எனது ட்வீட் முதன்முதலாக விகடனில் வலை பாய்ந்து இருக்கின்றது.வெளி உலகில் இது தான் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.அதுவும் எனக்கு பிடித்த விகடனில்.நண்பர்கள் வாழ்த்திய பொழுதில் இருந்து என் பெயரை அந்த பக்கத்தில் பார்த்த தருணம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத சிறந்த தருணமாக மாறிவிட்டது.மற்றவர்களுக்கு அதுவெறும் பெயர் என்றாலும் அதில் என்னையே பார்த்தது போன்ற ஒரு பிரமிப்பு.மற்ற நண்பர்களின் கீச்சுக்கள் பிரசுரமாகும் பொழுது நம்முடையது என்று வரும் என்று ஏங்கி இருக்கிறேன்.ட்விட்டர் கு வந்த காரணமே விகடனின் தூண்டுதல் தான்.ஒரு நாள் என் பெயரும் வரும் என்று கனவு கண்டேன்.அது இவ்வளவு விரைவில் நிறைவேறும் என நினைக்கவில்லை.மகிழ்ச்சி.மிக்க மகிழ்ச்சி.நன்றி நன்றி!
விகடனில் வெளிவந்த எனது முதல் கீச்சு இதோ
"புத்திசாலிகளாக நினைப்பவர்களை ஒரே வரியால் மட்டுமே வெல்ல முடியும் அது.."நீங்க சொல்வது சரிதான்!"
3 comments:
நீங்க சொல்வது சரிதான் !!
---jr_oldmonk@twitter.com
விகடன் வலையோசையிலும் உங்கள் பதிவு வந்துள்ளதே! வாழ்த்துகள்.
Congrats.
Post a Comment