Saturday, December 22, 2012

எனக்குப் பிடித்த டிவிட்டர்கள்! ..2


ஒரே ஆச்சர்யமாக இருக்கிறது பாகம் ஒன்று க்கு கிடைத்த வரவேற்பை பார்த்து .வரும் பாகங்களில் உங்கள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய முடியுமா தெரியல பிடித்த டிவிட்டர்கள் என்பதோடு முடித்துக் கொள்ளவே தீர்மானித்து இருந்தேன்.விரிவாக எழுதச் சொல்லி ஊக்கப்படுத்திய @raguC க்கும் @vrsaran க்கும் நன்றி எவரையுமே பிடிக்காமல் பின்தொடரவில்லை அதே சமயம் தொடர்கின்ற 102 பேருக்கும் எழுதுவது நடைமுறையில் சாத்தியமற்றது.அதனால் தான் குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்ந்தெடுத்தது. அதுவும் ஆரம்ப கால டிவிட்டர்களை மட்டுமே.அடுத்து வரும் பதிவுகளில்  நீளத்தை குறைத்து விடுகிறேன்


                                                      @iamkarki :
நான் டிவிட்டருக்கு வரும் பொழுதே கார்க்கிக்கு 800 followers எனது ஐந்தாவது follower அவர்.நான் ரசித்த இவரது முதல் ட்வீட் பாஜக போராட்டம் 200 பேர் கைது #சரிதான் மொத்த கட்சியும் உள்ள போயிருக்குன்னு கமென்ட்:)ஒரு ஸ்மைலியில் ஆரம்பித்த நட்பு ஒரு இடைவெளியுடன் இன்று வரை தொடர்கின்றது.டிவிட்டருக்கு நான் வந்த புதிதில்தான் blog பற்றி படித்த சுவராசியமாக சில blog ல இவரதும் ஒன்று.அதில் டிவிட்டரில் என்னைக் கவர்ந்த இருவருக்கு மட்டுமே எனது feedback கொடுத்தேன்.அன்று முதல் இன்று வரை என் விமர்சனங்களை மதிக்கின்ற நபர்..கவிதை  ,தோழி அப்டேட்ஸ் ஏழு  என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை வடிமைத்த திறன்,ஏதேனும் குறும்படம் ,பாட்டு,என பல திறமைகள் இருந்தாலும் தன்னை மொக்கையான நபராகவே அடையாளம் காட்டியது வருத்தம்."ஆப்பிள் நிறுவனம் வாஷிங் மெஷின் கண்டுபிடித்தால் அது வெறும் கண் துடைப்பாகத்தான் இருக்கும்#ஐ-வாஷ் " இன்று இதே போன்று எழுதும்  பலருக்கும் இவரே முன்னாடி.ஒரு கார்கி பல கார்க்கியை உருவாக்கி வைத்திருக்கிறார் (உதாரணம் :சாய் சித்ரா ஒரு சுடிதார் அணிந்த கார்க்கி :) பெரிய சமூகத் தொண்டு இதற்கெல்லாம் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இவரைக் கைது செய்ய முடியாதா?
சில நேரங்களில் இவருடைய பதிலில் இருக்கும் நுட்பமான மொக்கையைப் புரிந்துகொள்ள "பேய்"த்தனமாக முழிப்பேன்.இவர் விளக்கம் கொடுக்கும் பொழுது மட்டும் எதிரில் இருப்பது மானிட்டர் என்ற உணர்வு இல்லாவிடில் ஒரு அப்பு அப்பிடலாம்னு தோணும்:) இவரது மரண மொக்கை தாங்க முடியாம ஓமக்குச்சி போல  நிறைய பேர் கதறியதுண்டு:)

விஜய் ரசிகர்.இன்றைய புது டிவிட்டர்கள் அஜித் விஜய் என்று சண்டை போடும் பொழுதெல்லாம் மெலிதாய்ப் புன்னகைக்கிறேன்.நாங்கல்லாம் போட்டு முடிச்சு களைப்பாகி உட்கார்ந்து இருக்கோம் பாஸ்:)மங்காத்தா படம் ரிலீஸ் ஆனப்போ இவர் ஒரு வெறியாட்டமே நிகழ்த்திவிட்டார்.அந்தப் படம் விமர்சனம் மட்டும் போய்ப் பார்த்திராதீங்க அஜித் ரசிகர்களே:)செம கருத்து மோதல்.விஜய் படம் என்றால் எப்படியாவது அது நல்ல படம் என நிறுவ முயல்வதும் சூர்யா அஜித் என்றால் முடிந்தவரை படம் பற்றி நெகடிவ் கமென்ட் ட்வீட் RT செய்வதும்.இவரிடம் இந்த மூன்று நடிகர்களின் படத்திற்கு மட்டும் நேர்மையான விமர்சனம் எதிர்பார்க்கவே முடியாது:)அதை மீறிச் சொன்னா அதிசயம்தான்:)நான் mute செய்திருக்கேன் என பொய்  சொல்ல சார் unfollow செய்துட்டார்.நான் பதிலுக்கு unfollow செய்யாமல் ட்வீட் பிடித்திருந்தால் RT அல்லது fav என அப்படியே மௌனித்து விட்டேன்.ட்வீட் பிடிக்கலை என unfollow செய்திருந்தால் கூட ஒன்றும் தெரிந்திருக்காது.ஒரு நடிகனுக்காக நட்பாய் இருப்பவர்களிடம்  கோபப்பட்டுஎன்னவாகப் போகின்றது? பின்னர் இப்படி  ஒரு சமாதானத்தோடு திரும்ப follow செய்தார்:)அதன் பிறகு பிடித்தால் சொல்வேன்.பிடிக்காவிடில் சொல்லவே மாட்டேன்.  ஆனாலும் இத்தனை சண்டை எதிர் கருத்துகளுக்குப்பிறகு வந்த புரிதல் ஒரு ஆசுவாசம். 


அரசியல்  கமெண்ட் அட்டகாசமாய் இருக்கும்.நான் கவனித்த வரையில் இங்கே பிடிக்காதவர்களை தேடித் பிடித்து நக்கல் அடிக்கும் குணம் பார்த்ததே இல்லை. சரியோ தவறோ எதுவாக இருந்தாலும் முயற்சி செய்து பார்த்துவிடும் குணம் பிடிக்கும்.இவரிடம் இன்னும் பிடித்த ஒன்று எது பிடித்தது எது பிடிக்காதது என்று தெளிவாக இருப்பார் சரியோ தவறோ அதில் உறுதி.நடுநிலை என்ற போலித்தனம் கிடையாது .நான் பாராட்ட பல விஷயங்கள் அவரிடம் உண்டு ஆனால் எப்படி விஜய்க்கு ரசிகர் ஆனார் என்று தோன்றும்:) இந்த லட்சணத்தில் கமலைப் பற்றி விமர்சனம் பண்ணும் பொழுது கொலை வெறி வரும் பாருங்க..:) .என்னிடம் ஈகோ பார்த்த நினைவில்லை.வ.பா என்றால் விகடனில் சிலருடைய ட்வீட்ஸ் மட்டுமே திரும்ப திரும்ப போடுவாங்க.அவங்க RT செய்திருந்தால் மட்டுமே ஒருவேளை வரும்.அப்படி பட்ட பிரபலங்களில் இவரும் ஒருவர்.என் முதல் வ.பா ட்வீட் இவர் RT செய்ததால் வந்ததுதான் .இவர் RT செய்ய சும்மா புகழ்ந்தாலே போதும்.உடனே நம்பிடுவார்.

உலக கோப்பை கிரிகெட் இவரது கமென்ட்களால் சுவராசியப்பட்டது.தோழி அப்டேட்ஸ் எல்லாம் நிஜமாகவே உள்ள ஒரு தோழிக்கு என்றே நினைத்தேன்.அது கற்பனை என்ற சுவராசியத்தை உடைச்சப்போ எப்படியோ ஆகிடுச்சு.அதே போல குஜ்ஜூ அப்டேட்ஸ் எல்லாம் ரொம்ப ரசித்திருக்கிறேன்..இன்று துப்பாக்கியின் வெற்றியைக் கொண்டாட கார்க்கி இல்லாத டைம் லைன் வெறுமையாக காட்சியளித்தது.கலகலப்பு சமீபமாக மிஸ்ஸிங் தோழி அப்டேட்ஸ் தோழியோடு வந்து அப்டேட் செய்கின்ற நாளை வெகுவாக எதிர்பார்க்கிறேன் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளோடு....
ஏழாம் அறிவு வேலாயுதம் ரிலீஸ் ஆனப்போ   சொக்கன்  கேட்டது :) டைரி மில்க் விளம்பரத்தில் அந்த இறுதி 0.31டு .0.33 முகபாவம் செம :)) 
ஒரு நேரம் பெருக்கெடுத்து ஓடுகிறது  
ராமதாஸ் சார் போஸ்ட் :) 
ஆக மோசமான படைப்பு  
எட்டாக்க‌னி 
பிடிச்ச பாடல் கமெண்ட் : "மலர்களே மலர்களே என சித்ரா உருகும் பொழுது பூமியில் ஒரு லட்சம் பூக்களாவது பூத்திருக்கும் என்பது நிச்சயம்"

முக்கியமான ஒன்று சொல்ல மறந்துட்டேனே ட்விட்டரில் யார் powerful இந்திய அளவில் என கணக்கெடுப்பு நடந்தது.அதில் நம் தமிழ் டிவிட்டர்கள் அனைவரும் சேர்ந்து ஓட்டு போட்டு இந்தியாவின் நம்பர் ஒன் (கலி முத்திடுத்து : P ) என இவரை தேர்ந்தெடுத்து விட்டோம்.அப்போ வழக்கம் போல இவர் போட்ட ஒரு மொக்கைக்கு தாத்தா கேட்டது :)
தாத்தாவின் பிறந்த நாள் வாழ்த்து:)..1 


தாத்தாவின் பிறந்த நாள் வாழ்த்து:)..2

                                     @navinmmr :
 ட்விட்டர் வந்த நாள் முதல் அக்கா என்ற அழைப்பும் அந்த அழைப்பின்  நோக்கத்தில் இருந்து இன்று வரை பிறழாத மரியாதையும் கொண்ட ஒருவன்.உரிமையோடு "டா"  போட முடிகின்ற தம்பி:)பொதுவாக இணையத்தில் நான் கண்ட வரையில் அக்கா,அண்ணன் போன்ற அழைப்புகள் அவ்வளவு நம்பகத் தன்மை இல்லை.போலித்தனமான அழைப்பும் தன் காரியம் ஆகாவிடில் அப்படியே உல்டாவாக மாறுவதையும் பார்த்திருக்கிறேன்.நிச்சயம் எந்த அண்ணனும் பழகுகின்ற சாக்கில் வரம்பு மீறி பேசுவதையும் வேடிக்கை பார்க்க மாட்டான்.ப்ரியம் வெளிப்படுத்துகின்ற தருணங்களை விட கண்டிக்கும் தருணங்களே அதிகம்.ஒரு ஆணின் பார்வை எப்படி இருக்கும் அறிந்து வைத்திருக்கும் ஆண் என்பதால்.அதனால் அந்த அழைப்பை இங்கே எவர் சொன்னாலும் நான் உள்மனம் வரை கொண்டு சொல்வதில்லை.சகோதரி என போலியாய் அழைத்து மோசமாய் நடந்து கொள்பவர்களும் சரி ஏதோ தன்னிடம் வேறு எதற்கோ முயற்சி செய்வது போல கற்பனை பண்ணிக்கொண்டு சகோதர அழைப்புகளைப் பயன்படுத்தி அவமானப்படுத்துவதுவும் சரி இரண்டுமே  மிக அருவெறுக்கத் தக்கவை நவீன் பழகுகின்ற விதத்தில் உண்மையாக கூட ஒரு சிலரும் இருக்கக் கூடும் உணர்த்தியவன்.எந்த தருணத்திலும்  என்னை விட்டுக் கொடுத்ததே இல்லை என்பது நெகிழ்வு:)என்னதான் நன்றாகப் பேசினாலும் ஒரு இடைவெளியிலேயே சிலரை நிறுத்தி வைத்திருப்பேன்.எப்பவும் இருக்கின்ற எச்சரிக்கை மற்றும் உள் உணர்வு காரணமாக.ஆனாலும் எப்படிப் பழகுகிறார்கள் என்ற கவனமும் இருந்து கொண்டே தான் இருக்கும்.

பின் தொடர்ந்தாலும் தொடராவிட்டாலும் இன்றளவிலும் ஒரே போல பழகக் கூடிய நபர்களின் ஒருவன்.நான் பின்தொடர்ந்த பொழுது நீங்கள் பின்தொடர்வது மகிழ்ச்சி என்றாலும்  எனக்கு என்னவோ போல இருக்கு நான் கண்டதையும் எழுதுவேனே unfollow  செய்து விடுங்களேன் நான் தவறாய் எடுக்க மாட்டேன் என்று  சங்கோஜத்துடன் சொன்னது நினைவிருக்கு:) முன்பை விட இன்று ஆசிரியர் ஆன பிறகு ஓரளவு முதிர்ச்சியைப் பார்க்கிறேன்  .வேலை இல்லை எனப் புலம்பும் பொழுதெல்லாம் வருத்தமாக இருக்கும் இப்பொழுது மகிழ்ச்சி:) 
நினைவு பூக்கள் 

 #undo
தனிமை  
யார் யாருக்கு வில்லன்?@minimeens :


டிவிட்டருக்கு யார் புதிதாய் வந்தாலும் நிச்சயம் அவர்களின் முதல் follower -ஆக மினிமீன்ஸ் ,பாரதி ,கரையான் எவரேனும் ஒருவர் இருப்பார்கள்.(டிவிட்டரில் ஆக்டிவாக இல்லாத என் அண்ணனுக்கும் இவங்க follower :P (அண்ணா id தரப்பட மாட்டாது அப்புறம் நான் பூட்டிகிட்டு அலையணும் :D ) அரசியல் ,நகைச்சுவை ,தத்துவம் ,யதார்த்தம் என அனைத்து ட்வீட்ஸ்-உம் நல்லாருக்கும்.இவருடைய வேலை விதிகள்  ரசிக்கும் படி இருக்கும்.படிச்சது sms என்றால் மறக்காமல் அதைக் குறிப்பிட்டு விடுவார்.மின்மினி தேசத்தில் வெறும் 30 செகன்ட் கதைகள் ரசிக்கும்படியாக இருக்கும்.இவரின் தில்லு துர ,டேனியின் குறும்புகள் பற்றிய பதிவுகளுக்கு நான் ரசிகை அதிகம் RT செய்ய மாட்டார்.இப்போ பண்றார்.
ஆரம்ப காலத்தில் பேயோனுடன் மட்டுமே முரண் பட்டு பார்த்திருக்கிறேன்.மற்றபடி அனைவரையும் ஊக்கப்படுத்துவதால் இங்கே அனைவருக்கும் பிடித்த நபர்களின் பட்டியலில் நிச்சயம் இவரும் இருப்பார்.
என் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என உரிமையாக சண்டையிட்டு இருக்கிறேன்.சிரித்துக் கொண்டே நிஜம்மா கவனிக்கல உமா ன்னு டேனி குடும்பத்தில் இருந்து வாழ்த்து எனச் சொன்னார் :)என் blog திறந்து வைக்கும் தைரியமே துளி கூட இல்லை எனக்கு.பலரும் பல விதமாய் எழுதி வைத்திருந்ததில் இது போன்றெல்லாம் சுவராசியப்பட வைக்க நம்மால் முடியுமா என்றொரு தாழ்வு மனப்பான்மை இருந்தது.ஆனால் இவருக்கும் இன்னும் சில நண்பர்களுக்கும் blog லிங்க் அனுப்பி வைத்திருந்தேன்.எழுத எழுத தான் வரும்.தைரியமாக திறங்க என்று ஊக்கப்படுத்தி திறக்க வைத்தவர் இவரே.ராஜா ரசிகர் :)
என்னதான் மனைவி கிண்டல் ட்வீட் போட்டாலும் இன்று மனைவியையும் டிவிட்டருக்கு அழைத்து வந்து டிவிட்டரை புரிந்து கொள்ள உதவிக் கொண்டிருக்கிறார்:)
இவர் ட்வீட்ஸ் காப்பியடிக்கப்பட்டது எனத் தெரிந்தால் கூட அதை கோபமாக முன் வைக்க மாட்டார்.ஒரு தகவலாய்ச் சொல்லிவிட்டு அடுத்த வேலை பார்க்கப் போய் விடுவார்.எல்லாமே ஏற்கனவே சொல்லப் பட்டக் கருத்துகள் தான் எல்லா வற்றிற்கும் நாம் உரிமை கோர முடியாது உமா என்பார் புன்சிரிப்போடு
அரசியல்   ஸ்டீவ்ஜாப்ஸ். 
https://twitter.com/minimeens/status/131560279866744833 
https://twitter.com/minimeens/status/118971465101094912
உயிர் நண்பன் 
பெருந்தனிமை 
முள்வேலி  
அனுபவம் 
அப்பா 

@lathamagan :

 இவர் வைக்கும் குழந்தை DP களுக்கு நான் ரசிகை :)
ரஜினி ரசிகர். இரண்டு வரி கவிதைக்கே எனக்கு நாக்கு தள்ளும்.எப்படித்தான் நீள நீளமாக கவிதை எல்லாம் எழுதுகிறாரோ என ஆஆ!ச்சர்யமாய் இருக்கும் !
நச் என எழுதுபவர் என யார் எவரைக் குறிப்பிட்டாலும் அவர்களை சீதா என்ற அளவை மூலமாகவே ஒப்பிடுவேன்.இவரும் அப்படிப் பட்டஒருவர். ட்விட்டர் டபுள்ஸ் என ஒரு டேகில் சீதாவையும் இவரையும் இணைத்து போட்டப்போ "ஆகா நான் உங்க அளவுக்கு வொர்த் ஆ " ன்னு சீதா கேட்டிருக்கார்.வர எதையோ கிறுக்கி விட்டுச் செல்ல என இருப்பார்.இவரது கெளரி புலம்பல்களை ரசிக்க எப்பவும் ஒரு கூட்டம் உண்டு அதில் நானும் உண்டு.பித்து ,வெகு யதார்த்த பேச்சுலர் ட்வீட்ஸ் என எல்லாமே நச் தான்.பல சமயங்களில் நகைச்சுவை வெகு இயல்பாக அப்பாவித்தனத்தில் இழையோடும் :)அன்று முதல் இன்று வரை ரொம்ப பிடித்த டிவிட்டர்களில் இவரும் ஒருவர்.விகடன் சொல்வனம்  அடிக்கடி இவர் கவிதைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறேன்.பழைய ட்வீட்ஸ் லிங்க் கிடைக்காததில் கொடுக்க முடியல.
குட்டையில் மிதக்கும்  
காதலியின் எதிர்பார்ப்பு
மறக்கத்துடிக்கும் முகம்
ஒரு சூரிய‌ அஸ்த‌ம‌ன‌த்தில் 
விழித்திருப்பவனின் இரவு 
பாலைவனங்களின் கடவுள் 
இரண்டு கவிதைகள் 
மடி முட்டும் ஆடுகள் 
யாருக்கோ 
மன நோய்? 
இடி மின்னல் 
@jill_online :

பொண்ணுங்க TL ல இருக்காங்களா இல்லையா என்ற கவலையே இல்லாமல் கண்டதையும் எழுதக் கூடிய நபர்.ஆரம்பத்தில் unfollow செய்துடலாமா என்ற யோசனை இருந்ததுண்டு.அதைத் தடுத்து நிறுத்தியது இவருடைய நகைச்சுவை உணர்வும் யதார்த்தம் கலந்த பல ட்வீட்ஸ் தான்.இரத்தம் கக்கிச் சாவீங்க ட்வீட் க்கு இவரே முதல் ஓனர் :) 
"அமாவாசை அதுவுமா நாலு பேரு அன்பாலோ பண்ணிட்டுப் போயிருக்கீங்க நீங்க ரத்தம் கக்கித் தான் சாவீங்க"
என் TL ல வெள்ளைக்கார பொண்ணு DP வச்சுட்டு அடிக்கடி சுத்துற ஆள் இப்போ இந்த சின்ன பையன் DP பொருத்தமா அமையவும் மாத்தறது இல்லை :) இது போன்ற தத்துவங்கள் தோன்றினாலும் வாழ்க்கை ட்வீட் போட்டால் இப்படி  கதறிடுவார்:) ஆரம்பத்தில் பிடிக்காமல் இருந்து பின்பு மிகவும் பிடித்துப் போன டிவிட்டர்களில் இவரும் ஒருவர்.கட்டுரை.காமில் இவர் எழுதிய கட்டுரைக்கு கருத்து கேட்ட பொழுதுதான் அட இந்த அளவுக்கு மதிக்கிறாரே என ஆச்சர்யம் .ஏன் என்றால் அடிக்கடி இருவரும் பேசிக் கொண்டதே கிடையாது.
 .இவருடைய blog சுவராசியமான ஒன்று.சுருக்கமா நறுக்குன்னு சொல்ல வந்ததை தெளிவா சொல்றது எப்படின்னு கத்துக்கணும்:)  
மிகவும் ரசித்த பதிவு:)
RT @பக்கத்து_சீட்காரர்  
storytoVijay 
தூக்கம் வராத ராத்திரிகள் 
தோழி அப்டேட் 1   
தோழி அப்டேட் 2  

அதெல்லாம் முடியாது :)
இனிய இரவு  
பகுத்தறிவாதிகள்?! 
எங்காத்தாடா:) 
யாருடைய தாயோ 
என்னங்கடி 
பளார் :) 
https://twitter.com/jill_online/status/139191266712883201 
டேய் ஆம்பள கொசுங்களா 
அறிவுஜீவியாக காட்டிகொள்ள  
பளார் :) 


                                    
 @krpthiru :
                                   
