Saturday, March 3, 2012

அனுபவங்கள்..!

அண்ணா பையனை அழைக்க முக்கால் மணி நேரம் காத்திருந்தேன் பஸ் ஸ்டாப் ல நேரம் வீணாகிடுச்சு கரெக்ட் டைம் க்கு வந்திருக்கலாம் ன்னு தோனுச்சு.
பக்கத்தில் ஒரு பெண் உன்னைக் கூப்பிட யாரும் வரலையோ எனக் கேட்டாள் போல பஸ் போகவும் என்னைப் பார்த்த நிமிடத்தில் ஆயிரம் வாட்ஸ் மகிழ்ச்சி
அந்த வினாடி குழந்தை முகத்தில் பார்த்த மகிழ்ச்சி முக்கால் மணி நேரம் நின்றது பெரிதாகத் தோன்றவே இல்லை :)
*********************
எதிர்வீட்டில் இருந்த ஒரு மன நோயாளித் தாத்தாவைக் காணவில்லையாம் எங்கேனும் பார்த்தால் சொல்லுங்கள் என்று வேண்டுகோள் வந்தது
வேதனை என்னவென்றால் அப்படி ஒருத்தர் இருந்தார் என்பதே கேபிள்காரர் சொல்லித்தான் தெரியும் அப்புறம் எங்க அடையாளம் பார்க்கறது :((
இணையம் வந்துவிட்ட பின் கண்ணிற்குத் தெரியாத உலகம் சுருங்கிடுச்சு கண் முன்னால் இருப்பவை யாவும் வெகு தூரத்தில் விலகிச்சென்றுவிட்டன
**********************************************************
மதுரையில் தான் இன்னமும் பவண்டோவும் டொரினோவும் பழமையில் அடையாளங்களில் ஒன்றாக மிச்சம் இருக்கின்றன.இன்றளவும் விசேஷ வீடுகளிலும் பெட்டிக் கடைகளிலும் இவை உண்டு.வயிற்று வலிக்கு குடிக்க சிபாரிசும் செய்யப் படுகின்றன.கோக் ,பெப்சி மட்டுமே கவுரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டு இவை ஓரங்கட்டப் படுவது வருத்தமே:(
**********************************************************************************
போத்தீஸ் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே மேலமாசி வீதி ரொம்பப் பிசிதான் எப்பவும்.எஸ்கலேட்டர் ல ஏறி இறங்கறதுக்கே ஒரு கூட்டம் வருது.விலை அதிகம் என்ற முணுமுணுப்புகள் இருந்தாலும் அங்க எடுத்தேன்னு சொல்றது கவுரவமா நினைக்கரவங்களும் இருக்காங்க.வாசலைத் தொடும் முன்பே தீண்டும் AC யும் இழுத்துடுது சனங்களை.ஆனா என்ன தான் போத்தீஸ் வந்தாலும் அதன் வருகையால் துளியும் பாதிக்காமல் ஒரு சிறு விளம்பரமும் இல்லாம மதுரை மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வெகு பிடித்தமான ஒன்றாக AK அஹ்மத் & கோ சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கின்றது.
**************************************************************************
புது மண்டபத்தில் வளையல் பாசி வாங்க ஒவ்வொரு இடத்திலா விலை கேட்டோம் .ஒரு இடத்தில விலை, கூட சொல்லவும் "என்ன இங்கே கூட சொல்றிங்க அங்கே கம்மியா சொல்றிங்களே " ன்னு சொன்னதுக்கு அதுக்கு சட்டென்று கடைக்காரர் "ஏம்மா அப்போ ஒவ்வொரு இடத்திலையும் விலை கேட்டுகிட்டே தான் வர்றீங்க ரொம்ப நேரமா அப்போ ஒன்னு கூட எங்கேயும் இதுவரைக்கும் வாங்கல ;அப்படிதானே...?" என்றார்.நிஜமாகவே சிரித்து விட்டேன். ஏனென்றால் உண்மை அதுதான்.
ஒரு நாலு இடத்தில விலை விசாரிச்சு வாங்கறது தப்பாங்க?
 
***********************************************************************************
மதுரை காந்தி மியுசியத்திற்கு வீடு உபயோக பொருட்கள் கண்காட்சி கு சென்று இருந்தேன்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அங்கே பேராசிரியர் கு.ஞான சம்பந்தன் பட்டி மன்றம் அப்பொழுது தான் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.உடனே என் அண்ணியிடம் வாங்க அவர் நல்லா பேசுவார்.நல்லா இருந்தா கேட்போம்.ஒரு ரெண்டு நிமிஷம் அப்புறம் அங்கே போய்டுவோம் நு சொல்லிகிட்டே அவர் பேசுவதை தள்ளி நின்று கவனிக்க ஆரம்பித்தோம்.அப்பொழுது அவர் அங்கே அங்கே நின்று கொண்டு இருப்பவர்கள் இருக்கையில் வந்து அமருங்கள்.ஒருவேளை நின்று கொண்டு கொண்டு இருப்பவர்களுக்கு இப்படி கூட ஒரு எண்ணம் இருக்க கூடும் நன்றாக இருந்தால் கேட்போம் இல்லாட்டி போய்டுவோம் நு நான் நினைத்ததை அப்படியே பட்டென்று போட்டு உடைத்தார்.கூட்டத்தில் ஒரே சிரிப்பலை.எதிரே இருப்பவர்களின் மன நிலையை அறிந்து சமயோசிதமாக அவர் பேசி சிரிக்க வைத்ததை மிகவும் ரசித்தேன் 
******* ************************************************

எனக்குப் பிடித்த பாடல்கள்!

