Tuesday, March 8, 2011

எனக்கு பிடித்த பாடல்கள்


"அச்சமில்லை அச்சமில்லை"படத்தில் கண்ணில் தாகம் தீருமோ"என்ற பாடல் மிக சமீபத்தில் ரசித்த பாடல்.பாடலும் சரி படமும் சரி அதிகம் பிரபலம் ஆகவில்லை.ஆனால் நிச்சயம் சௌமியாவின் குரல் சொல்லும் சோகம் உங்கள் கண்களிலே கண்ணீரை வரவழைக்கும்.எத்தனை உறவுகள் இருப்பினும் அனைவரிடமும் நம் மனத்தை கொட்டமுடியாது.நண்பரிடம் மட்டுமே நம் மனம் விட்டு அனைத்தையும் சொல்லமுடியும்.அந்த பகிர்தலுக்கு இருக்கின்ற சுகமே அலாதி.கணவனை பிரிந்திருக்கும் சோகத்தை கணவனையே நண்பனாக தரித்து சொல்லும் பொழுது சோகத்தை முழுவதும் பகிர்ந்தது போலும் ஆச்சு.நம் ஏக்கம் தவிப்பின் வீரியத்தை கணவனிடம் புரியவைத்தது போலும் ஆச்சு.அப்படி ஒரு தருணத்தை தான் இந்த பாடல் சொல்ல விழைகின்றது.

"கண்ணில் தாகம் தீருமோ மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ மித்ரா மித்ரா
கண்ணில் தாகம் தீருமோ மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ மித்ரா மித்ரா

கோபங்கள் பேசும் போது வேறெதைக்கூறும்
ப்ரேமைகள் பேசும் போது மோகம் கூறும்
மௌனம் தான் பாடலா வலி எல்லாம் தரும் ஊடலா

என் மீதான கோபத்தை ஒதுக்கி விட்டு நம் மகிழ்வுடன் சுகித்திருந்த நாட்களை நினைவு கூறு நண்பா அது ஆயிரம் கதை சொல்லும்.
 இது போதும் இது போதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும் ஒரு கூடல் செய்வாய் நண்பா

எங்கேனும் விரசம் தெரிகின்றதா அவள் அழைப்பதில்.மோகம் இரு உள்ளங்கள் இணைவதற்கான மேடை.அது ஒரு வித த்யானம்.மன அழுத்தத்தை விடுவிப்பதற்கான கருவி.அதனால் தான் இன்றளவும் மனித இனத்திற்கு மோகம் குறையவில்லை.

"வீட்டின் தனிமையிலே தீண்டி என்னை சுகிப்பவனே
கொஞ்சம் விலகி விட்டால் முத்தம் பல பதிப்பவனே
சோலை பூவெல்லாம் ஆடையாய் சூடி பார்ப்பவன்
மாமழை நேரங்கள் ஈரமாய் என்னை சேர்ப்பவன்
நீயா நீயா தனிமையில் செல்கிறாய்
வனம் கலைந்து சிரித்திட
"

அன்னியோன்யம் கொண்ட தம்பதிகளின் இனிமையான நினைவு நாடாக்கள்.இவ்வளவு ஆசையுடையவனா என்னை பிரிந்துசெல்கிறான் என்ற வேதனையை மிக அழகான வரிகளில் பதிவு செய்து இருக்கின்றார் கவிஞர்.
"வீட்டின் தனிமையிலே ஏதோ ஒரு பெரு நெருப்பு 
பூவின் அசைவினிலே ஏதோ ஒரு படபடப்பு
சொல்லும் வார்த்தைகள் காற்றிலே தேய்ந்து போகுதே
சினேகம் வேறில்லை உன்னையே நெஞ்சம் வேண்டுதே
கண்கள் தீண்டும் வலிகளும் போதுமே
இனி விடியல் இனித்திட 

பிரிவின் வலி இவ்வளவு துயரமானதா?

"நெஞ்சில் அச்சம் பொங்குதே ஏனோ ஏனோ
கண்ணீர் மிச்சம் தங்குதே ஏனோ ஏனோ"
இதற்கு மேல் பாடலை கேட்டால் நான் உணர்ந்த அனைத்தும் நீங்களும் உணருவீர்கள்.

1 comment:

jroldmonk said...

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் 'அருமை'.