Sunday, April 10, 2011

பெண்கள் ரசிக்கும் ஆண்களின் அழகு

சில இனிய கற்பனைகளும் கலந்தே :) 


1. இலகுவாக பெண்ணை நடக்கவிட்டு அத்தனை சுமையையும் தானே சுமந்து வரும் பெருந்தன்மை 
2.திட்டிக்கொண்டே என்றாலும் கூடவே ஷாப்பிங் செய்ய விட்டு தனியே புலம்பும் மனோபாவம் 
3.வியர்வை மழையில் நனைந்துகொண்டு வேலை செய்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் பின்னாலிருந்து அணைக்கும் கணவன் தனம் 
4.புது உறவுகளின் நடுவே மலங்க விழிக்கும் மனைவியை சற்றே தோள் சாய்த்து அரவணைத்து ஆறுதல் தரும் தோழன் 
5. தாமதத்திற்கு சொல்லும் சமாதானபொய்களும் கொஞ்சலும் 
6.சினிமா வசனம் போல கண்ணே மணியே அழைப்பின்றி உரிமையோடு அழைக்கும் "டி"
7.கஷ்டப்பட்டு திறக்க முயற்சித்தும் முடியாமல் போன மூடியை உடனே வந்து திறந்து கொடுக்கும் பலசாலித்தனம்
8.மனைவியை எவனோ ஒருவன் வம்பு செய்யும் பொழுது ஓமக்குச்சி போல இருந்தாலும் ரித்திக் ரோஷன் ரேஞ்சிற்கு பொங்கும் ரோஷம் 

9 . எங்கேயோ பார்த்து பேசி ஊடல்களை முடிவுக்கு கொண்டு வந்து செயலிழக்கும் ஈகோ 
10 .கூடல் பொழுதுகளில் தத்துபித்துவென உளறிவிட்டு திரும்பி கேட்கையில் சொல்ல தெரியாமல் விழிக்கும் அப்பாவித்தனம்
11 .படபட வென பேசுகையில் கவனிக்காததை கவனிப்பதாக வெளிப்படுத்த சொல்லும் "ம்ம்"

12 .கர்ப்பிணி மனைவியையும் சேர்த்தே நெஞ்சில் சுமக்கும் தாயுமானவன் குணம் 

13.மனைவியிடம் கூட விட்டுக் கொடுக்காத திமிரை ஒட்டுமொத்தமாக மகளிடம் மண்டியிட்டு ரசிக்கும் தந்தையானவன்

14 .வேலைக்கு நடுவில் அழைத்துப் பேசித் தனிமையை இனிமை கலந்த நினைவுகளாக்கும் அன்பு 
15. நலமில்லாத நாட்களில் தன்  அருகாமையால் உணரவைக்கும் கதகதப்பு
16.உள்ளங்கை ரேகைகளை மாற்றிக் கொண்டே பேசி பேச்சிழக்க வைக்கும் வித்தை :)
17. தொணதொணக்கும் நேரமெல்லாம் விட்டுவிட்டு எதிர்பாராவிதமாய் முக்கிய தருணங்களில் அழுத்தமாய்ச் சொல்லும் ஐ லவ் யூ 
18.அருகாமை வேண்டும் தருணங்களில் திக்குமுக்காட வைக்கும் எதிர்பாராத தரிசனம் :)
  19.தனியே கலாட்டாவும் பொதுவில் விட்டுக் கொடுக்காத பண்பும் 
 
20. இன்னும்ம்ம்ம் நிறைய்ய்ய :) இது போல்  படபடவென பேசி பெண்ணைப் போல் வார்த்தைகளில் அன்பை வெளிப்படுத்தாது ஓர் அணைப்பில் ஒரே முத்தத்தில் அன்பை மொத்தமாய்க் காட்டிவிடும் வேகம் :) 

4 comments:

Santhosh said...

செம & Nice info :))

அன்பு said...

அருமையான பதிவு :)

அன்பு said...

அருமையான பதிவு... :)

தட்சிணாமூர்த்தி said...

அழகான பதிவு....ரசிக்கும் வகையில்....வாழ்த்துகள்........
அன்புடன்
@rdhakshina