Thursday, April 28, 2011

எனது கிறுக்கல்கள்


முள் 
சன்னலின்  வெளியே
பசிக்கழும் குழந்தை
பார்த்துக்கொண்டே 
விழுங்கிய உணவு 
தொண்டையில் முள்ளாய் ...!

*****************************
பால பாடம்
உன் முடி 
சாமிக்கு என்றதும் 
என் முடி சாமிக்கு 
எப்படி பத்தும்
 கேட்ட 
மழலை 
 ஊமையாக்கி
கற்றுக்கொடுத்தது
ப(பா )ல பாடம்..
**********************

அம்மாவின்  சூடு
தரும் வலியை விட
அப்பாவின் சுடுசொல்
தரும் வலி அதிகம் 
*********************

பூமி பொங்கி சுட்டது 
வானம் கண்ணீர் விட்டது
மழை..
*********
காதலை தெரிவிக்க
ஆவிபிரித்து 
தூது அனுப்பியது கடல்
அழகில்லை எனவானம் 
சொன்னதை 
சொல்லி அழுது 
மறித்து விழுந்தது 
மழையாக....
******************
கீழே விழும் பொழுது
அழுதபடியே விழுந்த மழையை
ஆறுதல் படுத்தியது கடல்
நிச்சயம் உன்னை ஒருநாள்
உயரத்தில் ஏற்றுவேன் என்று..
*****************************************  
கருப்பு அழுக்கு என 
விரட்டிவிட்டது வானம் 
பொங்கி அழுதது மேகம் 
"மழை"
*********
இறுக்கிப் பிடித்து 
இறைஞ்சுகிறாய்
போனால் போகட்டும் என 
விருந்தளிக்கிறேன்
"பசி"


மிரட்டல்இரவில் வந்து
சாமி வயிற்றைத்
 தடவும்

கொட்டை முழுங்கினால்
வயிற்றில் 
மரம் முளைக்கும்

இடது கையூன்றி 
சாப்பிட்டால்
உணவு தரைக்கே 
உனக்கில்லை 

அதோ வரான்
மூணு கண்ணன் 
உறங்காத கண்களை நோண்ட
என்றதும் 
தாயை 
இறுக அணைக்கும் 
குழந்தை 
அறியுமோ
இவை யாவும்
பொய்யென !

பெருமூச்சு...3!

