Thursday, December 27, 2012

எனக்கு பிடித்த டிவிட்டர்கள் ..3

 பிடித்தமானவர்கள் என சிலரை மட்டும் குறித்து எழுதுவது படிப்பவரை விட எழுதுகின்ற எனக்கு அதிக தர்ம சங்கடங்கள்.ஏன் நாங்கள் எல்லாம் உங்களுக்கு பிடித்தமானவர்கள் இல்லையா?என உரிமையுடன் கோபிக்கும் நண்பர் வட்டம்:)ஆனால் ஆரம்பித்து விட்டேன் அரை குறையாய் விட மனமில்லை.இத்தனைக்கும் நான் இங்கே குறிப்பிடுவது எதுவும் இந்த நபர்களுக்கோ எனக்கோ துளியும் வேறு வகையில் பயன்படப்போவதில்லை.சின்னதாய் ஒரு மகிழ்ச்சி தவிர.வேண்டுமென்றே தான் இங்கே  பல விதங்களில் முரண்படுபவர்களை ஒன்றாய் எழுதி இருக்கிறேன் ஆனால் ஒருவரும் பிறரிடம் பேசுகிறாய் என்னிடம் பேசாதே எனச் சொன்னதில்லை.எல்லோரும் எல்லோரிடமும் நல்லவர்கள் எனப் பெயர் எடுக்கவும் முடியாது.அனைவருக்கும் கெட்டவர்களாகவும் இருந்துவிட முடியாது.உங்களை ஒருவருக்கு பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் சில காரணங்கள் இருக்கின்ற பட்சத்தில் எனக்கும் அதே போல இருக்கலாம் என்ற யதார்த்தம் அனைவருமே உணர்ந்து இருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என நினைத்தால் எவருக்குமே நல்லவர்களாக நாம் இருக்க முடியாது சுயம் இழப்பது ஒன்றே மிச்சமாகஇருக்கும்.

                                      

                                                    @krs :
முருகனை க் கும்பிடும் பொழுதெல்லாம் மெலிதான புன்னகையுடன் இவர் நினைவும் வந்துவிடுகின்றது.அந்தக் கால செய்யுளில் படித்ததுண்டு இறைவனை எப்படி எல்லாம் ரசிக்கிறேன் என புலவர்களும் ஆழ்வார்களும் சொல்லும் பொழுது.ஒரு அக்மார்க் பக்தி பழம் போல என நினைக்கும் பொழுதே சில்க் அப்டேட்ஸ் -உம் வரும்.முருகன்,சில்க்,கம்பன் ,தொல்காப்பியம் ,ஆண்டாள் பாசுரம் என ஒரு கலவையாக அனைத்தும் தெரிந்து வைத்து என்னை ஆச்சர்யப்படுத்தியவர்:) 
முதன் முதலில் டிபிகேடி யுடன் ஒரு தமிழ் விவாதம் பார்த்தே பின்தொடர்ந்தேன்.எதற்கும் ஆழமாக ஒப்புக்கொள்ளக் கூடிய விளக்கம் தரவுகளுடன் கொடுப்பார்.வாழ்த்துகளா வாழ்த்துக்களா சொல்லிடுங்க முருகா:) அதில் மட்டும் நான் இன்னும் வாழ்த்துகள் மட்டுமே:)எப்பவும் படையப்பா பேக் இவரது அடையாளம் அதில் எப்பவும் முருகனை உப்புமூட்டை சுமக்கிறார்.ஒரு நாளாச்சும் அதைக் கவர்ந்து அதில் உள்ள முருகனை கையில் எடுத்துப் பார்க்கணும் :) 

