Sunday, December 30, 2012

எனக்கு பிடித்த டிவிட்டர்கள்!...5


இரண்டு வருடத்தை மெதுவாய் அசை போட எனது favorites உதவி இருக்கின்றது.ஒவ்வொருவரும் எனது இனிமையான பொழுதுகளில் பங்கெடுத்து இருக்கின்றார்கள்.இதற்கு மேல் விரிவாக எழுத எனக்கு நேரம் ஒத்துழைக்கவில்லை.பழைய ட்வீட்ஸ் favorites ல (3000 மேல)காணாம போய்டுச்சு :-O .ஆப்பிள் பிடித்தது எனச் சொன்னால் ஆரஞ்ச் பிடிக்கவில்லை என அர்த்தமில்லை என்பது போல இவர்களைத் தவிர நான் பின்தொடரும் எவரையும் பிடிக்கவில்லை என அர்த்தமில்லை.எவரையும் பிடிக்காமல் இப்பொழுதெல்லாம் தொடர்வதே இல்லை என்பதை மீண்டும் நினைவுறுத்துகின்றேன்.ஏன் நாங்கள் இல்லையா என உரிமையாக் கேட்ட நட்புகளுக்கும் எனது நன்றி :)   நான் பின்தொடராவிட்டாலும் தொடர்ந்து ஊக்கமும் மரியாதையும் கொடுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி:)
பிடிக்காவிடில் சத்தமில்லாமல் unfollow செய்துவிட்டு தொந்தரவு தராமல்  தன் வேலையை மட்டும் பார்க்கும்  unfollowers க்கும் நன்றி:)
12 , 3 , 4 பாகங்களையும் இதுவரை
பொறுமையாக படித்தவர்களுக்கும் நன்றி :)


இது டிவிட்டர்களுக்கான அப்ரைசலும் அல்ல.மனதில் தோன்றியதை சொன்ன ஆறுதலும் ஆசுவாசமும் மட்டுமே:)ஏன் என்றால்  எனக்குப் பிடித்தவர்கள் உங்களுக்குப் பிடித்தமானவர்கள்  பட்டியலில் இடம் பெறாமலும் போகலாம் .ஏன் நானுமே கூட :) உங்களுக்குப் பிடித்தவர்கள் என்னைக் கவராமலும் இருந்திருக்கலாம்:)

 இருந்தாலும் இன்னும் ஒரு பதிவு பாக்கி இருக்கிறது :) சிறப்பாக சிலரை மொத்தமாக குறிப்பிட வேண்டும் என்பதால் :)


@selvu :

முட்டாளாய்க் காட்டிக் கொள்ளும் புத்திசாலித்தன எழுத்துகள் இவருடையவை.முதல் வரியில் ஒருமாதிரியும் அடுத்த இரண்டாம் வரியில் வேறு மாதிரியும் புரிய வைக்கும் சூட்சுமம் கொண்ட எழுத்து.என்ன காரணமோ தெரியவில்லை இவர் இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை :(. RJ ஆக வேண்டும் என்பது இவருடைய கனவு.நிறைவேறியதா எனத் தெரியவில்லை.எவரேனும் FM -இல் கொஞ்சம் செல்வாக்கு இருந்தால் இருந்தால் இவரை அறிமுகப்படுத்தி உதவவும்.நிச்சயம் திறமை சாலி.
இப்படி selvueffect என  ஒவ்வொருவரையும் எழுத வைத்தவர்.கண்டிப்பாக இங்கே கொடுக்கப்பட்ட சுட்டிகளை படியுங்கள்.நிச்சயம் நல்ல எழுத்துகளை படித்த திருப்தி உங்களுக்குக் கிடைக்கும்.இவருடைய blog கூட சுவராசியங்கள் நிறைந்த ஒன்றுதான்

பொருள்!
கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல்
எல்லா நிழற்குடைகளும்  
பேருந்தின் சக்கரத்திற்கடியில்  
மூக்கிற்கு என்ன வந்தது?
தந்தையின் தைரியம்
சோகம் தீரப்போவதில்லை!
மழை!
புவிஈர்ப்பு விசை
கனவில் பார்த்த யானை
கடும் குளிர் 
அம்மாவின் வேண்டுதல்கள்!
யாரும் சொல்லித்தராமலேயே
கவிதைக்கான சொற்கள்
செருப்பு
கொடுத்துவைத்தவர்கள்!
எளிமை
அழகான காட்சிகள்
பறப்பது 
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?
பெரும் பாறையொன்று


