Saturday, December 1, 2012

எனக்குப் பிடித்த டிவிட்டர்கள்!....1

டிவிட்டரில் இயங்க ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றன.அன்று முதல் இன்று வரை என்னைக் கவர்ந்த நபர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று நெடு நாள் விருப்பம் இருந்தது.போன வருடமே பாதி எழுதி வைத்தே இருந்தேன்.ஆனால் இன்று பலரது பிம்பம் உடைந்ததில் சில மாற்றங்களோடு மீண்டும் புதியதாக :) இன்று வரை அப்படி பிம்பம் எதுவும் உடையாத நபர்களைப் பற்றி மட்டும் எழுத விழைகிறேன்.இந்த ஆண்டு கவர்ந்தவர்கள் அடுத்த ஆண்டிலும் அப்படியே தொடர்ந்தால் அவர்களைப் பற்றி அடுத்த வருடம் அவசியம் எழுதுவேன்.நான் இப்படி ஒரு பதிவை எழுதுவேன் என நான் இங்கே குறிப்பிடப் போகும் எந்த நபர்களுக்கும் தெரியாது.நான் குறிப்பிடவில்லை என்பதால் எவருக்கும் எந்த நஷ்டமும் வரப் போவதில்லை.நான் குறிப்பிட்ட பிறகே பிரபலம் ஆக வேண்டிய அவசியமும் இந்த நபர்களுக்கு இல்லை.அதிக பட்சமாய் ஒரு புன்னகை தவிர வேறு எந்த விளம்பரமும் எனக்கு இவர்கள் இதற்கு முன்பும் பின்பும் கொடுக்கப் போவதில்லை .அப்படியே கொடுத்தாலும் அது எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை.இது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே!இங்கே யார் சிறந்தவர்கள் என்ற பட்டியலில்லை எனக்குப் பிடித்தவர்கள் மட்டுமே.பார்வைகள் மாறுபடும்.



என்.சொக்கன் :
      இங்க யாரை மிகவும் பிடிக்கும் எனக் கேட்டால் சட்டென்று இவரைத் தான் சொல்வேன்.ஆரம்பத்தில் அவ்வளவாக ஈர்த்ததில்லை..ஏதோ DP வித்தியாசமாக ஈர்க்கவும் பின்தொடர்ந்தேன் அவ்வளவே.

இவர் எழுத்தாளர் என்பதே தெரியாது தெரிந்திருந்தாலும் இயல்பாய்ப்  பேசியே இருக்க மாட்டேன்.ஏனோ எழுத்தாளர்களிடம் இருந்து ஓர் ஒதுக்கம்.இவரும் "காட்டிக்"கொண்டதே இல்லை.நூறு புத்தகங்கள் எழுதியவர் எனத் தெரிந்த பொழுது ஆச்சர்யம்.இருந்தும் வெகு இயல்பாக எப்படி இவரால் பழக முடிகின்றது என.ரைட்டர் என அடைமொழி விரும்பாதவர்.ஆரம்பத்தில் எல்லாரும் அரசியல்,சமூகம் என தன் கோபங்களைப் பதிவு செய்யும் பொழுது எப்படி இவரால் மட்டும் எதைப் பற்றியும் கவலையோ அக்கறையோ இல்லாமல் இருப்பது வித்தியாசமாய்த் தோன்றியிருக்கின்றது..போகப் போக இவர்தான் நார்மல் பிறர் தங்களை வித்தியாசமாய்க் காட்டிக் கொள்ள ஏதேதோ செய்கிறார்கள் இப்படி ஒதுங்கியே இருப்பது எவ்வளவு உத்தமம் என பல நிகழ்வுகளுக்குப் பின்பே புரிந்தது.ஒரு யதார்த்த மனிதர் ட்விட்டர் இல்லாத இடத்தில எப்படி இருப்பாரோ அதே போல டிவிட்டரிலும் இருக்கிறார்.எதிலும் தலையிடுவதே கிடையாது.இவரும் கானா பிரபாவும் இசை பற்றி சிலாகிப்பதை வேடிக்கை பார்ப்பதே அலாதி சுகமாக இருந்தது.பிடித்த இசை அதை இசைத்தவர் எழுதியவர் அந்த வரிகளுக்கான விளக்கம் என்று தீர ஆராய்ந்து ரசித்துக் கொண்டிருப்பார் (அது போன்ற ஆராய்ச்சி நான் செய்ததே இல்லை)எள்ளுப்பூ நாசிப் பத்தி பேசிப் பேசித் தீராது (செண்பகமே செண்பகமே பாடல்)அந்த எள்ளுப்பூ எப்படி இருக்கும் என ஆராய்ச்சி செய்து பூ படம் வெளியிட்டார்.எந்த விசயமும் தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவு கட்டிவிட்டால் இறுதிவரை இறங்கிப் பார்த்து விடுவார்.ஜிவிபி ,தேவி ஸ்ரீ பிரசாத் இசை அறவே பிடிக்காது.அண்ணல் என அழைத்தால் பிடிக்காது.சேத்தன் பகத் பிடிக்காது. மனைவியார் என்று மரியாதையுடன் விஷயம் பகிர்வது பிடிக்கும் இவரது மகள் நங்கை ட்வீட்ஸ் யாவும் குழந்தையின் இயல்பு என்னவோ அதை அப்படியே உண்மையாகப் பிரதிபலிக்கும்

