Thursday, April 28, 2011

எனது கிறுக்கல்கள்


முள் 
சன்னலின்  வெளியே
பசிக்கழும் குழந்தை
பார்த்துக்கொண்டே 
விழுங்கிய உணவு 
தொண்டையில் முள்ளாய் ...!

*****************************
பால பாடம்
உன் முடி 
சாமிக்கு என்றதும் 
என் முடி சாமிக்கு 
எப்படி பத்தும்
 கேட்ட 
மழலை 
 ஊமையாக்கி
கற்றுக்கொடுத்தது
ப(பா )ல பாடம்..
**********************

அம்மாவின்  சூடு
தரும் வலியை விட
அப்பாவின் சுடுசொல்
தரும் வலி அதிகம் 
*********************

பூமி பொங்கி சுட்டது 
வானம் கண்ணீர் விட்டது
மழை..
*********
காதலை தெரிவிக்க
ஆவிபிரித்து 
தூது அனுப்பியது கடல்
அழகில்லை எனவானம் 
சொன்னதை 
சொல்லி அழுது 
மறித்து விழுந்தது 
மழையாக....
******************
கீழே விழும் பொழுது
அழுதபடியே விழுந்த மழையை
ஆறுதல் படுத்தியது கடல்
நிச்சயம் உன்னை ஒருநாள்
உயரத்தில் ஏற்றுவேன் என்று..
*****************************************  
கருப்பு அழுக்கு என 
விரட்டிவிட்டது வானம் 
பொங்கி அழுதது மேகம் 
"மழை"
*********
இறுக்கிப் பிடித்து 
இறைஞ்சுகிறாய்
போனால் போகட்டும் என 
விருந்தளிக்கிறேன்
"பசி"


6 comments:

sowmya said...

மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்க மேடம்.
-arattai girl

Unknown said...

அழகு இந்தக் கவிதை..!

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

அழகு இந்தக் கவிதை..!

settaikaaran said...

சில கவிதைகள் அனக்கராம் கவிதைகள் வார்த்தைகளை மாற்றி போட்டாலும் அர்த்தம் வருகிறது தொடர்ந்து எழுதுங்கள் தோழி ! வாழ்துகள்,

கிராமத்தான்-சரவணன் said...

அம்மாவின் சூடு
தரும் வலியை விட
அப்பாவின் சுடுசொல்
தரும் வலி அதிகம்


உண்மைங்க !

யாராச்சும் திட்டினால் "அழற" அளவுக்கு கோபம் வரும் எனக்கு !