Thursday, April 21, 2011

ரமணிச்சந்திரன் !

கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்.எனது மனம் கவர்ந்த எழுத்தாளர்.ஏன் நம்மூர்ப் பெண்களின் அனேக விருப்ப எழுத்தாளராகவும் இருக்கக்கூடும்.அப்படி என்ன இருக்கின்றது அந்த எழுத்துக்களில்?..
கண்டிப்பாக இருக்கின்றது அது பெண்களே ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் .விரசமாக ஆபாசமாக வெறும் கவர்ச்சிக்காக இன்றி காதலுடன் இணைந்த காமம் எவ்வளவு இனிக்கும் என்பதை ஒரு பெண்ணின் பார்வையிலேயே சொல்வதால்.ஏதோ பொழுது போகாமல் இருந்த எனக்கு ஒரு அக்கா தெரியாத்தனமாக அறிமுகப்படுத்தி விட்டார்கள்.பொழுது போக்கிற்காக படிக்க ஆரம்பித்தவள் பொழுதிற்கும் படிக்க ஆரம்பித்தேன்.தேடித் தேடி பிடித்து ரசிக்க ஆரம்பித்தேன். காரணம் அனைத்தும் காதல் கதைகள்.மேலும் குடும்பத்தில் ஈகோவினால் என்ன சிக்கல்கள் வரக்கூடும் அதை எப்படி கதாநாயகி எதிர்கொள்கிறாள் என்று மிக இயல்பாக சொல்லி இருப்பார்.கதாநாயகி ,கதாநாயகன் அனைத்துக் கதைகளிலும் ஒரே குணம் கொண்டவர்களாகவே இருப்பர்.இதைப் பெரிய குறையாகப் பிறர் சொல்வதுண்டு.(அதைப் பற்றி எல்லாம் கவலைப் படுவதில்லை :) )எனது கற்பனைக்காதலனை இந்த கதைகளில் கண்டிருக்கிறேன்.என் கற்பனையை இந்த கதைகளிலே வருகின்ற நாயகனிடமிருந்து மேலும் மெருகூட்டி இருக்கின்றேன்.அதனால்தானோ அதீத ஈடுபாடு(இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியம்.ரமணி சந்திரன் கதை படித்தவர்களுக்கு என் கிறுக்கல்களில் வருகின்ற நாயகனின் மேனரிசம் மற்றும் குணாதிசயங்கள் பரிச்சயமானதாக இருக்கும்.).எப்பொழுதும் ரமணிச்சந்திரனின் எழுத்து நடை  செந்தமிழ் நடையில் தான் இருக்கும்.பேச்சு வழக்கில் இருக்காது.இருந்தாலும் கதையின் உட்பொருளில் தோன்றிவிடும் ஈடுபாடு காரணமாக அது ஒரு குறையாக தோன்றாது.காதலர்களுக்கு இடையே வார்த்தைக்கு வார்த்தை விளையாடுதலும் ,செல்லப்பெயர்  வைத்து அழைத்தலும் என்று குறும்புகளுக்கும் குறைவு இருக்காது.அடிக்கடி பழமொழி பயன்படுத்துவார்கள்.அதே போல நாயகன்/நாயகியின்  தொழிலை பற்றி இன்ன தொழில் என்று மேலோட்டமாக சொல்லாமல் அதை ஆழமாக விஷய நுணுக்கத்தோடு விவரிப்பார்.ஆன்ட்டி ஹீரோ கதைகள் தான் என்னை அதிகம் கவர்ந்தவை.பால் நிலா,தொடுகோடுகள்,என் கண்ணிற் பாவையன்றோ,வளையோசை,மைவிழி மயக்கம் என்று மனதில் நீங்காமல் இடம் பெற்ற கதைகள் இவை.நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட கதைகள் படித்திருக்கிறேன்.ஒரே மாதிரியான காட்சி அமைப்பு,கதையமைப்பு என வந்தாலும் கூட ஒரு தடவை கூட சலித்ததே இல்லை.வாசகர்களிடம் காம உணர்வை தூண்டுவதற்காகவே என்று ஆபாசமாக எழுதி பணம் பார்ப்பவர் பலர்.ஆனால் காமத்தை காதல் ரசத்தோடு ஒரு அன்பான இரு உள்ளங்களுக்கிடையே யான அன்னியோன்யத்தொடு சொல்கின்ற பொழுது அது தனி அழகு பெறுகின்றது.பெரும்பாலான பெண்களின் ரசனைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மேலும் முடிவு எப்பொழுதும் எனக்கு பிடித்தமாதிரி சுபமாகவே இருப்பதால் இன்னமும் என்னை வசீகரிக்கின்றன அக்கதைகள்.ஏதோ படித்தோம் அந்த நேரத்தில் மனம் சற்று ஆறுதலாகவும் அமைதியாகவும் இருக்கும் என்ற என்ணத்தை ஆழமாக பதியவைத்துவிட்டன.
உயரமாகவும் மாநிறமாகவும் மட்டுமே கதாநாயகனைக் காண்பிப்பார் எப்பொழுதும்.
ஒருமுறையேனும் இப்படி ஒரு கதாநாயகனை அணு அணுவாக ரசித்து படைத்தது எப்படி நிஜமாக அப்படி ஒரு உருவம் எழுத்தாளரின் அருகில் உலா வருகின்றதா என்று பார்க்கவேண்டும் என்ற உந்துதல் உண்டு.

ரமணிச்சந்திரன் -என்றும் குளிர் நிலவு 

6 comments:

sathya said...

really i too enjoyed her stories lot.you can upload her stories also here

ப்ரியா கதிரவன் said...

ரமணிச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீயா நானா பார்த்தீங்களா?

உமா கிருஷ்ணமூர்த்தி said...

பார்க்கத் தவறி விட்டேன் தோழி :((

ப்ரியா கதிரவன் said...

program is available here:
http://tamil.techsatish.net/file/neeya-naana-120/

உமா கிருஷ்ணமூர்த்தி said...

thanks for the link:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:))
Dont make fun of me...if i say, i peep into ramani chandran's stories, when friends are not around in the room:))

ஒளிச்சி ஒளிச்சித் தான் படிப்பேன் = பால் நிலாவை...பல முறை!
பசங்க கிட்ட மாட்டிக்கிட்டு...ஓட்டி இருக்காங்க:)

இருந்தாலும் படிப்பது ஏன்-ன்னா...இந்த ஒரே விடயத்துக்குத் தான்...
=
காதலர்களுக்கு இடையே வார்த்தை விளையாட்டு, சீண்டல், கொஞ்சல், சிணுங்கல் எல்லாம் செயற்கையா இல்லாம இயற்கையா இருக்குமா? நாமளும் இப்படித் தான் செய்யணும்-ன்னு...ன்னு...மனசுக்குள்ளாற கற்பனை பண்ணிக்க ரொம்பப் பிடிக்கும்:)))