@kaatuvaasi :
வெகு யதார்த்தமான டிவிட்டர்களில் ஒருவர்.டேமேஜர் புலம்பல்கள்,பீர்,பிகரு கோவில் சைட்டு என அத்தனை கலைச் சொற்களுக்கும் காணப்படும் இவரது ட்வீட்ஸ் ல:)சனிக்கிழமை மாலை ஆனால் பீர் அப்டேட்ஸ் வந்துவிடும்.மிக சமீபத்தில் நான் எதுவும் சங்கடப் படும் படி எழுதி இருக்கிறேனா என்ற பொழுது ஆம் என சொல்ல மனம் வரல.ஒன்று ஆரம்பத்தில் வித்தியாசமாக இருந்தாலும் போகப் போக புலம்பல்கள் பழகி விட்டன.நகைச்சுவையாகவும்  இருக்கும்:)
அடிக்கடி இருவரும் பேசிக் கொண்டதில்லை.ஆனாலும் எப்பவாவது நான் அடிக்கின்ற கிண்டலை புன்னகையோடு ரசித்துக் கடப்பவர்களில் ஒருவர்:)
தீயா வேலை செய்யணும் கொமாரு என்ற இவருடைய ஒரு ட்வீட் வ.பா.வில் வந்த பின்பே அடிக்கடி கொமாரு TL ல தென்பட்டு பார்த்திருக்கிறேன்.இவரெல்லாம் கொஞ்சமாகவே பின்தொடர்கிறாரே இவரையெல்லாம் தட்டிக் கேட்க ஆளே இல்லையா ?:)



அம்மாவின் அன்பு
#அம்மா
நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற
உயிரும் உணர்வும்
மவுனம்
வரலாறு
கடவுளின் பேரன்பு
கருமை நிறத்தில் ஒரு வெளிச்சம்
ஏறுவது என்ற பதம்
ஒருசிலரின் முகங்கள் மட்டும்
சனி பகவான் 
கழிந்த காலத்தை விட
யோவ்மேனேஜரு
#FamousLies
திங்கள்கிழமை
வெறுமை
அடப்பாவமே...!
#drinkersdialogues
கேப்டனுக்கு பிறந்த நாள் வாழ்த்து:)
பிச்சை வாங்கவேண்டும்
தொழில்ல ஒரு சின்சியாரிட்டி வேணாம்
ஒரு எழுத்தாளன் உதயமாகிறான்...


@Nattu_G :

கார்க்கியின் அடி விழுது :) மரண மொக்கை போடுவதில் குருவை மிஞ்சிய சிஷ்யன்.பின்தொடர்ந்த அன்றே நீங்க ரொம்ப மொக்கை போடுவீங்களான்னு நான் கேட்டதை பார்த்து பரிதாபமா மற்ற நண்பர்கள் என்னை பார்த்ததும் நாம் படும் அல்லலை பட இன்னும் ஒரு ஆள் கிடைத்த மகிழ்ச்சியிலும் துள்ளிக் குதித்ததை மறவேன் :) ஓலைக் கணக்கனை ஓலைக் கண்ணன் என வாசித்த ஓராயிரம் டிவிட்டர்களில் நானும் ஒருத்தி:) இந்தப் பதிவிற்கு பின்பே இவரை நான் கவனிக்க ஆரம்பித்தது ஏனென்றால் நானும் பலூன் ப்ரியை:)
தன் குழந்தை வரைந்ததை ஒருவர் வெளியிட அதை வைத்தே பதிவு எழுதி கலக்கி விட்டார் :) அட்டகாசமான எழுத்து நடை என அதிலும் குருவை மிஞ்சிய சிஷ்யன்தான்.தாத்தா ட்விட்டர் வர முடியாமல் போகும் நேரத்தில் இவரையும் இன்னும் சிலரையும் தான் நியமித்துவிட்டுச் செல்வார் சண்டைகளை சரியாக தொகுத்து தருவதற்கும் பிற லிங்க் எடுத்து தருவதற்கும் :) ட்விட்டரை பத்திரமா பார்த்துக்கச் சொல்லி கண் கலங்க ஒப்படைத்து விட்டுச் செல்வார் :))
சொல்ல விட்டுப் போனது முடிந்தவரை அழகாய்க் காட்டும் DP வைப்பவர்கள் மத்தியில் விதம் விதமான கோணத்திலும் கோணலாகவும் வைத்து அதையும் ரசிக்க வைத்துவிடும் வல்லமை நட்டுவிடம் உண்டு.தாத்தாவின் அடி விழுதும் கூட என்பதால் லிங்க் உடன் தான் கமெண்ட் வரும்:)அடிக்கடி ட்ராபிக் போலீசிடம் மாட்டி புலம்பும் புலம்பல்கள் ரசிக்கும் ரகம்:)