தமிழில் தெரியாத புரியாத விசயங்களைப் பற்றி இயன்றவரை தனக்கு தெரிந்தவரை ட்வீட் போடுவார்.இவரது மாதவி பந்தல்  சுவராசியங்களின்தொகுப்பு .யார் மீதும் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியை இவர் வெளிப்படுத்தி நான் பார்த்ததே  இல்லை. ஆண்டாள் பாசுரத்திற்கு விளக்கவுரை கொடுத்து பேசி பதிவு செய்து தரச் சொன்னப்போ ரொம்ப தயங்கினேன்.உங்களால் முடியும் கொடுங்கள் என்று பிடிவாதம் பிடித்து வாங்கிவிட்டார்.அதே போல கம்பன் பாட்காஸ்ட் ல சொக்கன் ஜிரா போன்றோரின் அட்டகாசமான விளக்கங்களுக்கு முன்னே நான் எப்படி என்று மறுத்தே விட்டேன்.என் தயக்கங்களை உடைத்ததே இவர்தான்.இதோ அதோ என்று தப்பித்துக் கொண்டே இருந்தாலும் விடாமல் துரத்தி ஊக்கம் கொடுத்து பேச வைத்து என் ஆடியோ பதிவில் இருந்த இரைச்சல்கள் நீக்கி உதவி செய்தது மறக்க முடியாதது.
தங்கச் சங்கிலி  பாடலை இவர் ரசித்து சொன்ன விதத்தில் அவ்வளவு பிடித்துப் போயிற்று முன்னை விட இன்னமும் அதிகமாக
 ஃ    என்பதற்கு விளக்கம் சொல்லி அது ph ,f உச்சரிப்பிற்கு உபயோகப்படுத்துவது எவ்வளவு அபத்தம் எனச் சொன்னபிறகு நான் அதைப் பயன்படுத்துவதே இல்லை உதாரணம் four : ஃ போர் என்றால் அது அக்கப்போர் என்றார் :) கிரந்தம் தவிர் .soல் எனாமல் எப்பவும் choல் எனச் சொல்லுவது அழகு:)என்ன choNNEEnga ? என்பார் .
இது போன்ற விளக்கங்கள் பிடிக்கும் .ட்வீட்டுக்கு கீச்சு என்பதை பயன்படுத்துவதில் தவறில்லை எனத் தோன்றியது.இவரது தினம் ஒரு சங்கத் தமிழ் தமிழ் ஆர்வலர்களுக்கு விருந்து
@navi_n :

எப்படி எழுதுகின்ற விதத்தில் சீதா தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்திருக்கிறாரோ அதே போல தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்திருப்பவர்.அதனால் தான் பளிச்சென தெரியும் இது "சீதா'தன "நவீன்"தன ட்வீட்ஸ் என்று :)இவர் எனைப் பின்தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு பின்பே நான் தொடர்ந்தேன்.இத்தனைக்கும் என்னை விட followers அதிகம்.நன்றாக எழுதக் கூடியவரும் கூட.ஆனாலும் பின்தொடர்கிறார்களா இல்லையா என்ற கவலையே இன்றி பிடித்ததை மட்டும் செய்யக் கூடிய சிலரில் ஒருவர்.சௌமி கேள்வியின் நாயகி என்றால் இவர் கேள்வியின் நாயகன் :) அடிக்கடி கேள்விகள் தான் வரும் :) 

ராஜா வின் ரசிகர்.ட்விட்டர் அடிக்ட் எல்லாம் கிடையாது.போகிற போக்கில் டிவிட்ஸ் வந்து விழுந்து விட்டுப் போகும்.நாலு டிவிட்ஸ் போட்டாலும் நச். 
ஏ 'டாகூடமாக எழுதக் கூடியவர் என்பதால் புரியவில்லை என்றாலும் அவசரப்பட்டு கேள்விகேட்க மாட்டேன்.சாரு அறிமுகப்படுத்தியதில் முக்கியமானது ரெமி மார்ட்டின் எனச் சொன்னது நீண்ட நாட்களாக விளங்காமல் வேறு ஒருவரிடம் கேட்டே தெரிந்துகொண்டேன்:)வார்த்தைச் சித்தர். ட்விஸ்ட் வைத்து எழுதுவதிலும் வல்லவர்.அதனால் அவசரப்பட்டு திட்டவோ அல்லது பேசவோ செய்தால் தொப்பி விழும்.அராத்துவின் ரசிகர் என நினைக்கிறேன் அவர் ட்வீட்ஸ் அதிகம் RT செய்து பார்த்திருக்கிறேன்

நாமெல்லாம் RT செய்தால் அந்தக் கருத்தோடு ஒத்துப் போனால் மட்டுமே செய்வோம்.ஆனால் எதிர்க் கருத்தாக இருந்தாலும் சொல்லுகின்ற விதத்தில் நன்றாக இருந்தால் RT செய்பவர் இவர் ஒருவரே.டிவிட்டருக்கு வர  மாட்டேன் என சீதா அறிவித்தபொழுது நவீன் சொன்னதை  ரசிச்சேன் :).ஆண் பெண் (நடுவுல மானே தேனே என்ன வேணா எழுதிக்குவாங்க ஆணும் பெண்ணும் இருக்கணும் அதான் ஒரே கண்டிஷன் :P ) டிவிட்ஸ் என் டைம் லைன் ல ரெகுலரா போடுறது ரெண்டே பேரு ஒன்னு அரசு இன்னொருத்தர் நவீன்.இதுல யார் ட்வீட் பார்த்துட்டு திருட்டுக் குமரன் அலறினார் எனத் தெரியல :))
இவரோட கேள்விக்கு அப்பப்போ சௌமி வந்து இப்படி பதில் கொடுப்பாங்க :)
இந்த ட்வீட்டுக்கு  சௌமியின் பதிலும் வெகு பிடித்தம் எனக்கு :)

யதார்த்தம்  
வெறும் இயல்பு

இது நல்லா இருக்கு:)
 தோல்வியின் தனிச்சிறப்பு  
 ராகுகாலங்கள்
நழுவவிட்டது 
சென்சார் போர்டு 
என்னையும்தான் :) 
இவங்க அக்கௌன்ட் பாருங்க :) 
இது டிவிட்டரின் விதி :)
அலைபேசி இல்லாதபோதும்  
show :) 
இரண்டாவதுமுறை  
கற்றுக்கொள்ள  
போலி ஒற்றுமைகள்
@mayavarathaan :

  ரொம்ப ஆச்சர்யம்தான் எனக்கே .இந்த பிடித்தவமானவர்கள் பட்டியலில் இவரை இணைப்பேன் என ஆரம்பத்தில் நினைக்கவே இல்லை.ஆரம்பத்தில் பிடிக்காமல் இருந்து பின் பிடித்துப் போன டிவிட்டர்களில் இவரும் ஒருவர்


பல விசயங்களில் நானும் அவரும்  நேர் எதிர் .இவ்வளவு முரண்பட்ட நபரோடு என்னால் சகஜமாக பேச முடிகிறதென்றால் காரணம் வெரி சிம்பிள் அவரோடு அரசியல் சம்பந்தமாக விவாதம் செய்ததே இல்லை.அவர் சொல்வதை நான் ஏற்கவோ அல்லது நான் சொல்வதைக் கேட்டு அவர் கருத்தை மாற்றிக் கொள்ளப் போவதோ இல்லை என்பதால். என் எதிர்க் கருத்தை மிக தயங்கி தயங்கி இரண்டு முறை சொல்லி இருக்கேன்.இவர் இப்படித்தான் என்ற புரிதல் வந்த பிறகு எதுவும் சொல்வதில்லை.
என்னை சுவராசியப்படுத்தியது இவரது கவித டேக் தான் .நன்றாகவும்இருக்கும்.அதே போல #oppariofMayams என்று இவர் லதானந்த் என்பவர் இறந்துவிட்டார் என தவறாய்ப் புரிந்து கொண்டு இவர் வச்ச ஒப்பாரியை வைத்து பரிசலும் ராஜனும் சேர்ந்து ஆரம்பித்த கிண்டல் டேக் அதை sportive - வாக எடுத்துக் கொண்ட விதம் பிடித்திருந்தது.அன்று அனைவரும் ஒருவருக்கொருவர் வைத்துக் கொண்ட ஒப்பாரி எவர் கிரீன் நினைவுகள் மானிட்டரைப் பார்த்து சிரித்து வயிறு வலித்தே விட்டது:) தி பெஸ்ட் டேக்.இவர் மதுரைக்கு வந்த பொழுது பார்க்கலாமா வேணாமா என்றொரு தயக்கம் இருந்தது.என் தயக்கம் எதற்காக எனப் புரிந்து கொண்டு நான் மனைவி குழந்தைகளுடன் தான் வந்திருக்கிறேன் எனத் தகவல் கொடுத்தார்.உடனே பார்க்கப் போய்விட்டேன் இணையத்தில் முதன் முதலில் சந்தித்த நபர் இவர்தான்.
அவரைப் பிடிக்காதவர்களிடம் தான் அதிகம் பேசுவேன் .RT யும் கூட .எனக்குப் பிடிக்காதவங்க  ட்வீட் RT செய்யக் கூடாதுன்னு அவர் ஒருமுறை கூட சொன்னதே இல்லை ...என்னிடம் பழகுகின்ற விதத்திற்காகவே இன்னமும் என் மரியாதைக்குரியவர்கள் பட்டியலில் இருக்கிறார்.தீவிர ரஜினி&ராஜா ரசிகர்.எப்பவும் #ராஜாங்கம் என்ற டேக் உடன் பாடல்களைப் பகிர்வார். யூ ட்யூப் ல ப்ளே லிஸ்ட் தயாரிப்பதை அப்பொழுதுதான் கேட்டறிந்து கொண்டேன்.

சின்ன சின்ன உதவிகளாயினும் அதை காலத்தே செய்ததாலும் பிடிக்கும்.
லவுட் ஸ்பீக்கர்காரனை விரட்டிய கதை வெகு பிரபலம் அதை வைத்தே இவரை கிண்டல் அடித்திருக்கிறோம் :) இவரது ஆன்றாயிட் மொபைல் ஊத்திக் கொண்டதுக்கு தாத்தா கமெண்ட்:) ஏனென்றால் எங்கயாவது வெளியூர்ப் பயணம் என்றால் காபி டம்ளர் ,கத்திரிக்கா ன்னு ஒன்னு விடாம ட்விட் பிக் போட்டுடுவார்:) காஞ்சனா படத்தை நள்ளிரவு ஒன்றரை மணிக்கு இவர் அப்டேட் செய்ததும் நான் பயந்து  சத்தமில்லாமல் ட்விட்டரை மூடியதும் மறக்க முடியாதது:)இவர் மனைவி பழகுவதற்கு மிக இனிமையானவர். 

மதிப்பிற்குரிய முன்னாள் மதுரை கலெக்டர் சகாயத்துடன் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்காக ஆரம்பித்த வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைந்து பணியாற்றியதாலும் தனி மரியாதை உண்டு.
தத்ஸ் 
https://twitter.com/mayavarathaan/status/102999373801193472 
கவித 
https://twitter.com/mayavarathaan/status/149494626951233538 
#FamousLies #famousLies
 paste :)
 ரொம்ப பிடிச்ச ட்வீட் இது
 கானா பிரபாவிடம் இருந்து எதிர்க் கவித :)
பெட்ரோலுக்கு மட்டும் 
தங்கபாலு ராஜினாமா 
கீழ்க்கண்ட இமேஜ் ஐ தனியா க்ளிக் செய்தோ அல்லது save செய்தோ படிக்கவும் :) பழைய டிவிட்டர்கள் ரசிக்க :)



 


























































































@tpkd is now @pctv :
 
ட்வீட்ஸ் ஆக இல்லாமல் விவாதங்களும் உரையாடல்களும் நிறைந்து வழிகின்ற id இவருடையது.விவாதங்களை  முடிந்தவரை கண்ணியமாகவும்,நாகரிகமாகவும் வைத்தே பார்த்திருக்கிறேன். பெரியாரின் "பக்தர்" :) 
அதனால் எனக்கும் இவரிடம் முரண்பட சில காரணங்களும் உண்டு.நாத்திகர் என்பதால் அது பற்றி மட்டும் விவாதிக்கவே மாட்டேன்:)

சூர்யா சிவப்பு நிற அழகிற்காக க்ரீம் விளம்பரத்தில் நடித்தது குறித்து தீவிர விவாதம் செய்திருக்கிறோம்.இறுதியில் என் கருத்தை ஏற்றும் எனக்கு ஆச்சர்யம் கொடுத்திருக்கிறார்.