என் கற்பனைக்காதலனுக்குச் சமர்ப்பணம் 
உன்னைத் தாங்குவதை விட
உன் காதலைத் தாங்குவது 
மிக பாரமாக இருக்கின்றது
நாளுக்கு நாள் 
கூடிக்கொண்டே செல்வதால் ..
**********************************
ஓராயிரம் வார்த்தைகளால்
சொல்ல முடியாததை
ஒற்றை விரலால்
கூந்தல் ஒதுக்கி
கன்னம் ஏந்தி 
நெற்றி அழுந்த 
நீ தந்த முத்தம்
சொல்லி விடுகின்றது
ஒட்டுமொத்த காதலையும்..
*****************************
"அசடாகவே"
இருக்க ஆசைப்படுகிறேன்
என் தலை குட்டி 
மூக்கை ஆட்டி 
நீ சொல்கின்ற அழகிற்காகவே!
**********************************
ஒரு கையால்
இடைவளைத்து
மறுகையால் தாடை நிமிர்த்தி
"பேசு"எனக் கெ(கொ)ஞ்சுகிறாய் 
உன் அருகாமையில்
நான் பேச்சிழந்ததை அறியாமல் !
*********************************
பின்னால் தலை சாய்த்து
நீ சிரிக்கின்ற 
அழகின் முன்னால்
என் மனம்
மண்டியிட்டு நிற்கின்றது! 
**********************************
நீ சொல்லிய 
வார்த்தைகளை விட 
சொல்லாமல் விட்ட 
வார்த்தைகளே 
தவிப்பை ஏற்படுத்துகின்றன
******************************
உன் மரணத்தின் 
பின்னே என் மரணம் 
நிகழ வேண்டும்
எனை இழந்த 
வேதனையில் நீ 
எப்படித்தவிப்பாயோ 
என யோசிக்கவே 
பயம் கொள்ளும் சுயநலவாதி நான்!
************************************************
என் கவலைகள் காத்திருக்கின்றன
உன் மார்பினில் மடிவதற்காக...
என் கனவுகள் காத்திருக்கின்றன
உன் விழிகளில் விரிவதற்காக...!
********************************************
உன் எண்ணங்கள் கொடுத்த 
வண்ணங்கள் தான்
என் கன்னச்சிவப்பும்
இதழ் வெளுப்பும் !
*************************
என் கைகளையே 
மாலையாக கோர்க்கவிட்டு
அழகு பார்க்கிறேன் 
என் கடவுள் 
நீ என்பதால் !
*******************
என் கைகள்
உன் கழுத்தை சுற்ற
 மார்போடு அணைத்து
உன்னிரு கைகளால்
அரண் அமைத்து 
எனைக்காப்பதில்
என் "தகப்பன் சாமி"யடா நீ !
****************************************
எனக்கும் முன்னான 
உனது நேசங்கள் தேவையில்லை 
ஆனால் நானே உனது 
இறுதி நேசிப்பு என்ற 
உத்தரவாதம் மட்டும் கொடு...
**************************************
அத்துமீறி அனைத்தையும் 
ஆக்கிரமிக்கும் 
உன்னை ஏதும் செய்ய விரும்பாது
வாளாவிருக்கின்றேன்...
************************************
சமாதானத்தை யார் முன்வைப்பது என்றே
முன்வைக்கப்படாமல் இருக்கின்றன வார்த்தைகள்
ஊடல் ...
***********
இனி எனக்குப்பின்
உன் மனதில் இடம் பிடிப்பவள்
நம் மகளாகவே இருக்கட்டும்.....
*****************************************
உன் நினைவுகள் மட்டும்
இல்லையெனில் என்றோ
மரித்திருப்பேன் 
என்னை சுவாசிக்க வைப்பவை 
அவை மட்டுமே !
************************
உன் மென் முத்தங்கள் 
ஒவ்வொன்றும் 
என் வலிக்கான 
ஒத்தடங்கள்
*************
 உன் முத்தங்கள்
மட்டும் இல்லையெனில்
தீக்காயங்களால்
வெந்தே இறந்திருப்பேன்..!
*************************************
கண்கள் அலைபாய 
காத்திருக்கின்றேன்
காதலை ஒருமுறையேனும் சொல்வாயென..!
***************************************************
சொன்னாதான் காதலா
என்கிறாய்
என் உயிர்
வளர 
உன் வார்த்தைகள்
ஊற்று 
********
உனைத்தொடுவது திட்டமிடாமல் நடந்ததாய்க்
காட்டிக்கொள்ள பலமுறை
திட்டமிடுகிறேன் நான்...
*************************
கவிதைகள் எழுதுவதால் 
காதலிக்கின்றாயா என்கிறார்கள்
எப்படி சொல்வேன் முகமறியாமல் காதலிக்கும் 
என் வேதனையை
*******************
அமாவாசையும் பௌர்ணமியும் 
தள்ளி நின்று பார்ப்பவர்களுக்குத்தான்