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
பல்லி
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி :)))
நட்டு கேக்குறாருல்ல பதில் சொல்லுங்க:)
நான் என்னைச் சொன்னேன்
அம்மாவுக்கு ஒரு சின்ன இன்பர்மேசன்!
ஒழுங்கா நமீதா பேச்சை கேட்டிருந்தா?:)
கலைஞன்
#FamousLies
#140inRamayan
ஹேப்பி பர்த்டே ஆஞ்சநேயா! 
ஓர் உன்னதக் கலைஞன்



                                   
                                             @RaguC

முல்லைபெரியார் டேம் டேக்   அப்போதான் இவர் அதிகம் கவனிக்கப்பட்டார் g_for_guru இவர் நன்றாக எழுதுவதாக பரிந்துரைத்த பின்பே தொடர்ந்தேன் .
இப்படித்தான் அடிக்கடி பொங்குவார் :) .நானும் இன்னொரு நபரும் அடிக்கடி கிண்டல் செய்து கிண்டல் செய்து இவரது பொங்கலைக் குறைத்தோம் .(தேங்காய் குரலில் )உங்களுக்கு என்னங்க நேரு மாதிரி பொசுக் பொசுக்குனு கோபம் வந்துருது "எனச் சொல்லவும் சிரித்துவிட்டார்:) DP கூட பாருங்க முறைச்சுகிட்டே :)blog ல இருந்து எடுத்தேன் :)
#KillingFields #koodankulam என முக்கியமான டேகில் எல்லாம் அதிகம் பங்கேற்றார் .
ஒரு குட்டி டிபிகேடியாக வலம் வந்து கொண்டிருந்தார்.நல்ல ஆழ்ந்த விவாதங்கள் செய்யக்கூடியவர் தான் எனினும் இறுதியில் ட்விட்டரில் எந்த முடிவும் எட்டாது என்பதை உணர்ந்த பின் தானாகவே அனைத்தும் குறைத்துக் கொண்டார்.ஆச்சர்யமாய் திருமண அழைப்பிதழ் வந்தது:)ஆத்மார்த்தமாய் வாழ்த்தினேன்:)

நிறைய ட்வீட் லிங்க் மிஸ் ஆனதில் எடுத்துக் கொடுக்க முடியல :(

அப்பப்போ கவிதைகள் வரும் :)
மாறுங்கப்பா:)
எதிர்காலம்
மறதி என்ற ஒன்று மட்டும் இல்லாவிடில்
ஏன் வேண்டும் ஈழம்
அம்மு கவிதைகள்


 @Pethusamy :

மனநோயில் இருந்து மீண்டு காதலித்த பெண்ணை இவர் கைப்பிடித்த விதம் அறிந்து ஒரு மரியாதை உண்டு .
அதே போல ஏதேனும் விஷயம் ஒரு உரையாடலோ விவாதமோ செய்தால் விதண்டா வாதமாக அல்லாமல் சரி என்றால் ஏற்றுக் கொள்ளக் கூடிய நபர் என்பதால் இவருடன் பேசுவது எனக்கு மிகப் பிடிக்கும்.அழகான இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை.மனைவி குழந்தைகள் பற்றிய த்வீட்டுகள் மரியாதையான வார்த்தைகளால் இருக்கும்.இவரது புத்தர் ட்வீட்ஸ் பெரும்பாலும் ரசிக்கும் வகையச் சார்ந்தவை

டிவிட்டருக்கு இனி வருவதில்லை என்ற அறிவிப்பை சில நாட்கள் முன்பே பார்த்தேன்.வருத்தமளிக்கிறது.