ட்விட்டரில் ஆரம்ப காலத்தில் இவருக்கும் சௌமிக்கும் இடையான உரையாடல்கள் வெகு பிரசித்தி பெற்றது:)இரவில் இவர் விவாதம் ஆரம்பிக்க அதற்கு கர்ம சிரத்தையாய் சௌமி காலங்கார்த்தால ஆறு மணிக்கு கூட பதில் சொல்லி வைப்பாங்க.ஒரு மணி நேரம் அல்ல பல மணி நேரம் அல்ல பல நாட்கள் கூட ஒரே விஷயத்தை பற்றி விவாதிக்கும் திறன் கொண்டவர்கள் இருவரும்.:))இருவருமே இப்போதான் அதிகம் ட்வீட் செய்வதையும் பேசுவதையும் குறைச்சிட்டாங்க:)  அனைவர் மனத்திலும் தோன்றிய கேள்வியை தாத்தா கேட்டே விட்டார் :)
எத்தனை பேர் கிண்டல் அடித்தாலும் அடித்துக் கொண்டே இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கிரந்தம் தவிர்ப்பாளர்.கிரந்தம் என்ற வார்த்தையை எனக்கு அறிமுகமானதே இவர் மூலம்தான்.
மனதில் வைத்துப் பின்னர் பழிவாங்கும் குணம் எல்லாம் நான் கண்டதில்லை.(மாயவரத்தானின் நச் கமெண்ட்டை அவருடன் முரண் பட்ட பிறகும் இவர் பாராட்டியதை நான் பார்த்திருக்கிறேன் )உங்கள் வார்த்தை என்னைக் காயப்படுத்தியது என நான் சொன்ன மாத்திரத்தில் SMS ,மெயில் ல பிடிச்சு அறிந்து மன்னிப்பும்,வருத்தமும் தெரிவித்த குணம் வெகுவாக கவர்ந்த ஒன்று.
#TNfishermen #koodangulam #SaveAnnaLibrary இப்படி பல டேகிலும் இவரது பங்கு அதிகம். இளையராஜா ரசிகர்.
 
மகளைப் பற்றி எழுதுவது மகளதிகாரம் என ஆரம்பித்து இவர் எழுதுகின்ற அத்தனை ட்வீட்ஸ்-உம் வெகுவாக ரசித்திருக்கிறேன்.உள்ளார்ந்த ரசனையோடு எழுதுவார்.(பழைய அக்கௌன்ட் பூட்டு என்பதால் ட்வீட் லிங்க் கொடுக்க முடியல ) 
இப்பொழுதெல்லாம் இவர் விட்டத்தை வெறித்துக் கொண்டு ட்வீட்டுவது போல் உள்ளது :))சமரசத்தை விளையாட்டாய் கானா பிரபா மாற்றி விட சில மணி நேரம் டைம் லைனில் ஒரே ரச வாடை.அந்த ரச களத்திலும் ரசம் என்ற சொல் சரிதானா சாறு வா என இவர் ஆராய்ந்து கொண்டிருந்ததை ரசித்தேன்:)

ஹாண்டிலில் உள்ள பெயர் கொண்ட பாடல்கள் டேகில் எனக்கு "உம்மா உம்மம்மா"பாடலை இவர் தேர்ந்தெடுக்க ராஜன் அதற்கு "யோவ் நீர் இன்று ஈடு வாங்கப் போவது உறுதி "என்ற கமெண்ட்டும் நான் ரசித்தவற்றில் ஒன்று:)
நடனம் பற்றி நான் ட்வீட் எழுத சோடி போட்டுக்குவோமா சோடி என ராமராஜன் ஸ்டைலில் போட்டிக்கு (எப்போ வச்சுக்கலாம் எங்க வச்சுக்கலாம் ;எப்போ வேணாலும் எங்கே வேணாலும் ) வம்பிழுத்தார்.நான் ஆடுவது இருக்கட்டும் இவர் ஆடினால் என்ன ஆகும்னு யோசிச்சு பார்க்கறேன்:))கண்டிப்பாக மேடையே ஆட்டம் கண்டுவிடும் :)))
இவர் புகைப்படம் எடுக்கும் திறனால் பல டிவிட்டர்கள் அழகாகி இருக்கிறார்கள்:)
வழக்கமான சண்டைக்கோழிகள் சௌமியும் டிபிகேடியும் :) 
ரொம்ப கொழப்பமா இருக்குல 




@g_for_Guru :

 அட்டகாசமான டிவிட்டர்களில் ஒருவர்.அரசியல் கமெண்ட் எல்லாமே டாப்தான்.அழகான ஹேர் கட்டுடன் பின்னால் திரும்பி வானம் நோக்கி மகனுக்கு கை காட்டும் DP அழகா இருக்கும்.அது போல திரும்பி மகளைக் கொஞ்சுவதும்.இந்த DP ஏனோ பிடிக்கல சொல்லவும் தயக்கம்.நன்றாக எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் உடனே பரிந்துரைத்து விடுவார்.அதிகம் எவருடனும் உரையாடாமல் எந்த மெய் நிகர் பிரபலத்துடனும் அதிக நட்பு இல்லாமலும் முழுக்க முழுக்க எழுதுகின்ற திறனிலேயே விகடனை அதிகம் கவனிக்க வைத்தவர்.நாம பாட்டு ட்வீட் ஆ போடுவதை யார் ரசிக்கப் போறா ன்னு நினைச்சதுண்டு.அதிகம் பேசாதவர் அத்திப் பூத்தார் போல அதையும் கவனித்து சொன்னதும் மறக்க முடியாத சந்தோஷம் .

முல்லை பெரியார் டேம் பற்றிய டேக் அப்போ இவர் ஒரு video பகிர்ந்தார்.அத்தனை விசயங்களையும் விளக்கும் ஆவணப் படம்.
எனக்கு பொழுது போகலன்னா ஜான் சேனா (குத்துச் சண்டை வீரர் )அடிக்கடித் திட்டுவதுண்டு(66A பிரச்சனை வராது பாருங்க :)) .அதை கவனித்துவிட்டு இவர் சொன்னது :)
ரியல் ரேணு நல்லா எழுதறாங்க ன்னு சொல்லி இவர் follow செய்ததுக்கு ஆள் ஆளுக்கு கிண்டல் இவரை அப்போ இவர் சொன்னதையும் ரொம்ப ரசிச்சேன்:)
விடுமுறை நாளில் டிவிட்டருக்கு வராமல் இருப்பதும் வேலை நாட்களில் டிவிட்டரிலும் பரபரப்பாக இருப்பதையும் அதிசயமாய்ப் பார்த்துவிட்டு சொன்னது :) 
குழந்தை வளர்ப்பு பற்றியும் அப்போ அப்போ டிப்ஸ் வரும்.நான் மிகவும் ரசித்த த்வீட்ல இதுவும் ஒன்னு :)
அவ்வப்பொழுது வரும் குழந்தை ட்வீட் .மிக சமீபத்தில் எனக்கு மிகப் பிடிச்ச நச் ட்வீட் இது

அரசியல்,நகைச்சுவை,யதார்த்தம்,குடும்பம் என அனைத்தும் கலவையாக கலந்து வரும் ட்வீட்ஸ்எல்லாமே கலக்கல்தான்

 வேதாளம் :)
நான்ஸ்டிக் தோசை :)
கேப்டன் உளறாதீங்க :)
இது போன்ற யதார்த்தமான உதாராணங்கள் இவர் ஸ்டைல்
என்ன அர்த்தம் தெரியுதா?:)
உண்மை..
ஏனோ:(
பார்பி பொம்மை
உளியின் ஓசை :)
மலையாளிகள் உணர வேண்டியது 
இது போன்ற அனுபவம் எனக்கும் உண்டு
காங்கிரசின் வெப்சைட்
நம்ம பிரதமர்
குழந்தையின் சந்தோஷத்தை
பார்லிமெண்ட்!!
வேதாளம்
உயர்பதவி 
கேப்டனுக்கு பிறந்த நாள் வாழ்த்து :) 

No comments: