Saturday, July 23, 2011

அது ஒரு கனாக்காலம்...!

1 .டிவி சரியா தெரியாட்டி விதம் விதமா ஆண்டெனாவை திருப்பி வச்சு மேல ஒருவர் கீழ ஒருவர் சத்தமிட்டு சரி செய்த காலம் 
2 .கிரிக்கெட் விளையாடி பந்து தலையில் பட்டு வீங்கியதை தேய்த்துக் கொண்டே அம்மாவிடம் சொல்லி விடாதே என்ற அண்ணனின் கெஞ்சல்

3 . வெள்ளிக்கிழமைகளில் வெளியூரிலிருந்து திரும்பி வர நேர்கையில் ஒலியும் ஒளியும் சத்தம் கேட்டு வீட்டிற்கு விரைவாக அண்ணன் இழுத்து சென்றதுண்டு

4 . வீட்டிற்கு முதன் முதலாக போன் வந்தபொழுது ஒவ்வொரு அழைப்பிற்கும் ஓடி போய் பேசியதுண்டு 
5 .தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அம்மாவின் அடிக்கு பயந்து பரண் மேல் இருந்த அண்டாவில் அண்ணன் அமர்ந்திருந்ததை அண்ணாந்து பார்த்து விழித்த காலம் 
6 .நேராக நடந்து சென்றால் தொலைவில் தெரியும் வானத்தை தொட்டு விடலாம் என்றெண்ணியது ஒரு காலம் 
7 .அண்ணன் பள்ளி செல்லாததை அப்பா மாடி படியில் ஏறி வீட்டில் நுழையும் முன்பே "அண்ணா இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல "என்று போட்டுகொடுத்ததும் அப்பா அவனைக் கொல்லு கொல்லு படிக்காதவனை என்று திட்டியதும்

Monday, July 18, 2011

பெருமூச்சு ...4!

உன் மனமெனும் கருவறையில்
பத்திரமாக படுத்துகிடக்கின்றது 
என் எதிர்காலம் 
"தாயுமானவன்"
*********************
எனை எவ்வளவு பிடிக்கும் என 
கைகள் விரித்து சொல்லாதே 
அவ்வளவு பேராசைக்காரி இல்லை நான் 
என் "மெய்"அளவு கை சுருக்கி 
"மெய்" சொல் அதுபோதும்
**********************************
உன்னை எவ்வளவு பிடிக்கும் 
எனக் கேட்டால் தெரியாது
உன்னளவு மட்டுமே பிடிக்கும் 
உன்னைத் தவிர வேறு எதுவும் சிறந்ததில்லை 
உதாரணம் சொல்வதற்க்குக்  கூட...
************************************************* 

வார்த்தைகள்வெற்றிடமாகின்றன
நினைவுகளில் நீ நிரம்பி வழியும் பொழுது
*******************************************
சட்டென்று சமாதானம் செய்துவிடும் 
உன் அதிசய வித்தைகள் 
கற்கவே கோபம் கற்கின்றேன்
******************************
என் கனவுகள் ஜென்ம சாபல்யம் 
அடைகின்றன 
நனவுகளாக நீ தீண்டியதால்
************************************ 
ஏதோ பண்டிகை என்கிறார்கள் 
திருவிழா என்கிறார்கள் 
நீ வருகின்ற வரையில்
எனக்கு இது மற்றும் ஒரு நாளே !

*****************************************
நீ சரணடையும் தருணங்களில்
உன் கைகளுக்குள் அடங்கி
சரணடைவதின் இன்பத்தை உணர்கின்றேன் நானும்..
*************************************************************************
என் வெட்கங்கள் 
தவம் கலைகின்றன 
உன் பட்டுக் 
கை பட்டு..
*************
எத்தனை முறை 
எதிரெதிர் கருத்துக்கள்
நமக்குள் வந்தாலும்
நாம் "முட்டி"க்கொண்டதில்லை..
*********************************************
உன் அன்பு அதிகமாகிவிட்டது 
என்று சொல்ல விருப்பமில்லை
என்றைக்கு குறைவாக இருந்தது
இன்று புதியதாய் கூடி விட்டது
எனச் சொல்வதற்கு
***************************

