Thursday, March 3, 2011

எனக்கு பிடித்த பாடல்கள்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் "தாய் மூகாம்பிகை " படத்தில் வரும் ஜனனி ஜனனி பாடல்.இளையராஜாவின் இன்னிசையில் ஒரு ஆன்மீக ஆனந்தம் என்றே சொல்லலாம்.அந்த பாடலில் வருகின்ற முதியவர் பெயரெல்லாம் தெரியாது.சாட்சாத் அந்த ஆதி சங்கரரே அப்படி அமர்ந்து இருப்பது போலவே தோன்றுகிறது.அவர் கண்களில் அம்பிகையை காண்கின்ற பொழுது வருகின்ற ஒளி அம்மனை நினைத்து உருகி பாடுகின்ற விதம் ஒரு பாடலுக்கு பல லொகேஷன் தேடுகின்ற காலத்தில் ஒரே இடத்தில அமர்ந்து கொண்டு காட்சியாக்கப்பட்ட விதம் என்று ரசிக்கும்படியான அத்தனை அம்சங்கள் இருக்கின்றன இப்பாடலில்.நிமிர்ந்து அமர்ந்து கண்களை மூடி அவர் தியானித்து மந்திரத்தை உச்சரிக்கின்ற அந்த நொடி முதல் அந்த ஆழ்ந்த இசையமுதில் நாமும் மூழ்கித்தான் போகின்றோம்.
மிக மெதுவாக ஆரம்பித்து இறுதியில் அப்படியே சொக்க வைக்கின்ற மகத்தான சக்தி இந்த இசைக்கு.மந்திரத்தை தொடர்ந்து "ஜனனி ஜனனி "என்று ஆரம்பிக்கும் பாருங்கள் 
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ 
ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ 
ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ ..
ஒரு மான் மழுவும் சிறு பூந்திரையும் 
சடைவார் குழழும் இடை வாகனமும் 
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே 
நின்ற நாயகியே இடபாகத்திலே 
அப்படியே இறைவனை மனக்கண்ணில் கொண்டு வந்து விடுவார்
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ 
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ..
அடுத்து வரும் அந்த புல்லாங்குழலுக்கு அப்படியே அம்மன் மயங்கி தலையாட்டுவது நம் மனதை பிரதிபலிப்பது போன்று இருக்கும்.
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் 
சன்மார்க்கங்களும் சப்த கீதங்களும் 
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் 
தொழும் பூங்கழழே மலை மாமகளே 
தொழும் பூங்கழழே மலை மாமகளே ..
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ ..
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ ..
அவரின் மார்பில் இருந்து கண்களுக்கு கொண்டு செல்வார்கள்.சக்தியானவள் நெஞ்சிலே உறைந்திருப்பதை அப்படியே கண்களுக்கு கொண்டு வந்து ரசித்து லயித்து கிடப்பார்.அப்பப்பா 
நமக்கே தெய்வ தரிசனம் கிட்டியது போன்ற ஒரு உணர்வு.
அவர் பாடுகின்ற பொழுது முப்பெருந்தேவியரும் இணர்ந்து நின்று ரசிப்பார்கள்.அந்த பெரியவரின் பரவசம் நம்மையும் ஆட்கொள்ளும் கொஞ்சம் கண்களை மூடி கொண்டு கேட்டால் 
சொர்ண ரேகையுடன் ஸ்வயம் ஆகி வந்த 
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே 
சொர்ண ரேகையுடன் ஸ்வயம் ஆகி வந்த 
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே ..
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் 
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள் 
ல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் 
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள் 
சக்தி பீடமும் நீ...
ஆ..ஆ...ஆ..ஆஅ...ஆ..
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ 
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..ஜனனி ஜனனி..ஜனனி..

அப்படியே கைகள் தொழுது  சிரம் தாழ்த்தி வணங்கி கண்களில் நீர் மல்க திறக்கும் பொழுது ...கண் முன்னே ஜனனி நிற்கின்றாள்.
வரும் காலத்தில் ஜனனி என்ற பெயரில் ஒரு பெண் பிரபலமாகவும் கூடும்.
அவள் என் மகளாகவும் இருக்க கூடும்.



No comments: