"இன்று நீ நாளை நான்"என்ற படத்தில் வரும் "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" என்ற பாடல் ஒரு அருமையான கம்போசிங்.மோகம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது.ஆண்களுக்கு வெளிக்காடிகொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது.பெண்களுக்கு அவ்வாறு இல்லை.காட்டிக்கொண்டாலும் எற்றுக்கொள்ளபடுவதில்லை.இந்த பாட்டிலே கணவனை இழந்த பெண்ணின் மன உணர்வுகளை அவளின் மோகத்தின் தாக்கத்தை நம்மை இசையிலே உணர வைத்திருக்கின்றார் இளையராஜா.நம்புவீர்களோ இல்லையோ இங்கே பதிவுடுவதற்கு முன் வரை இந்த பாடலை நான் காட்சி வடிவில் கண்டதில்லை.இருப்பினும் பாட்டினை கேட்கின்ற பொழுதே தோன்றுகின்ற கற்பனை அப்படியே இந்த பாட்டை பார்க்கும் பொழுது பொருந்தி வந்தது.அது தான் இளையராஜா.
ஆரம்பத்தில் மெதுவாக ஆ என்று ஆரம்பித்து அப்படியே உச்சஸ்தாயில் கூடி செல்லும் ஜானகி அவர்களின் ஹம்மிங்.ஜானகிஅவர்கள் பற்றி ஒருமுறை அனுராதா ஸ்ரீராம் சொன்னது நினைவுக்கு வருகின்றது."சங்கதிகளின் ராணி"என்று.அது முழுக்க முழுக்க ஜானகி அவர்களுக்கு ஏற்புடைய பட்டம்.இளையராஜாவே ஜானகி அவர்களிடம் கொடுக்காத ஒரு சில பாடல்கள் எனக்கு நிறைவு தரவில்லை என்று சொல்லி இருக்கின்றார்.பல வித சங்கதிகளை போடுவதில் ஜானகி வல்லவர்.இந்த பாடல் கூட இவரின் பெருமை பறைசாற்றும் பாடல்தான்.பெண்ணின் தாபத்தை அப்படியே குரலில் குழைத்து கொண்டு வந்திருப்பார்.
கொட்டுகின்ற மழையில் ஆட்டம் போடுவார் லக்ஷ்மி.அந்த துள்ளலை பாடலின் ஆரம்ப புல்லாங்குழல் பதிவு செய்து இருக்கும். பாடலில் இடியும் மழையும் காற்றும் வீசும்.அந்த புயல் காற்றில் பாடினால் எப்படி இருக்கும் என்று ஒருமுறை கற்பனை செய்துகொண்டே கேளுங்கள் அவருடையஹம்மிங்கை.மிக பொருத்தமாக இருக்கும்.
"பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலரம்புகள் உயிர்வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு
கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது கா..தல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இரு ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா..?
மனதின் கொண்டாட்டத்தை மெலிதான புல்லாங்குழலால் சத்தமாக சொல்ல இயலுமா?
சொல்லி இருப்பார்.மெல்லிய தட்டலுடன் புல்லாங்குழலை இணைத்து விட்டுருப்பார்.அது சொல்லும் பல நூறு மகிழ்ச்சியை.
தங்கத்தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப்பூங்கொடி படர இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவகன்னிகை தானம்மா
இந்த வெள்..ளை மல்லிகை தேவகன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா
கண்களிலும் மனத்திலும் ஏறிவிடும் பாடலின் தாக்கம்
No comments:
Post a Comment