மறைந்திருந்து வெளியேறினால்
சட்டென்று அணைக்கின்ற 
காதலன் 
"மாமழை"
************
முகம் நோக்கித் தூறும்
சாரல்கள் யாவும் 
என் செல்லக் கோபங்களை 
சமாதானம்செய்யத்
தீண்டும்
உன் விரல்கலாகின்றன
"மம்ம்ம்மாமழை"
***********************
எண்ணிடாத
மழைத் துளி அளவிற்கு
 எண்ணிலடங்காத  
காதல்
"மாமழை"
*************
எங்கோ இருக்கும் உன்னை 
எந்நேரமும் என் ஆவி 
தழுவிக் கொண்டே தான் இருக்கின்றது 
கைகளுக்குள் எப்பொழுது சிக்கப் போகின்றாய்..
****************************************************************
விலகி செல்லாதே அருகில் வந்தென்
இதழ் ஒற்றி(று) ப்பிழை திருத்து 
*******************************************
நம் ஊடல் பொழுதுகளில் 
பெரும்பாலும் மௌனங்கள் மட்டுமே
அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றன
*************************************************
வெற்றிடம் மட்டுமே நிறைந்து
வழிகின்றது
நீ இல்லாத் தருணங்களில்
************************************
யதார்த்தமாய்க் காட்டிக் கொண்டு
உலவும் தருணங்கள் முழுவதும்
நீறு பூத்த நெருப்பாய் உன் நினைவுகள்
கனன்று கொண்டே..     
 ***************************
பொய்யறிந்த கண்களின் 
கேலியில் உன்னிடம் 
மாட்டிக்கொண்ட மெய்யறிந்து
வெட்கித் தலைகவிழ்ந்தன 
என் இதழ்கள் பற்களுக்குள்...
*************************************
கழுத்து வளைவுகளுக்குள் 
நீ புதையும் பொழுதெல்லாம் 
உயிர்த்தெழுகின்றது 
என் மோகம் 
*****************

Monday, July 11, 2011

ஏழரை யோசனைகள்!!!

ஏழரை யோசனைகள் !!!

அன்பார்ந்த ஃ பேக் ஐ டி (FAKE ID ) பெருமக்களே! தங்களின் பேராதரவை அறிந்து அகமகழ்ந்து தங்களுக்கு சில பல நல்ல தகவல்களையும் குறிப்புகளையும் வாரி வழங்கும் பொருட்டு உங்கள் சேவையை பாராட்டியும் நானும் எனது தோழியும் சேர்ந்து இதை உங்களுக்கு அளிப்பதில் பெரும் உவகை கொள்கின்றோம்
எத்தனை முறை ப்ளாக் செய்தாலும் சலிக்காமல் புது ஐ டி உருவாக்கி விடுகின்றீர்கள்.மகிழ்ச்சி.பெண்களது ஃ பாலோயர்ஸ் லிஸ்ட் ஐ அப்படியேனும் ஏற்றியே தீர வேண்டும் என்ற உங்கள் பிடிப்பு பிடித்திருக்கின்றது.ஆனாலும் பாருங்கள் அதை புரிந்து கொள்ளாமல் உங்களை வெகு இலகுவாக கண்டு கொண்டு மறுபடியும் தடை செய்ய வேண்டியதாகி விடுகின்றது.நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய போலி ஐ டி வீணாகின்றது.அதை தவிர்க்கவும் வலை தளங்களில் ஓசியாக அக்கௌன்ட் கொடுக்கிறார்கள் என்று நூறு ஐ டி பெண்களை தொந்தரவு செய்வதற்கென்றே உருவாக்கும் முன்னர் நீங்கள் அத்தியாவசிய விசயங்களை கவனத்திற் கொள்ளவும் யாம் கீழ்க்கண்ட ஏழரை விதமான யோசனைகளை முன்வைக்கின்றோம்.

ஏழரையாக ஒரு பெண்ணை போட்டு கொலையாக கொள்வது பெரிதல்ல..குறைந்த பட்சம் இந்த ஏழு குறிப்புகளையாவது பின்பற்றவும் 

1.அதாகப்பட்டது போலியாக ஒன்றை உருவாக்குவதை விட அதைசந்தேகத்துக்கிடமின்றி பராமரிப்பது முக்கியமானது.ஆனால் தாங்கள் மண்டை மேலே இருக்கும் கொண்டையை மறந்துவிட்டு எவர் "ப்ளாக்கி"னாரோ உடனே அவரையே முதன் முதலாக பின்தொடர்ந்து முதல் குற்றம் புரிகின்றீர்.முட்டை ட்வீட்ஸ் முட்டை ஃ பாலோயர்ஸ் என வைத்துக் கொண்டால் கண்டிப்பாக சந்தேகத்திற்கு முதல் வித்தாக அமையும்.
ஆகவே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நீங்களே சொல்லாம முதலில் ஒரு ஐம்பது பேரை பின்தொடர்ந்து குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து ட்வீட்ஸ் களாவது போட்டுவிட்டு நிதானமாக உங்களை ப்லாக்கிய பெண்ணை பின்தொடரவும்.