ஆகாய கங்கை பாடலின் பொழுது ஸ்ரீதேவிக்கு கால் வலியால்(எதுவும் விபத்தா என தெரியவில்லை) அதிகம் ஆடாமல் அமர்ந்தே நடனம் அமைக்கப்பட்டதாம் .மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகியின் அருமையான குரல்களில்
************************************************************************
கங்கை அமரன் படத்திற்காக ராஜா இசையமைத்த பாடல் அமரனுக்கு பிடிக்கவில்லையாம்.ராஜா படத்தில் வை மக்கள் நிச்சயம் இந்த பாடலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என சொன்னாராம்..அப்படி ஹிட் ஆன பாடல் தான் மாங்குயிலே பூங்குயிலே..
யூ ட்யூபில் இளையராஜா ஹிட்ஸ் எனத் தேடினால் முதல் பக்கத்தில் நிச்சயம் இந்தப் பாடல் இருக்கும்.பிளாட்டினம் ஹிட்சில் ஒன்றாகவும்
**************************************************************************
 கண்ணா என ஏக்கமாக ஜானகி அழைத்ததும் வயலின் வெளிப்படுத்தும் உணர்வுகள் அபாரமானது .வேகமாக மூச்சிரைக்க ஓடினால் எப்படி இருக்கும்?அது போல விரைந்து சென்று தவிப்பை அவ்விடம் சொல்கின்றது.(.013 to ௦.26 )
 கண்ணா உனைத் தேடுகிறேன்வா என்றதும் வயலின் கொஞ்சிக் குழைந்து அழைப்பை ஏற்கின்றது.உன்னோடுதான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை இரண்டுக்கும் இடைப்பட்ட புல்லாங்குழல் ம்ம் என்று செல்லம் கொஞ்சுகிறது ஆனந்தத்தில்:)
***************
என் அண்ணனின் தோழர் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை பார்த்தவர்.அங்கே வேலை பார்க்கும் பொழுது ஆகாய கங்கை மற்றும் காத்திருந்து காத்திருந்து பாடலை திரும்ப திரும்ப கேட்பாராம் உடன் வேலை செய்த வட இந்தியர் ஒருவர்.
அதிலும் பாடலின் இடையில் வருமே
"பாடா படுத்தும் காடா கருப்பா வாடா நீயும் இறங்கி வாடா வந்துரு வந்துரு தானா வந்துரு இல்லன்னா பாட்டு படிப்பேன் உடுக்கை அடிப்பேன் சாத்தானோட கூட்டில் அடிப்பேன் வந்துரு வந்துரு தானா வந்துரு"
இதை திரும்ப திரும்ப கேட்டு அவன் என்ன சொல்றான் அர்த்தம் சொல்லுடா எனக் கேட்பாராம்.இந்தப் பட இயக்குனர் சுந்தர ராஜன் வேறு நடிகரை சிபாரிசு செய்த தயாரிப்பாளரை புறக்கணித்து விட்டு விஜயகாந்தையே பிடிவாதமாக படத்தில் போட்டாராம்..அப்படி எல்லாம் விஜயகாந்த் ஐ ஏத்தி விட்டேன் அவர் என் மகன் இறந்ததற்கு அடுத்த தெருவில் இருந்து கொண்டு வரல இதுதான் சினிமா உலகம் என வருத்தத்துடன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
*****************************************************************************
நீலக்குயிலே பாடலில் அடக்கிவாசித்து இருக்கிறார்SPB அப்படி நல்லபிள்ளையாக ஜானகியை மிஞ்சாத சிஷ்யனாக சொல்லிக்கொடுத்ததை சமர்த்தாகப்பாடுகின்றார்.ஒரு இடத்தில் கூட எல்லாம் தெரிந்த பாடகர் என்ற நினைவு இல்லாமல் புதியதாய் பாடல் கற்கும் மாணவனை அப்படியே பிரதி பலித்து இருக்கிறார்.

பாடல் காட்சிகளை படமாக்கி விட்டு ராஜா கையில் கொடுப்பார்களா என்றதொரு சந்தேகம் எனக்கு இருந்ததுண்டு.அவ்வளவு பொருத்தமாக பாடலை கேட்கும் போது நாம் முதன்முறை கற்பனை செய்ததற்கும் படத்திலும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.சமீபத்தில் என்றென்றும் ராஜா நிகழ்ச்சியில் எப்படி படமாக்கக்கூடும் என்று கற்பனை செய்தே இசையமைத்ததை குறிப்பிட்டார் ராஜா.இந்த வீடியோ இரண்டு நாட்கள் முன்பு தான் பார்த்தேன்.அப்படியே நளினி சொல்லிக் கொடுக்க மாணவனாக மோகன்.