ஆரம்ப காலத்தில் ஜாலியான பாடல் டேக் போட்டு ஒட்டுமொத்த டிவிட்டர்களையும் ஒன்றாக்கி TL கலகலப்பாகி விடுவார்.முதன்முதலில் நான் கலந்துகொண்டது ஒவ்வொரு ஹான்டிலிலும் ஆரம்பிக்கும் பாடல்கள்( உதா :மழை செய்யும் @kolaaru)ட்விட்டரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பவர்களில் இவரும் ஒருவர்.எத்தனை நாள் கழித்து வந்தாலும் லிஸ்ட் இவரது டிவிட்டுகள் தேடித் போய் படிப்பேன்  இவரை பின்தொடராவிடில் நிச்சயம் நஷ்டம் நமக்குத் தான்.அவ்வளவு பகிர்வுகள் ரசிக்க இருக்கும்.தன் மகள்கள் பற்றி எழுதுவதெல்லாம் வெற்றுப் பெருமை RT காக அன்றி உள்ளார்ந்த பூரிப்பும் குழந்தைகள் உலகத்தை அறியும் ஆவலுடனும் இருக்கும்.இளையராஜா ,இனிப்பு இவரைப் பேச வைக்க உதவும் இரு பெரும் சக்திகள்.டிவிட்டரே தீப்பற்றி எரிந்தாலும் கண்டே கொள்ளாதவர் ராஜா பற்றி தவறாகப் பேசுவதாய் மனதில் பட்டால் பொங்கி எழுந்து விடுவார்.அதே சமயம் நேர்மையான இரசிகர்.ராஜா இசை பிடிக்கும் அளவுக்கு அவர் பேட்டி பிடிக்காது. 