2.
தான் எவ்வளவு அடி முட்டாளாக இருக்கின்றோம்  என காட்டுவது போல எடுத்த உடனேயே அந்த குறிப்பிட்ட பெண்ணை முதலில் எடுத்தவுடன் திட்டவோ அல்லது புகழவோ செய்தால் உங்க ஐ டி உடனே சந்தேகத்தின் பெயரில் ப்லாக்கபடும் என அறிக !!

3.அந்த பெண் இருக்கின்ற நேரம் மட்டும் அந்த ஐ டியை நீங்க ரெகுலரா உபயோகப்படுத்தினாலும் அப்பெண்ணிற்குள் அலாரம் அடித்துவிடும் என அறிக !அதனால் தாங்கள் தயை கூர்ந்து பொறுப்பாக வெட்டியாக இருக்கின்ற நேரம் அனைத்தும் இருக்கின்ற அனைவரிடமும் கடலை வறுத்து வைக்கவும்.பார்க்கும் பெண்ணிற்கு இவர் நம்மிடம் மட்டும் தான் பேசுகின்றார் என்ற சந்தேகம் வராத அளவிற்கு தீயாக வருக்க வேண்டும்.கருகினாலும் பரவாயில்லை.

4. தாங்கள் செய்கின்ற மாபெரும் தவறாக கருதப்படுவது யாதெனில் ஃ பேக் ஐ டி யில் நீங்கள் தான் இருக்கின்றீர்கள் என கண்டுகொள்ள வசதியாக உங்கள் குலம் கோத்திரம் என்ன என்பதை அறியும் வகையில் உங்கள் ஒரிஜினல் ஐ டியையும் சேர்த்தே பின் தொடரும் பட்டியல் அல்லது பின்தொடருவோர் பட்டியலில் இணைத்துக் கொள்வதுதான்.

5. நீங்கள் உருவாக்கும் போலி ஐ டி யில் உங்களுடைய பிரதிபலிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகின்றது.ஆகவே நீங்களே அந்த போலி ஐ டியிடம் பேசி கொள்வதும் பின் அந்த ஐ டியை பிரபலம் ஆக்க அது வழியே போடும் ட்வீட்டை ரிட்வீட் செய்வது உங்களுக்கு நீங்களே ரிவிட் அடித்து கொள்வதற்கு ஒப்பாகும் :)))))))))

6. அடிக்கடி அந்த பெண்ணிடம் பேசும் ஆர்வத்தை அடக்கி தேவைக்கு மட்டும் பேசுவது நல்லது .அல்லது மறுபடியும் வேறு ஒரு புது போலி ஐ டி உருவாக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்பதை மனதிற்கொண்டு பொறுமையை கடைபிடித்தால் நிறைய போலி ஐ டி உருவாக்க வேண்டிய நிர்பந்தமும் நேரமும் மிச்சமாகும்.ஆகவே பொறுமையில் எருமையாக இருங்கள்.

7.பின்தொடர்பவர்கள் கூட தினம் கீச்சுக்களை படிப்பார்களோ இல்லையோ ஆனால் பின்தொடராமலேயே ஒரிஜினல் ஐ டியில் வந்து வந்து தினம் கீச்சுக்களை படித்துவிட்டு செல்லும் உங்கள் சின்சியாரிட்டிக்கு ஒரு சல்யூட்.ஆனாலும் நீங்க எட்டி பார்ப்பது போல உங்களை அந்த பெண்ணும் கண்காணிக்க கூடும்.ஆகவே சும்மா சும்மா வம்பிழுத்து பழைய சண்டைகளை நினைவுறுத்துவது போல பேசி "நான் அவன் தான் "என சட்டென்று காட்டி வழி வகுத்து விடாதிருத்தல் நலம்.

7.1/2. ப்ளாக் பண்ண ஒரு க்ளிக் தான் உருவாக்கத்தான் ஏகப்பட்டகிளிக் மற்றும் டைப் தேவைப்படுது #யோசிங்க ஃ பேக் ஐடி மக்கள்ஸ்
:))) by
 
 and