தந்தையின் அன்பு எதுவரை?
 ட்விட்டரில் எது நிதர்சனம்
காதலுக்கு வாய்ப்பில்லை
தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
சந்தேகம்

 @RealRenu :

ஆரம்பத்தில் இருந்து பிடித்த பெண்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.ஏன் மனதிற்கு மிக நெருக்கமான தோழிகளும் உண்டு இங்கே.எல்லாரைப் பற்றியும் நிறைய எழுதலாம்.நேரம் போதவில்லை.அதே சமயம் எவரேனும் ஒருவரைப் பற்றியேனும் குறிப்பிடலாம் என்றதும் நான் ரேனுவைத் தேர்ந்தெடுத்தேன்.காரணம் ஒருவர் ஆரம்பத்தில் ஈர்ப்பதும் பின்பு பிடிக்காமல் போவதும் சகஜமாகி விட்ட ட்விட்டரில் ஆரம்பத்தில் அறவே பிடிக்காமல் இருந்து ,எந்த கவன ஈர்ப்பும் செய்யாமல் தன் போக்கில் இருந்தே என்னை ஈர்த்த ஒரே பெண் ரேணு மட்டுமே.
இவர் சகஜமாக பழகுவதைக் கண்டு பலருக்கும் இவர் fake id யோ என சந்தேகம் இருந்தது.ஆனால் எதற்கும் அசராமல் பேசுவதும் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதும் ஆச்சர்யம் தான் எனக்கு.

இன்னொன்று இவர் இலகுவதாகப் பழகுவதால் மற்ற பெண்களும் இதே போல இருந்தால் என்ன என்ற கேள்வியும் வந்தது.எதையும் கண்டுகொள்ளாமல் ரேணுவாக எதற்கும் அமைதியாக அரட்டையாக அனைத்திற்கும் கேள்வி கேக்கும் சௌமியாக இருக்க விருப்பமில்லை.திமிர் பிடித்த உமாவாகவே இருந்துவிட்டுப் போகின்றேனே:)

உண்மையில் இவரைப் பற்றி எவரேனும் கேவலமாக பேசினால் உள்ளூர வருத்தமாகவே இருக்கும்.ஆனால் அதைப் பற்றி அவரே ஜஸ்ட் லைக் தட் எனப் போகும் பொழுது மேற்கொண்டு பேச எதுவும் இல்லை என அமைதியாகவே இருந்துவிடுவேன்.நெருங்கிய நட்பும் கிடையாது.
இப்படி பல முரண்பாடுகளும் எதிர் துருவமாக ரேணு இருந்தபொழுதிலும் என்னை ஈர்த்தது அட்டகாசமான நகைச்சுவைத் திறனும் குறும்புத் தனங்களும்.அறுந்த வாலு குறும்புக்காரி ஆனாலும் இவ ஏஞ்சலு பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் மெலிதான புன்னகையுடன்இவர் நினைவும் :)


வெகு தயக்கத்திற்கு பின் லிஸ்ட்ல போட்டு வைச்சேன். ஜில் கட்டுரை.காம் க்கு ஒரு கட்டுரை எழுத அதற்கு இவரது எதிர்கட்டுரை வெகுவாக ஈர்த்துவிட்டது.அரட்டையிடம் சொல்லி என் வாழ்த்துகளைச் சொல்லச் சொன்னேன்.கூரியர் செர்வீஸ் வேண்டாம் நானே பின்தொடர்ந்துவிடுகிறேன் என ரேணு  சொல்ல நானும் மகிழ்வோடு தொடர்ந்தேன்.
நம்மைப் பிடிக்காதவர்களை ஈர்ப்பது வெகு சிரமம்.நிச்சயம் என்னால் முடியாது.ரேணு செய்ததால் இந்த சிறப்பு இடம்
இன்றளவிலும் நெருக்கமாக இல்லாமல் குறும்புகளை மட்டும் தள்ளி நின்றே ரசிக்கின்றேன்.நான் மட்டுமல்ல ரேணு தேங்கா சண்டைகளை ட்விட்டரில் அனைவருமே ரசிப்பார்கள் என்றே நினைக்கிறேன்:)
  அனைத்தையும் இலகுவாக எடுக்கும் இந்த குணமே ஆபத்தாய் போகாமல் இந்த இயல்பை அப்படியே நேசித்து ஏற்றுக் கொள்ளும் கணவர் கிடைக்க மனமார வாழ்த்துகிறேன்:)





பவர் ஸ்டார் வலிய சினிமா சான்ஸ் தரேன்னு சொல்லியும் அதை மறுத்துட்டாங்க :)

எதாச்சும் கொடுத்தீங்கன்னா :)
கொலைவெறி
நாணத்தால் விலகி செல்கிறேன்
விகடனும் நானும்
எப்பேர்ப்பட்ட தலைமைப் பொறுப்பு:)
தன்னடக்கம் :)
டுபாக்கூர்:)
#MyLastWordsBeforeIDie :))
யார் தமிழன் ?:)
என்ன ஒரு கூறு கெட்டத் தனமான கேள்வி ஒரு பச்சபுள்ளைய பார்த்து:)
இன்பர்மேசன் இஸ் வெல்த்:)
ஆமா உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம்:)
நிச்சயம் வொர்த்துதான் :)
வகுத்தெரிச்சல்
பூமாலை 

Saturday, December 29, 2012

எனக்கு பிடித்த டிவிட்டர்கள்...! 4


மனதிற்கு பிடித்தவர்கள் என சொல்லும் பொழுதே அனிச்சையாக சிலரைத் தவிர்க்கவே முடியாது.அது போலவே இவர்களும்  :)



@naiyaandi :

அதிகம் பிறரிடம் பேசிப் பார்த்ததில்லை பேசினாலும் ஸ்மைலி தான்.அதிகம் ரிப்ளை செய்யமுடியாத அவஸ்தை மொபைலில் உண்டு என்பதால் ரிப்ளை செய்ய சிரமம் எனச் சொன்னார்.வர , நச் என ரத்தினச் சுருக்கமாக சில ட்வீட்ஸ் போட என இருப்பவர்.பெரும்பாலும் நல்ல ட்வீட்ஸ் ஆகவே இருக்கும்.
 பெயருக்குத் தகுந்தாற் போல் நையாண்டித் தனம் இழையோடும்:)அடிக்கடி இவரை நாய் துரத்துவதால் சில ட்வீட்டுகளும் சுவராசியமாய்க் கிடைக்கும்:)என் விரதம் முடிச்சப்போ அவர் சொன்னது :)
'பற்றி'க்கொண்டு
எம்மதமும் சம்மதமும்
அம்மா வைத்தியசாலை:) 
அளவிடறோம் 
 மேகங்கள் மாறுபடலாம்!
 நாங்கள் இருக்கிறோம்
கணிப்பு
எவ்வளவு நல்லவனாக இருக்கிறேன்
ஆசுவாசம்
மாவீரன்
முகமூடி போடத் தெரியாத பெண்கள்  
ஜீரணிக்க முடியாம  
யாகாவாயிரனும் நாகாக்க, 
அரசாங்க வேலை  
கடவுள்
எண்ணங்களை செதுக்கினேன்
 அவ்வ் :))
எண்ணி துவைக்க  
வள்'லொள்' :-) 
உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக  

 






 @jroldmonk :
ஒரு தலை நட்பும் உண்டு என்ற ட்விட் இவருக்கே பொருந்தும்.முடிந்தவரை நல்லபடியாகவே நடந்துகொள்ளும் ஒரு யதார்த்தவாதி.கவிதை நன்றாக எழுதுவார்.DP வெகு பொருத்தம் :) சாதரணமான பல விசயங்களை விளக்கம் கொடுக்க நேரிடும் பொழுது இந்த DP யில் இருப்பது போலவே யோசிப்பது போல இருக்கும் :)சீதாவின் தீவிர ரசிகர் .மொத்தமாய் அவர்ட்வீட்டை இவர் RT செய்ய "ஒரு mention போதுமே நண்பா இப்படியா டைம் லைனையே இடம் மாற்றுவது" என மெலிதாய்க் கடிந்து கொண்டார் .இவர் கவிதைக்கு சீதாவிடம் feedback கேட்க என் favorites லிங்க் கொடுத்து அதற்கு சீதா சொன்னது  ஒரு பெரிய மகிழ்ச்சி:)நிஜமாகவே ரசித்ததை எனக்கே எனக்காகவே திரும்ப படித்து ஆசுவாசிக்க மட்டுமே favorites செய்ததுண்டு.அன்றெல்லாம் ஆக்டிவிட்டி டேப் கிடையாது.அதனால் எவருக்கும் தெரியாது.நான் எதை fav செய்திருப்பேன் என்று.ஆனாலும் தேடி வந்து படிப்பவர்களில் இவரும் ஒருவர்.எதையும் எதிர்பாராமல் ஒரு காரியம் செய்யும் பொழுது அதற்கு நல்லதாய் ஒரு feedback கிடைக்கும் பொழுது ஒரு ஊக்கம் கிடைக்கவே செய்கின்றது:)அப்படி ஒரு ஊக்கமும் ஆரம்ப காலம் கொடுத்து எந்த ஒரு மோசமான சூழலிலும் விட்டுக் கொடுக்காத நட்பும் தனி மரியாதை ஏற்படுத்தி விட்டது.
பிடிக்காத பெண்ணை தேடிச் சென்று வம்பு இழுப்பவர்களை விட பிடித்த பெண்களிடம் தொந்தரவு செய்யாத வகையில் ஜாலியா பேசிட்டு  போய்டலாம்.இதில் மாங்க் இரண்டாம் வகை.கூடுமானவரை காயப்படுத்தாத பேச்சு இதனால் பிடிக்கும்.
இவர் ட்விட்டர்க்கு வரலன்னு மட்டும் யாரும் தேடினீங்கன்னா டான்னு DM மட்டும் உடனே வரும் :)எனக்கும் மட்டும் தான் இப்படின்னு நினைச்சேன் வேறுஒருவர் அதை பொதுவில் போட்டு உடைத்து விட்டார் :))("மாங்க் ட்வீட் போடாம ஏன் DM ல மட்டும் பேசிட்டு இருக்காப்புல ") 
எது அழகு ?