நங்கையுடனான இவர் உரையாடல் பார்க்கும் பொழுதெல்லாம் ஏன் நம் தந்தை இது போல பழகவில்லை என்ற ஏக்கம் வரும்.ஒரு தந்தையுமானவராகவும் இவரைப் பிடிக்கும்.இவருடைய " மனம் போன போக்கில் " blog தனியாய்ப் புத்தகமாய் வெளிவந்தால் என்ன விலை கொடுத்தேனும் வாங்கிவிடுவேன்.அவ்வளவு சுவராசியங்கள் பொதிந்திருக்கின்றன.புரியாத வார்த்தைகளை இட்டு நிரப்பி இலக்கியவாதித்தனம் செய்து தன் திறமையை நிரூபிக்கிறேன் பேர்வழி என்று ஒட்ட விடாமல் செய்பவர்களுக்கு மத்தியில் சாமான்யர்களை வெகுவாகக் கவர்ந்து விடும் சக்தி கொண்ட எழுத்துகள். உயர்வு நவிற்சி அணி,தற் குறிப்பேற்ற அணி க்கு இவர் கொடுத்த எளிய விளக்கம் இன்னும் மனதில்.இவருடைய பதிவு எவ்வளவு நீளமாக இருந்தாலும் நம்பி முழுக்க படிக்கலாம் எனக்கு ஒரு முறை கூட போரடித்ததே இல்லைஇவருக்கும் டிபிகேடிக்கும் நடந்த கிரந்தம் தவிர் சூடான விவாதம் நான் ரசித்ததில் ஒன்று.பெயர்ச்சொல்லில் கிரந்தம் தவிர்ப்பதை அறவே பிடிக்காது.அந்த விவாதம் முன்பும் பின்பும் இருவரும் சகஜமாகப் பேசிக் கொண்டு பார்த்திருக்கிறேன்.(இப்போ வேறு எவர் விவாதமும் இந்த அளவுக்கு ஆரோக்கியமானதாக இல்லை)எவரையும் காயப்படுத்தி நான் பார்த்ததே இல்லை.அப்படி எவரேனும் உணர்ந்தால் டைம் லைனிலேயே மன்னிப்புக் கேட்டு விடுவார்.உணர்ச்சிகரமான டேக் அல்லது சென்சேஷனல் விஷயம் இவர் போன்ற யதார்த்தவாதிகளை டிவிட்டருக்கு வருவதையே குறைக்க வைத்து விடுகின்றது.(எதிலும் கலந்து கொள்ளாதவர்களைத் திட்டவெனவும்  ஒரு கூட்டம்)பொய்களைப் புகழ்ச்சி என நம்பி RT செய்பவர்களுக்கு மத்தியில் பாராட்டையும் சிறு தயக்கத்தோடு ஏற்றுக் கொள்வார்.  இவர் அடிக்கடி பாடல் கேட்கணும் ன்னு வேண்டிக்குவேன்.பாடல் பிடிச்சிருக்கும் ஆனால் எதனால் பிடிச்ச்சிருக்கு எனச் சொல்லத் தெரியாது,ஆனால் அதில் ரசிக்கத்தக்கதாக இருப்பவற்றை இவர் எடுத்துச் சொல்லும் பொழுது புரியும்:)

யாருக்கோ ட்வீட் போடுவோர்களை unfollow செய்வேன் என இவர் மிரட்டல் விடுத்த பின்பு முடிந்தவரை எதிர்வினை (முதல் வினை அல்ல)ஆற்றுவதை தவிர்த்து விட்டேன்.அப்படியே போட்டாலும் அவர் இல்லாதப்போ தான்:)டிவிட்லான்கர் பத்தி பேசறாங்க  புரியலன்னு இவர் ட்வீட் போட மாயம்ஸ் லிங்க் எடுத்துக் கொடுத்தப்போ மனதிற்குள் சபித்தேன் அவரை:)உம்மைக் கேட்டாங்களா முருகேஷா?:)இவர் ஓ..!என்பதைத் தவிர வேற பதிலளிக்கலை.அத்தனை பேரின் அன்றைய கிண்டலை விட அந்த ஒரு ஓ ..ரொம்ப பாதித்தது.நம் மதிப்பிற்குரியவர்கள் தவறாய் நினைத்திருப்பார்களோ என்ற சிந்தனை எவ்வளவு மண்டைக் காய்ச்சல் தெரியுமா?முதலில் சிறுபிள்ளைத் தனமாக சிலரிடம் விளக்கம் கொடுத்ததுண்டு.இப்பொழுது இல்லை.என் வார்த்தைகள் மட்டும் போதாது புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனமும் அவர்களுக்கு இருந்தால் ஒழிய அது சாத்தியப்படாது என்பதை உணர்ந்து விட்டதால்.திரும்ப இவர் வழக்கம் போல பதில் அளித்துப் பேசும் வரை பதட்டமாகவே தான்இருந்தது 
ஒரு வார்த்தை கூட மிகைப்படுத்தலை.இவரை நெடு நாள் அறிந்தவர்கள் நிச்சயம் நான் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள்.
 வந்தாள் மகாலஷ்மியே
இவருடைய தினம் ஒரு பா ,கம்பராமாயணம் பாட்காஸ்ட்  பாடல்வரிகள் பற்றிய ஆராய்ச்சி அற்புதமான முயற்சிகள் 
பூங்கதவே தாழ் திறவாய் பாடலுக்கு இவரது ரசனையான விமர்சனம் வெகு பிடித்தம் எனக்கு 
வாய்ப்புப் பொறுக்கிகள் 
பாடல் விமர்சனம்  இவர் கை "வண்ணம்"
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் போல இவருடைய முதல் பாராட்டை பொக்கிஷமாய் பாதுகாக்கிறேன் :)





