மனதிற்கு பிடித்தவர்கள் என சொல்லும் பொழுதே அனிச்சையாக சிலரைத் தவிர்க்கவே முடியாது.அது போலவே இவர்களும் :)
@naiyaandi :
அதிகம் பிறரிடம் பேசிப் பார்த்ததில்லை பேசினாலும் ஸ்மைலி தான்.அதிகம் ரிப்ளை செய்யமுடியாத அவஸ்தை மொபைலில் உண்டு என்பதால் ரிப்ளை செய்ய சிரமம் எனச் சொன்னார்.வர , நச் என ரத்தினச் சுருக்கமாக சில ட்வீட்ஸ் போட என இருப்பவர்.பெரும்பாலும் நல்ல ட்வீட்ஸ் ஆகவே இருக்கும்.
பெயருக்குத் தகுந்தாற் போல் நையாண்டித் தனம் இழையோடும்:)அடிக்கடி இவரை நாய் துரத்துவதால் சில ட்வீட்டுகளும் சுவராசியமாய்க் கிடைக்கும்:)என் விரதம் முடிச்சப்போ அவர் சொன்னது :)
'பற்றி'க்கொண்டு
எம்மதமும் சம்மதமும்
அம்மா வைத்தியசாலை:)
அளவிடறோம்
மேகங்கள் மாறுபடலாம்!
நாங்கள் இருக்கிறோம்
கணிப்பு
எவ்வளவு நல்லவனாக இருக்கிறேன்
ஆசுவாசம்
மாவீரன்
முகமூடி போடத் தெரியாத பெண்கள்
ஜீரணிக்க முடியாம
யாகாவாயிரனும் நாகாக்க,
அரசாங்க வேலை
கடவுள்
எண்ணங்களை செதுக்கினேன்
அவ்வ் :))
எண்ணி துவைக்க
வள்'லொள்' :-)
உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக
@jroldmonk :
ஒரு தலை நட்பும் உண்டு என்ற ட்விட் இவருக்கே பொருந்தும்.முடிந்தவரை நல்லபடியாகவே நடந்துகொள்ளும் ஒரு யதார்த்தவாதி.கவிதை நன்றாக எழுதுவார்.DP வெகு பொருத்தம் :) சாதரணமான பல விசயங்களை விளக்கம் கொடுக்க நேரிடும் பொழுது இந்த DP யில் இருப்பது போலவே யோசிப்பது போல இருக்கும் :)சீதாவின் தீவிர ரசிகர் .மொத்தமாய் அவர்ட்வீட்டை இவர் RT செய்ய "ஒரு mention போதுமே நண்பா இப்படியா டைம் லைனையே இடம் மாற்றுவது" என மெலிதாய்க் கடிந்து கொண்டார் .இவர் கவிதைக்கு சீதாவிடம் feedback கேட்க என் favorites லிங்க் கொடுத்து அதற்கு சீதா சொன்னது ஒரு பெரிய மகிழ்ச்சி:)நிஜமாகவே ரசித்ததை எனக்கே எனக்காகவே திரும்ப படித்து ஆசுவாசிக்க மட்டுமே favorites செய்ததுண்டு.அன்றெல்லாம் ஆக்டிவிட்டி டேப் கிடையாது.அதனால் எவருக்கும் தெரியாது.நான் எதை fav செய்திருப்பேன் என்று.ஆனாலும் தேடி வந்து படிப்பவர்களில் இவரும் ஒருவர்.எதையும் எதிர்பாராமல் ஒரு காரியம் செய்யும் பொழுது அதற்கு நல்லதாய் ஒரு feedback கிடைக்கும் பொழுது ஒரு ஊக்கம் கிடைக்கவே செய்கின்றது:)அப்படி ஒரு ஊக்கமும் ஆரம்ப காலம் கொடுத்து எந்த ஒரு மோசமான சூழலிலும் விட்டுக் கொடுக்காத நட்பும் தனி மரியாதை ஏற்படுத்தி விட்டது.
பிடிக்காத பெண்ணை தேடிச் சென்று வம்பு இழுப்பவர்களை விட பிடித்த பெண்களிடம் தொந்தரவு செய்யாத வகையில் ஜாலியா பேசிட்டு போய்டலாம்.இதில் மாங்க் இரண்டாம் வகை.கூடுமானவரை காயப்படுத்தாத பேச்சு இதனால் பிடிக்கும்.