சில கவிதைகள் ..1  
எல்லையற்ற வானம்  
  அழகிய பொய்கள்
யாரோ ஒருவரால் 
நெருங்கிய நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் 
தமிழர்:) 
புகைப்படங்கள்  
கடந்து செல்லும் பொழுதுகளை  
எளிய வழி. 
டிவிட்டர் வந்து உணர்ந்த விஷயம் 
உறக்கமில்லா 
கடல் கடக்கும் பறவையின் சிரமம் 
விமர்சனம் :) 
இதில்தானே வாழ்கிறோம் 
உண்மைய சொன்னேன் 




@vembai krishna :

பொதுவாய் பல நாள் கவனித்த பின்பே பின்தொடர்வதுண்டு.ஒவ்வொரு ட்வீட்ஸ் -உம் நறுக்கு சுருக்கென இருக்க பார்த்த மாத்திரத்தில் பின் தொடர்ந்து விட்டேன்.அவ்வளவு அருமையாக இருக்கும்.பல விசயங்களில் கருத்து ஒற்றுமை உண்டு.மனதில் நினைத்ததை எழுத சரியான வார்த்தை சிக்காமல் எழுதாமலே விட்டுவிடுவேன்.ஆனால் டெலிபதி போல இவர் சுருக்கமாய் வந்து அந்நேரம் போட்டு விடுவார்.அட இதுக்குத் தானே இவ்ளோ சிரமப்பட்டோம் என்று தோன்றும்.பெரும்பாலும் என் மனநிலைக்கு ஒத்தார் போல பல ட்வீட்ஸ் இருந்ததுண்டு.யோசித்து சிரமப்பட்டு வார்த்தை கோர்த்து எழுதுவதை விட இவர் ட்வீட் போட்டதும் ஒரு RT முடிஞ்சுது ஜோலி :) அடிக்கடி வருகின்ற ட்விட்டர் இல்லை.ட்விட்டர் க்கு அடிக்ட் ஆகாத சில டிவிட்டர்களில் இவரும் ஒருவர்.ஆரம்பகாலத்தில் இருந்தே ஆத்மார்த்தமான மரியாதையும் பிரியமும் கலந்து பேசும்  டிவிட்டர்களில் இவரும் ஒருவர் என்பதால் வெகுவாகப் பிடிக்கும்:)


சில நச் ட்வீட்..1  
கற்பனைகள் 
விளக்கமளிக்காமல் விலகி விடலாம்  
வேடிக்கை பார்ப்பது 
மிகச்சிறந்த வடிகட்டிகள்
சாத்தான் பைபிள் ஓதுகிறது 
forwarded message 
மௌனத்திற்கான அர்த்தங்கள் 
இடைவெளி வந்துவிட்ட உறவை  
ஆறுதல்களையே 
உண்மையாக இருத்தல்   
வெறுமையில் தவிக்கின்றன 
இந்த ஒரு தடவை மட்டும்  
நீதி கூறும் நீதிபதிகள்
"பேசு" &"பேசாதே"
சிலரைப்பிடிக்கிறது  
முகத்திரை 



