய் பேசுகிறார். இவர்கள் சந்நியாச யோகம் கொண்டவர்கள்.

நீங்கள் எழுதியிருப்பதை போல திருமணம் செய்ய லாயக்கில்லாதவர்கள் என்பதெல்லாம் கிடையாது. அது மேற்கத்திய மனநல மருத்துவர்களின் அறியாமையால் சொல்வது. மீண்டும் சொல்வேன்...ஆன்ம தேடலுக்கான perfect personalities இந்த நபர்கள். அந்த தேடலை திருமணம் முடிந்தும் செய்யலாம்.

என் சகோதரி அதிகமான பக்தியின் உதவியால்,மந்திர ஜெபத்தின் உதவியால்(கிருஷ்ண பக்தை அவள்) மீண்டு வந்தாள் இதிலிருந்து.(எப்போதும் கையில் துளசி மாலை இருக்கும்.) அவளுக்கு திருமணமும் ஆகிவிட்டது. அதீத மன அழுத்தமெல்லாம் இப்போது இல்லை.

Unknown said...

இந்த நோய் என் கணவருக்கும் இருக்கிறது இது எனக்கு திருமணம் ஆனபிறகே எனக்கு தெரியவந்தது அவர் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது எப்பொழுதும் தனிமையை விரும்பவார் எல்லோரா போலவும் இருக்கமாட்டார் சில நேரத்தில் தனிமையில் பேசிகொன்டு இருப்பார் எனக்கு ஆரம்பத்தில் இதெல்லாம் பார்த்து ஒரே குழப்பபாக இருந்தது பிறகு ஒருநாள் என் கணவர் உற்கொல்லும் tadlet a doctor a காட்டி கேட்ட பின்புதான் எனக்கு தெரிந்தது இது என் வீட்டாருக்கோ என் சொந்தகாரங்கலுக்கோ தெரியாது ஆணால் இது என் கணவர் வீட்டாருக்கு தெரியும் இதை மறைத்து விட்டார்கள் ஆணால் என் கணவர் நிரபராதி அவரை தண்டிக்க மனம் இல்லை என்னால் சேர்ந்து வாழ்வும் முடியவில்லை நான் ரொம்ப மனகுலப்பத்தில் இருக்கிறேன் இந்த நோயை குனப்படுத்த முடியுமா என் வாழ்க்கையிலும் வசந்தம் வருமா?????