இவர் ட்விட்டர்க்கு வரலன்னு மட்டும் யாரும் தேடினீங்கன்னா டான்னு DM மட்டும் உடனே வரும் :)எனக்கும் மட்டும் தான் இப்படின்னு நினைச்சேன் வேறுஒருவர் அதை பொதுவில் போட்டு உடைத்து விட்டார் :))("மாங்க் ட்வீட் போடாம ஏன் DM ல மட்டும் பேசிட்டு இருக்காப்புல ")
எது அழகு ?
சில கவிதைகள் ..1
எல்லையற்ற வானம்
அழகிய பொய்கள்
யாரோ ஒருவரால்
நெருங்கிய நண்பர்கள் ஒவ்வொருவரிடமும்
தமிழர்:)
புகைப்படங்கள்
கடந்து செல்லும் பொழுதுகளை
எளிய வழி.
டிவிட்டர் வந்து உணர்ந்த விஷயம்
உறக்கமில்லா
கடல் கடக்கும் பறவையின் சிரமம்
விமர்சனம் :)
இதில்தானே வாழ்கிறோம்
உண்மைய சொன்னேன்
பொதுவாய் பல நாள் கவனித்த பின்பே பின்தொடர்வதுண்டு.ஒவ்வொரு ட்வீட்ஸ் -உம் நறுக்கு சுருக்கென இருக்க பார்த்த மாத்திரத்தில் பின் தொடர்ந்து விட்டேன்.அவ்வளவு அருமையாக இருக்கும்.பல விசயங்களில் கருத்து ஒற்றுமை உண்டு.மனதில் நினைத்ததை எழுத சரியான வார்த்தை சிக்காமல் எழுதாமலே விட்டுவிடுவேன்.ஆனால் டெலிபதி போல இவர் சுருக்கமாய் வந்து அந்நேரம் போட்டு விடுவார்.அட இதுக்குத் தானே இவ்ளோ சிரமப்பட்டோம் என்று தோன்றும்.பெரும்பாலும் என் மனநிலைக்கு ஒத்தார் போல பல ட்வீட்ஸ் இருந்ததுண்டு.யோசித்து சிரமப்பட்டு வார்த்தை கோர்த்து எழுதுவதை விட இவர் ட்வீட் போட்டதும் ஒரு RT முடிஞ்சுது ஜோலி :) அடிக்கடி வருகின்ற ட்விட்டர் இல்லை.ட்விட்டர் க்கு அடிக்ட் ஆகாத சில டிவிட்டர்களில் இவரும் ஒருவர்.ஆரம்பகாலத்தில் இருந்தே ஆத்மார்த்தமான மரியாதையும் பிரியமும் கலந்து பேசும் டிவிட்டர்களில் இவரும் ஒருவர் என்பதால் வெகுவாகப் பிடிக்கும்:)
சில நச் ட்வீட்..1
கற்பனைகள்
விளக்கமளிக்காமல் விலகி விடலாம்
வேடிக்கை பார்ப்பது
மிகச்சிறந்த வடிகட்டிகள்
சாத்தான் பைபிள் ஓதுகிறது
forwarded message
மௌனத்திற்கான அர்த்தங்கள்
இடைவெளி வந்துவிட்ட உறவை
ஆறுதல்களையே
உண்மையாக இருத்தல்
வெறுமையில் தவிக்கின்றன
இந்த ஒரு தடவை மட்டும்
நீதி கூறும் நீதிபதிகள்
"பேசு" &"பேசாதே"
சிலரைப்பிடிக்கிறது
முகத்திரை
@6says :
நல்லதொரு போட்டோ கிராபர் .இவர் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படங்களும் அருமையாய் இருக்கும்.எனக்குள் மடிந்து போன ஆசைகளுள் ஒன்று போடோக்ராபி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது.இணையத்தில் மெயில் ல வரும் நல்ல புகைப்படங்களை தனி folder போட்டே save செய்து வைத்திருக்கிறேன்.எங்கள் வீட்டில் கேமரா பிடிக்கத் தெரிந்த ஒரே ஆள் நான் தான் (மத்தவங்க அப்போ எவ்ளோ மோசம்ன்னு புரிஞ்சுக்கோங்க :P )சின்ன வயதுப் புகைப்படங்கள் எங்களுக்கு அதிகம் இல்லை என்பதால் எங்கள் வீட்டு வாண்டுகளை விதம் விதமாக போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன்.அதில் சில FB ல அப்டேட் செய்ததை இவர் கவனித்திருக்கிறேன் நன்றாக இருந்தது என சொன்னது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.விஷயம் தெரிந்த நபர் பாராட்டும் சுகமே அலாதிதான்:)
இவரிடம் மிகப் பிடித்த ஒன்று எந்த நேரத்திலும் பெண்களைப் பற்றி இழிவான ட்வீட்ஸ் கண்ணில் பட்டாலும் உடனே தன் எதிர்ப்பைப் பதிவு செய்துவிடுவார் .அதில் துளி கூட போலித்தனம் ஹீரோயிசம் பார்த்ததில்லை.அந்த குணத்திற்காகவே follow செய்தேன்.டிவிட்டரிலேயே கதியாய் வேலை செய்பவர்களுக்கு இடையே வேலைக்கு நடுவே டிவிட்டருக்கு வருபவர்.