@cheethaa 
நூற்றி நாற்பது கட்டுக்குள் திணறுபவர்கள் ஒரு புறம் இருக்க அதுவே இவருக்கு அதிகம்.short &sweet .எப்பவும் நச் ட்வீட்டுகளுக்கு சொந்தக்காரர்.பழமொழியை மாற்றி எழுதுவது ட்விஸ்ட் வைத்து எழுதுவதில் என இன்று பலருக்கும் முன்னோடி.US Based job பார்த்தால் இரவு வேளையில் டிவிட்டரில் அதிகம் இருப்பேன் முன்பு.அந்த நேரத்தில் அரட்டை அடிக்கவென ஒரு கூட்டம்.சண்டைகள் இல்லாத ட்விட்டர் அப்பொழுது.அதனால் அன்றைய இனிமையான நினைவுகளை சீதாவின்றி ஒதுக்கிவிட முடியாது.ஓல்ட் மாங் என்ற ட்விட்டர் இவர் டிவிட்டுகள் அனைத்தையும் RT செய்ததில் கடுப்பாகி ஒருவர் மோசமாகப் பேசிவிட்டார்.இருப்பினும் அவரை இவர் எதிர்கொண்ட விதம் அழகு.உண்மைப் பாராட்டையே ஏற்கலாமா வேண்டாமா என யோசிப்பவர்.நானும் கவிதை எழுதுகிறேன் என்று இரண்டு ட்வீட் தான் போட்டேன்..தயவு செய்து நிறுத்துங்கள் என்று.பலர் காதல் கவிதைன்னு போடற  மொக்கைத் தாங்கலபிறரிடம்  சொல்லமுடியல உங்ககிட்ட சொல்லாம இருக்க முடியல ஒரு காட்சியைப் பற்றி பத்து வார்த்தைகளுக்குள் விவரிக்கத் தெரியனும் வார்த்தைகள் வசப்பட நிறைய புத்தகம் படிக்கணும் ஊடல் மௌனம் ன்னு நிறைய கவிதை வந்தாச்சு நீங்க டைரி எழுதல என்று DM ல வந்து செம திட்டு.ஒரு நண்பரிடம் இது போன்று திட்டு வாங்கியது இதுவே முதன் முறை:) (அவ்வ் அழுதுட்டேன் )ஆனால் அதன் பின்பு முடிந்தவரை பலமுறை திருத்தி வார்த்தைகள் சரியாய் விழுந்தால் மட்டுமே ட்வீட்டுவேன்.அதை எவரேனும் பாராட்டும் பொழுது சீதாவிற்கு மானசீகமாய் ஒரு நன்றி:)ஆனால் அவர் சொன்ன வாசிப்பு மட்டும் இன்னும் ஆரம்பிக்கவில்லை
காயப்படுத்தும் வார்த்தைகள் இன்றி சற்றே யோசிக்கும் வகையில் இருக்கும் இவருடைய நாத்திக ட்வீட்ஸ் கூட !  
fake id தொந்தரவுகள் தாங்காமல் அதனைக் கிண்டலடிக்கும் வகையில் எழுதிய ஏழரை யோசனைகள்   படித்து வேண்டாம் உமா ஆண்கள் வக்கிரமாக திருப்பித் தாக்குவார்கள் எல்லாவற்றிற்கும் அமைதியாகவே இருந்துவிடுங்கள் என அன்றே அறிவுரை செய்தார்.எவ்வளவு உண்மை என நினைக்கிறேன் 

சமீபத்தில் திடீரென ஒரு அழைப்பு போனில்.எடுத்தால் வணக்கம் டீச்சர் என்று ஒரு குரல்.இப்படி அழைக்கும் ஒரே நபர் யார்....ஹேய் சீதா ஆஆஆ ஆ... இன்ப அதிர்ச்சி டிவிட்டரே காணோம் எனத் தேடும் ஒரு பிரபலம் என்னிடம் பேசுகிறார் என்று.இவருக்கு ஒரு மெயில் அனுப்பி பதில் எதிர்பார்ப்பதற்கு பதில் நேராகவே சென்று நாம் பேசிவிட்டு வந்துவிடலாம் எனும் அளவுக்கு சோம்பேறி. சோம்பேறி என்பவன் என்ற ட்வீட் சொல்லும் இவர் சோம்பேறித்தனத்தை:)டிவிட்டருக்கு வரலாம் என்றிருக்கிறேன் என்றார்.தயவு செய்து வரவே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.மனதிற்குப் பிடித்த ட்விட்டர் கவர்ந்த எழுத்துகளே ஆயினும் அன்று பார்த்த அதே பிம்பம் கலைவதை விரும்பவில்லை .நல்ல நண்பர்கள் என நினைத்த சிலரின் முகமூடி கிழிந்து தொங்கிய பிறகு எவரிடமும் இப்பொழுது நட்பு வைக்கவே பயமாக இருக்கிறது.வேண்டாம் சீதா இது குலையாமல் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று வேண்டுகோள் வைத்துவிட்டேன்.மெலிதான சிரிப்பு அந்தப் பக்கத்திலிருந்து:)

நச்!  https://twitter.com/cheethaa/status/58988245341577216
சில நச் ட்வீட்ஸ் ! 
சில நச் ட்வீட்ஸ்  
சில நச் ட்வீட்ஸ்

@thirumarant 
 இந்த டிவிட்டரில் ஒருவரை அணு அணுவாய் ரசித்திருப்பேன் என்றால் அது நம்ம தாத்தா தான்.அவ்வளவு அக்குறும்பு பிடித்த மனிதர்.DP இங்கே யாருக்கு பொருந்தி இருக்கிறதோ இல்லையோ இவருக்கு வெகு பொருத்தம்.இதழ் ஓரமாய்க் குவிந்து கிடக்கும் குறும்பு அப்படியே த்வீட்டுகளிலும் பிரதி பலிக்கும்.டிவிட்டரின் பஞ்சாயத்து நாட்டாமை ன்னு சொல்லலாம்.இவரே பஞ்சாயத்தை கூட்டிட்டு இறுதியில் விவாதம் முத்திப் போனா ஆங் போ போ ன்னு தலைக்கு மேல துண்டை வீசி கலைச்சுவிட முயற்சி செய்வார்.கூகிள் பஸ்ஸில் அடிக்கடி விபத்தாகி ரத்த ஆறு ஓடும்.அப்படியே லைவ் கவரேஜ் செய்வார்.அது மூடியதில் ரொம்ப சோர்வாகிட்டார் பாவம் :P இவர் ஒருத்தரை பின்தொடர்ந்தால் போதும் ஒட்டுமொத்த இணையத்தில் நடக்கும் அத்தனை பஞ்சாயத்துகளும் அப்டேட் ஆகத் தெரிஞ்சுக்கலாம்.யாரிடமும் நேரடியாகவே கருத்தைச் சொல்லிவிடுவார்.ஜெய் ஜாக்கி பேரவைத் தலைவர் (புகழ்றாரா அல்லது ஓட்டுகிறாரா என்றே தெரியாது)மச்சி சாராக இருந்தாலும் தாதா கோச்சுக்காதீங்க முன் ஜாமீன் என்று கேட்டு வைத்துக் கொண்டு கருத்தைச் சொல்லியே தீருவார் கேட்காமலே கருத்து சொல்லுவோர் சங்கத்துக்கும் இவரே தலைவர்.அரசியலோ இலக்கியமோ எல்லாவற்றிற்கும் இவரது கமென்ட் டாப்.அட்டகாசமான நகையுணர்வு.எனது favorites -இல் அதிகம் இவரது த்வீட்டுகளே இடம் பெற்றிருக்கும்.அவ்வளவும் அலும்பு.என்ன இங்க சண்டை என்ன இங்க சண்டை என்று எங்கிருந்தாலும் ஓடி வரும் அழகே தனி.இவர் புகைப்படம் டிவிட்டரில் வெளியானபோது நிறைய favorite செய்தது பெண்கள் :) இவருக்கு எப்படியும் ஐம்பது ப்ளஸ் இருக்கும் என நினைத்தேன்:) 

எந்த ஒரு விசயத்தையும் கையாளுவதில்ரொம்ப முதிர்ச்சி.ஆனால் கோர்த்துவிட்டு   வேடிக்கை பார்ப்பதில் வல்லவர்.பேயோன் எழுத்துகள் புரியவில்லை என்று ஒரு கும்பலே மறைமுகமாக பேசிக் கொண்டிருந்தோம்.போகிற போக்கில் இவரைத் தானே சொல்றீங்கன்னு ஹாண்டில் கோர்த்துவிட்டுட்டார்.கையில் சக்கரம் கட்டிக் கொண்டிருக்கிறாரோ எனத் தோன்றும்.எப்படி எல்லா பக்கமும் சென்று வருகிறார் என ஆச்சர்யம்.ரைட்டு என்பது இவரது அக்மார்க்.
ஒரு நாள் ஒரு சங்கீதச் சண்டை வந்தது.கமகம் என்றால் என்னவென்று சீரியசாய் என் தோழி விளக்க, பல வரிகளை கமுக்கமாய் அமுக்கி விட்டுப் பாடுவதே கமகம் என்று தீர்ப்பு சொன்னதில் இவருக்கு என்று வைத்த ரசிகை மன்றத்தை கலைச்சாச்சு:)அதே போல நவீனை விளையாட்டாய் ஒரு ட்வீட் காப்பி என நண்பர்களுடன் கலாய்த்ததில் இருவருக்கும் பொதுவாக அவர் கொடுத்த தீர்ப்பை நினைத்து நினைத்து சிரித்ததுண்டு. 
இவரிடம் மிகவும் பிடித்த ஒன்று அத்தனை முரண் பட்ட மனிதர்களிடம் நட்பாய் இருப்பதுதான்.அது மிகச் சிரமமான விஷயம் என்பது என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன் .இவர் இல்லாத டைம் லைன் களையிழந்து இருக்கின்றது என்றால் அது மிகையாகாது 
தம்பி கையப் புடிச்சு இழுத்தியா ?:) 
உண்மையான கேப்டன் :)
கமெண்ட்டு சொல்லி தான் பாருங்களேன்;) 
ஒய் தாத்தா இஸ் காடு :)
யார் தமிழன் ? 
அந்த விலாசம் 
இதுவ‌ல்ல‌வோ தெய்வீக‌ போராட்ட‌ம்:) 
பொதுபுத்தி
கோர்க்க கஷ்டமா இருக்குல்ல
சிறந்த பேட்டைக்காரர்  
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக  
ஆகவே உங்கள் சண்டையை 
யூத்
 கூகிள் பஸ் மூடினப்போ 
அன்புள்ள முதல்வருக்கு  
தாயுள்ளத்த தப்பாபேசாதிங்க‌ 
டோண்ட் வொர்ரி :) 
யோசனை 
தமிழ் கூறும் கீச்சுலகில் 
#famouslies 
சந்தேகமா இருக்கு ;) 
கற்பனை பண்ணி கூட பார்க்க முடியல :)) 
no need for software :) 


                                            @kanapraba

இவரும் சொக்கனும் இசை பற்றி வெகு சுவராசியமாகப் பேசுவதை பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கும்.பிடித்த விசயத்தில் பைத்தியமாக இருந்துவிட வேண்டும் அதைப் பற்றி அதிக பட்ச அறிவைப்பெற என்பதை இவரைப் பார்த்தே தெரிந்துகொண்டேன்.ஆரம்ப காலத்தில் இவர் வானொலியில் வேலை பார்க்கிறார் என்றே நினைத்தேன்.பிடிச்ச விசயமே வேலையா அமைவது ஒரு வரம் இவருக்கு கிடைத்திருக்கின்றது என்று தோன்றியிருக்கின்றது.பின்னர் டேமேஜரை அடிக்கடித் திட்ட அது ஆத்மதிருப்திக்கான வேலை என அறிந்து இன்னும் மதிப்பு அதிகமாகிற்று.தமிழைக் கடித்துக் குதறும் நம் செந்தமிழ் நாட்டு RJ கள் நிச்சயம் எங்கேயோ ஒரு மூலையில் இருந்தாலும் இவர் அழகாய்த் தமிழ் பேசுவதை அவசியம் கேட்கவேண்டும்.இயன்றவை ஆங்கிலக் கலப்பின்றி அழகாகப் பேசுவார்.
 இவர் இல்லாட்டி சிட்னியில் இனிதே விடிந்ததில்லை:)வந்துட்டேன்ன்ன்ன் ன்னு வழுக்கிட்டு வந்து டைம் லைன்ல வந்து நிற்பார்.எனக்கு ரிப்ளை பண்ணாத பிரபலம் இவர்:)அதிசயமாய் என்றேனும் ரிப்ளை வரும் வராமலும் போகும்.பாஸ் என்றழைத்த பொழுது ஆண் என நினைத்துவிட்டாரோ எனத் தோன்றியது.பின்னர் அதுவும் அவர் வழக்கம் என்று புரிந்துகொண்டேன்.ஈழத்தை சேர்ந்தவர் என்பதால் ஈழம் தொடர்பான உண்மை நிலை இவர் மூலம் அறிய விருப்பப்பட்டதுண்டு.ஆனால் இவர் எதையுமே காட்டிக் கொள்ள மாட்டார்.அத்திப் பூத்தார் போல என்றேனும் இவர் ஈழ மக்கள் வாழ்க்கை பற்றி ட்வீட்டும் பொழுது ஆணியடித்தார் போல இருக்கும்.இவ்வளவு வலிகள் பின்னிருக்க எப்படி சகஜமாக காட்டிக் கொள்கிறார் என்றே தோன்றும்.எனை ஆச்சர்யப்படுத்திய இளையராஜா  ரசிகர்களில் ஒருவர்.ஏகப்பட்ட விஷயங்கள் விரல்நுனியில் தெரிந்து வைத்திருப்பார்.ஆனால் கேட்டால் மட்டுமே கிடைக்கும்.வலிந்து காட்டிக் கொள்ளும் அறிவுஜீவித்தனம் கிடையாது.
என் மார்கழி ஆண்டாள் பாட்காஸ்ட் க்கு இவரின் பாராட்டு மறக்கமுடியாதது  வீணான விவாதங்கள் எனத்தெரிந்தால் ஒதுங்கிவிடுவார்.ஆனால் சேர்த்து வைத்து சுருக்கமாக செமத்தியாகக் கொடுப்பார்.follow செய்ததற்கு நன்றி என DM -இல் என ஒரு சிலர் சொன்னதுண்டு.இதற்கெல்லாமா சந்தோசம் என ஆச்சர்யம்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் மதிக்கின்ற நபர் என்னைப் பின்தொடர்ந்த பொழுது அதை உணர்ந்திருக்கின்றேன்.. எந்த ஒரு விசயத்திலும் இவர் முதிர்ச்சியோடு கையாளுகின்ற விதம் வெகுவாகப் பிடிக்கும்..வெள்ளி மாலை தித்திக்கும் வெள்ளி என இவர் வானொலியில் டிவிட்டர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்.அன்று TL முழுக்க கலகலதான்.என் பிறந்த நாளுக்கு நான் கேட்ட பாடலை முதலாக போட்டது மறக்க முடியாத சர்ப்"ப்ரைஸ்".பல குரல் மன்னன் :) காந்திமதி குரலில்  கே.ஆர்.விஜயா குரலில்  மனோரமா குரலில்  சரோஜாதேவி குரலில்அவர் சொல்லுகின்ற குரல் அப்படியே காதில் எதிரொலிக்கும் :)அதிகம் அவ்வ் தான் (ஜெமோவின் அந்த நுட்பக் கட்டுரைக்கே ஆதி இவர்தானோ எனச் சந்தேகம்)

https://twitter.com/kanapraba/status/107467384054489089  
 https://twitter.com/kanapraba/status/106926051950731265
https://twitter.com/kanapraba/status/106926566151430145

https://twitter.com/kanapraba/status/107468184776478721
https://twitter.com/kanapraba/status/106927364423946240
https://twitter.com/kanapraba/status/106927628367306753
https://twitter.com/kanapraba/status/150529398817296384  
https://twitter.com/kanapraba/status/103088824153939968 
பிரகாஷ்குரலில்) 
விமர்சனம் எனப்படுவது 
பெரிய தண்டனை 
உண்மையான பயங்கரவாதிகள் 
பார்த்து பாஸ் :) 
நீயா  நானாவில் மீனா கந்தசாமியின் பேச்சு க்கு இவர் கொடுத்த விமர்சனமே எனது கருத்தும்
என்னடா உங்களை இன்னமும் காணோம்:)
தமிழக காவல்துறைக்கு வந்த சோதனை:)