சீதா ,லதாமகனுக்குப் பிறகு எனக்குப் பிடித்த வரிசையில் பிடித்த எழுத்து இவருடையது.வார்த்தைகளை நூற்றி நாற்பதுக்குள் வசப்படுத்தத் தெரிந்த மனிதர்.டிவிட்டரில் அதிகம் followers அதிகம் இல்லாத காலத்தில் இருந்தே பார்த்திருக்கிறேன் RT ,followers க்காக எந்த மெய்நிகர் பிரபலங்களையும் போலியாக புகழாத நபர்களில் ஒருவர்.ரஹ்மான் ரசிகர் :) அதை விட  பேயோனின் நுட்ப எழுத்திற்கு ரசிகர் ஒரு பெரிய புன்னகையோடு RT ஆகும் பேயோனின் ட்வீட்ஸ் யாவும்.அப்படி என்ன இதில் புன்னகைக்க என நுட்பம் புரியாமல் நான் பே..பே ..:) 
விவாதங்களில் இருந்து பெரும்பாலும் எஸ்கேப்.ஜில்,F 5 here (இவர் தமிழில் எழுத ஆரம்பித்தால் தொடரலாம் என வெயிட்டிங் ஹ்ம்ம்..எங்க உலக நாயகன் தமிழையும் தமிழ் நாட்டையும் கண்டுக்க மாட்டேங்குறார் ரேணு சொன்ன மாதிரி இங்க நடக்கிற விசயங்களில் பாதிப்பே இல்லாமல் அண்டார்டிகாவில் ஆடு காணாமப் போறதைப் பத்தி கவலைபட்டுகிட்டே இருக்கார்:P எனக்கு உலக விசயங்களில் நாட்டமில்லை என்பதால் இவரது குறும்பு ட்வீட்ஸ் மிஸ் செய்கிறேன் ) மூவரும் மாறி மாறி கலாய்த்து கொள்வது ரசிக்கும் வகையில் இருக்கும்.ஊர் பஞ்சாயத்து தலைவர் டிவிட்டரின் ஒரே நாட்டாமை திருமாறன் தாத்தா அவர்களின் அடி விழுதுகளில் ஒருவர்:).அதனால் அடிக்கடி இணைய நடப்புகள் கூகிள் பஸ் ப்ளஸ் வேறு என அனைத்தும் லிங்க் உடன் வரும் :)) இது போன்ற புரிதல்கள் நிறைய பேருக்கு வேண்டும் என நினைக்கிறேன். இது எது சம்பந்தமான உரையாடலாக இருந்திருக்கும் என நான் சொல்லவும் வேண்டுமா ?:)
சுமாரான படமோ சூப்பரான படமோ தான் பார்த்துவிட்டே முடிவு செய்வார் ட்விட்டர் விமர்சனங்கள் எல்லாம் செல்லுபடியாகாது.என் TL ல அவன் இவன் படம் மோசமில்லை என்று சொன்ன ஒரே நபர் இவர்தான்.
இவர் பேச்சுலர் புலம்பல் ட்வீட்ஸ் ,சைட் அடிச்சது போன்ற யதார்த்த ட்வீட்ஸ் களே அதிகம் வ.பா.வில் பார்த்திருக்கிறேன்:)
அதிக புத்தக வாசிப்பும் உண்டென நினைக்கிறேன்.சமீபத்தில்    இந்த ட்வீட் 
படித்துவிட்டுச் சிரித்தேன்:) 
எந்த விசயத்தையும் ஒரு மாற்றுப் பார்வை யில் நோக்கும் விதம் பிடிக்கும் 
எந்த டேக் -உம் இல்லாட்டி தமிழ் டிவிட்டுலகம் கை நடு நடுங்கி ஏதாவது ஒரு மொக்கை டேகை போட்டு இருக்கிறவர்களை டென்சன் ஆக்கும்:)அப்போ இவர் சொன்னதை ரசிச்சு சிரிச்சு இருக்கேன் :) 
https://twitter.com/krpthiru/status/100805539902136320 
கண்ணீர் தலை(யில்)க்கனம் 
நிலம் பார்க்கும் நீலம் 
அவதானிப்பு 
வீதியில் விளையாடும் காற்று  
கரும்புள்ளி. 
உறக்கம்  
எத்தனை வருடமாய் நடைபயில்கிறது
மிகப்பெரிய மரியாதை
கற்பனை
யோசிக்காமல் இருந்திருக்க வேண்டும்
நிலவொன்று கண்டேன் 
உயிர் பயம் 
படம் வரஞ்சு பாகம் 
கற்பெனப்படுவது யாதெனில் 
ஒரு நொடி 
நீருக்குள் மீன் 
ஒட்டு மொத்த டிவிட்டர்களின் குர(அலற)லாக :) 


..இன்னும் வரும் :)..

3 comments:

jroldmonk said...

மிக சரளமான இயல்பான நடை.அருமை.. ரொம்ப உற்சாகத்தோட எழுதியிருக்கீங்கன்னு படிக்கும் போதே தெரியுது.இதன் பின்னால் இருக்கும் உழைப்பு பிரமிக்க வைக்குது.கீப் இட் அப்.. வாழ்த்துகள் :-)

karki bava said...

இவ்வளவு சுட்டிகளோடு பொறுமையா எழுதியிருப்பதன் மூலம் எங்கள எல்லாம் எவ்ளோ புடிக்குதுன்னு தெரியுது,,

நன்றி உமா..

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நன்றி karki and monk :)