சூரிய சக்தியை மின் சக்தி ஆக்குவது குறித்து இவரிடம் விபரம் கேட்டுப் பெறலாம் நல்ல பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.இவர் புகைப்படங்களைப்பார்க்க..
@rsgiri :
இவரது வைகை கரை காற்றே நில்லு பாடலைக் கேட்டு பின் தொடர்ந்தேன்.நல்ல குரல் வளம் முறையான பயிற்சி மட்டும் இருந்தால் இன்னமும் கேட்க அருமையாக இருக்கும்.கொடுக்கின்ற விமர்சனத்தை அப்படியே இயல்பாக ஏற்றுக் கொள்ளும் விதம் பிடிக்கும்.விழிகளில் அருகினில் வானம் பாடல் இவர் குரலில் பிடிக்கும் பல சமயங்களில் சுய எள்ளல்கள் ரசிக்க வைக்கும்.சமையல் பற்றியும் அடிக்கடிக் குறிப்புகள் வரும் :) ரத்தினச் சுருக்கமாக எழுதும் பதிவர்.இவரது ஹாரியும் மேரியும் பின்னே லாரியும் பதிவு மிகப் பிடிக்கும்:) இவரது ஆம்னி பஸ் புத்தக விமர்சனத்தில் என்னையும் ஒரு ரவுடியா மதிச்சு விமர்சனம் கேட்டது எனக்கு கண்ல ஆனந்தக் கண்ணீர் வரவழைச்ச சம்பவம் :) புத்தக விரும்பிகளுக்கு ஒரு அருமையான தளம்.இவரது மீனாட்சி என்ற அழைப்பு மிகப் பிடித்தமானது:) இவருடைய கீரவாணி பாடலை வீட்டில் தெரியாத்தனமா ப்ளே செய்து கேட்டதில் செமத்தியா திட்டு விழுந்தது மறக்க முடியாது நிஜமா நல்லா பாடுறவர்ன்னு சத்தியம் பண்ணினதைகூட அம்மா நம்பல :)
இதுமாதிரி ஆயிரத்தி முன்னூத்தி சொச்சம் தடவை ட்விட்டர் விட்டுப் போயிருக்கார் :)சமீபத்தில் இவர் நலம் விசாரித்ததற்கு சாந்தியின் இந்த பதிலை வெகுவாக ரசித்தேன் :)இவர் ட்விட்டர் விட்டு போறேன்னு சொன்னதோட நில்லாமல் பச்ச புள்ள நட்டுவை கோர்த்து விட்டுச் சென்றதில் நட்டு டைம் லைனில் புலம்போ புலம்பென புலம்பியது எவர் கிரீன் ரசனைக்குரியது:)
அப்பப்போ இது மாதிரி காதல் கவிதை(?!) வரும் :)
புதியதாய் யாரோ பின்தொடர்ந்ததை இவர் கேட்டப்போ தாத்தா சொன்னது :)
அப்ப நானும் பெரியாளுதான் போல :)
பாடல் விமர்சனம்
எனக்கும் இது போலத் தோணிருக்கு
போனை எந்தத் திசையில் எறிய?
“மாட்னா செத்தடி :)
தமிழ்கூறும் நல்லுலகம்
யார் எதை சொன்னாலும் :)
விதி
பாட்டுப் புத்தகம் பற்றிய பதிவு என் அண்ணன் பாட்டுப் புத்தகம் சிறு வயதில் நிறைய சேர்த்து வைத்திருந்ததை நினைவூட்டியது.குழந்தை இல்லாத நபர்களிடம் அதை துக்கமாக விசாரிப்பது எவ்வளவு அபத்தம் என்பதை உணர்த்துவதால் இந்த பதிவும் பிடிக்கும் .
2 comments:
பயங்கர நகைச்சுவையாய் எழுதறீங்க. படிக்க இதமாக உள்ளது, மயிலிறகை போலவே :-)
amas32
நன்றி amma :)
Post a Comment