 @bharathi_143 : 
என்னை ஆச்சர்யப்படுத்தியவர்களில் இவரும்  ஒருவர்.தானே நன்றாக எழுதக் கூடிய வல்லமை படைத்தவர்.இருப்பினும் டிவிட்டரில் முதன் முதலாக பிறரின் எழுத்துகளை அனைவர்க்கும் கொண்டு சேர்ப்பதற்காக மட்டுமே தன் id யை பயன்படுத்தியவர்.பிரதி பலன் பாராது ஆத்மார்த்தமாய் இவர் செய்த மௌனப் புரட்சி இன்று பலரை RT காகவே id ஆரம்பிக்க வழி வகுத்திருக்கிறது.விகடனால் கவனிக்கப்பட மாட்டோமா என்று ஏங்கும்  நபர்களுக்கு இடையில் விகடன் உங்க time லைன் நாங்க மிஸ் செய்யவே மாட்டோம் எனச் சொல்ல வைத்தவர்.பல நாட்களுக்கு முன் போட்ட ஒரு ட்வீட் இவர் RT செய்த பின்பே வ.பா வில் வந்தது அதற்கு உதாரணம் .ரிப்ளை செய்தாலும் செய்யாவிட்டாலும் நான் விரும்பிப் பேசுகின்ற நபர் இவர் மட்டுமே.ஏனெனில் அவர் குணமே அதிகம் பேசுவதில்லை ஆனால் அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டுதான் இருப்பார்.இளையராஜா ரசிகர் முன்பெல்லாம் பாடல் வரிகளைக் கூட RT செய்வார்.இப்பொழுது தேர்ந்தெடுத்து செய்கிறார்.எப்படித்தான் பழைய ட்வீட்ஸ் தேடி எடுக்கிறார் என்றே தெரியல சிறந்த அகழ்வாராய்ச்சியாளர் விருது கூட கொடுத்திட்டாங்க டிவிட்டர்ல :) என் பிறந்த நாளுக்கு  இவர்  வாழ்த்திய விதம் பிடித்திருந்தது :) இங்கே  ஒருவரை அனைவர்க்கும் பிடிக்கும் என்றால் அல்லது பெரும்பான்மையோரின் மனதுக்குப் பிடித்தமானவராக ஒருவர் இருக்க முடியும் என்றால் அது இவராகத் தான் இருக்கும்:)தான் புகழ் பெற விரும்பாமல் ஏணியாய் இருக்க விழையும் இவர் முதிர்ச்சி கண்டு மிக வயதானவரோ என நினைத்தேன்.அட ..சமீபத்தில் தான் திருமணம் ஆன சேதி தெரியும்.நிச்சயம் அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் விருப்பமானவராகவே இருப்பார் என அனுமானிக்கிறேன் :)
 வாழும் வரை போராட்டம்.
https://twitter.com/bharathi_143/status/148968294244810752
நீயாவது நல்லாயிருக்கியா?

பெண்ணுக்குப் பிடிக்கும் ஆண்மகன்  
தீதும் நன்றும். 







7 comments:

Anonymous said...

Font innum konjam perusa irunda nallarukum.. Padika strain pana vendiyadha iruku..

maithriim said...

சூப்பரா எழுதியிருக்கீங்க :-) உங்களுக்கு பிடித்த ட்வீட்டர்களையே எனக்கும் பிடிக்கும், அதே காரணங்களுக்காக! :-)

amas32

jroldmonk said...

simply superb...

jroldmonk said...

சீத்தா பற்றி பேசும் பொழுதெல்லாம் என் பெயரும் தவறாம இடம் பிடிக்குது.நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடையும் தருணம் அது.சீத்தா,சேட்டை,கோளாறு,திருமாறன் எல்லாம் ஒண்ணா டிவிட் பண்ண நாட்கள் மறக்கவே முடியாதில்ல.எத்தனையோ இரவுகள் சத்தம் வராம சிரிக்க கஷ்டப்பட்டிருக்கேன்.திரும்ப அந்த வாய்ப்பு அமையணும்ன்னு விரும்பறேன் பார்க்கலாம்.

M.G.ரவிக்குமார்™..., said...

நல்லா இருக்கு!இன்னும் வருமென எதிர்பார்க்கிறேன்!

kunthavai said...

வெகு சரளமான, தெளிவான இனிய தமிழ் கைவருகிறது மிகச்சுலபமாக.. மென்மேலும் வளர வாழ்த்துகள் உமா :)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

அனைவருக்கும் நன்றி :)