 நிலவிற்கில்லை 
என்னை தள்ளிநின்று பார்த்தால்
 நானும் அப்படித்தான் .. 
உள்ளிருந்து பார்த்தால் 
என்றும் உன்னவள் தான்...
**********************************
தேடாதே என் வெட்கங்களை
உன் கேலி சிரிப்புகள் விரட்டி சென்றதால் 
வெட்கப்பட்டு உன் முதுகின் பின்னால் 
ஒளிந்து கொண்டு நிற்கின்றன...
*****************************************
அதிகம் பேசும் தருணங்களைவிட
உன்மௌனம்கொல்லும் 
கணங்கள் வேதனை.ஊடலை முடிக்கும் 
ஒரு "ம்" மென்ற வார்த்தை தரும் இனிமை 
**********************************************************
எத்தனை பேர் சுற்றி இருந்தாலும் 
அம்மாவை மட்டுமே 
தேடும் சிசுவைப்போல 
உன்னையே தேடும் என் மனது
*******************************************
 என்னோடுதானிருக்கின்றாய் 
ஆனாலும் முகவரியின்றி
தவிக்கவே செய்கின்றேன் 
எங்கிருக்கிறாய் என அறியாமல்
*****************************************
வெறுமை அணைக்கும் 
தனிமை பொழுதுகளை விட 
உன் நினைவுகள் அணைக்கும் 
ஊடல் பொழுதுகள் மேல்
ஊடல் செய்...
****************** 
தயவு செய்து நினைவுகளிலாவது 
என்னுடன் இரு
என்றும் நான் நிம்மதியாக உறங்க 
**********************************************
நான் உன்னவள் என்பதைக்காட்டிலும்
நீ என்னவன் என்பதே என்னை இறுமாப்பு 
கொள்ள வைக்கின்றது 
************************
என் வேலைகளில் நான் செய்யும் தவறுகள் 
அனைத்திற்கும் நீயே 
பொறுப்பேற்றுக் கொள் 
உள்ளிருந்து கண்சிமிட்டி 
என்னை தடுத்தாட் கொள்(ல்)பவன் நீ..
************************************************
கவருவதற்கென்று எதையும் நீ 
செய்யாததுதான் 
என்னைக் கவர்ந்தது
**************************
வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள 
வார்த்தைகள் தேவைப்பட வில்லை
எனக்கு சட்டென்று இழுத்து அணைத்து 
முத்தமிட்டுவிட்ட பொழுது 
************************************
நம் இருவரின் மௌனம் 
தீர்க்கக் காத்திருக்கும் 
வார்த்தைகளை விழுங்கி நிற்கின்றது காதல்
**********************************************************
உன்னவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்
என சொல் என கேட்கிறார்கள் 
தனித்தனியே ஒவ்வொன்றாக சொல்ல பொறுமையில்லை 
மொத்தமாக நீயே வந்துவிடு 
சத்தமிட்டு சொல்கிறேன் நீதான் அவனென்று..
***********************************************************
நலமில்லாமல் போகும் நாட்களில்
உன் அருகாமைக்காகவே 
அடிக்கடி நலமில்லாமல் போக 
வேண்டிக்கொள்கிறேன் 
அடிக்க வராதே...
 ***************
எதைப்பற்றி எழுத நினைத்தாலும் 
எழுதமுடியாமல் அவற்றை 
காலியாக்கிவிடுகிறாய்
நீ நினைவுக்குள் புகுந்து
******************************
உனக்குப் பிடிக்காத எனக்கு பிடித்தவற்றை 
நீ மதித்தது நமக்குள் பிடித்துப் போனதன் 
ரகசியமாயிற்று  
*************** 
உனக்கான கவிதைகள் என்னைப்பார்த்து 
சிரிக்கவே செய்கின்றன 
எத்தனை நாட்கள் 
இப்படி தனியே புலம்பிக்கொண்டே 
இருக்க போகின்றாய் என்று..
**************************************
எத்தனை இருந்தாலும் எதுவுமே  இல்லை 
என உணரவைக்கின்றது 
நீயில்லாத் தனிமை.....
*******************************
ஊடலில் உன் கவனமான தவிர்ப்புகளை
தவிப்புகளோடு கவனிக்கிறேன்
என் மௌனங்கள் மொழிபெயர்க்கும்
என் வேதனையை
************************
தூக்கத்தில் ஆதரவிற்கு அலையும் 
குழந்தையின் கை போல 
பர பரவென எப்பொழுதும் 
உன்னையே தேடி அலையும் மனது
**********************************************