 @6says : 
நல்லதொரு போட்டோ கிராபர் .இவர் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படங்களும் அருமையாய் இருக்கும்.எனக்குள் மடிந்து போன ஆசைகளுள் ஒன்று போடோக்ராபி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது.இணையத்தில் மெயில் ல வரும் நல்ல புகைப்படங்களை தனி folder போட்டே save செய்து வைத்திருக்கிறேன்.எங்கள் வீட்டில் கேமரா பிடிக்கத் தெரிந்த ஒரே ஆள் நான் தான் (மத்தவங்க அப்போ எவ்ளோ மோசம்ன்னு புரிஞ்சுக்கோங்க :P  )சின்ன வயதுப் புகைப்படங்கள் எங்களுக்கு அதிகம் இல்லை என்பதால் எங்கள் வீட்டு வாண்டுகளை விதம் விதமாக போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன்.அதில் சில FB ல அப்டேட் செய்ததை இவர் கவனித்திருக்கிறேன் நன்றாக இருந்தது என சொன்னது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.விஷயம் தெரிந்த நபர் பாராட்டும் சுகமே அலாதிதான்:)
இவரிடம் மிகப் பிடித்த ஒன்று எந்த நேரத்திலும் பெண்களைப் பற்றி இழிவான ட்வீட்ஸ் கண்ணில் பட்டாலும் உடனே தன்  எதிர்ப்பைப் பதிவு செய்துவிடுவார் .அதில் துளி கூட போலித்தனம் ஹீரோயிசம் பார்த்ததில்லை.அந்த குணத்திற்காகவே follow செய்தேன்.டிவிட்டரிலேயே கதியாய் வேலை செய்பவர்களுக்கு இடையே வேலைக்கு நடுவே டிவிட்டருக்கு வருபவர்.
சூரிய சக்தியை மின் சக்தி ஆக்குவது குறித்து இவரிடம் விபரம் கேட்டுப் பெறலாம் நல்ல பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.இவர் புகைப்படங்களைப்பார்க்க.. 



@rsgiri :

இவரது வைகை கரை காற்றே நில்லு பாடலைக் கேட்டு பின் தொடர்ந்தேன்.நல்ல குரல் வளம் முறையான பயிற்சி மட்டும் இருந்தால் இன்னமும் கேட்க அருமையாக இருக்கும்.கொடுக்கின்ற விமர்சனத்தை அப்படியே இயல்பாக ஏற்றுக் கொள்ளும் விதம் பிடிக்கும்.விழிகளில் அருகினில் வானம் பாடல் இவர் குரலில் பிடிக்கும் பல சமயங்களில் சுய எள்ளல்கள் ரசிக்க வைக்கும்.சமையல் பற்றியும் அடிக்கடிக் குறிப்புகள் வரும் :) ரத்தினச் சுருக்கமாக எழுதும் பதிவர்.இவரது ஹாரியும் மேரியும் பின்னே லாரியும் பதிவு மிகப் பிடிக்கும்:) இவரது ஆம்னி பஸ் புத்தக விமர்சனத்தில் என்னையும் ஒரு ரவுடியா மதிச்சு விமர்சனம் கேட்டது எனக்கு கண்ல ஆனந்தக் கண்ணீர் வரவழைச்ச சம்பவம் :) புத்தக விரும்பிகளுக்கு ஒரு அருமையான தளம்.இவரது மீனாட்சி என்ற அழைப்பு மிகப் பிடித்தமானது:) இவருடைய கீரவாணி பாடலை வீட்டில் தெரியாத்தனமா ப்ளே செய்து கேட்டதில் செமத்தியா திட்டு விழுந்தது மறக்க முடியாது நிஜமா நல்லா பாடுறவர்ன்னு சத்தியம் பண்ணினதைகூட அம்மா நம்பல :)
இதுமாதிரி ஆயிரத்தி முன்னூத்தி சொச்சம் தடவை ட்விட்டர் விட்டுப் போயிருக்கார் :)சமீபத்தில் இவர் நலம் விசாரித்ததற்கு சாந்தியின் இந்த பதிலை வெகுவாக ரசித்தேன் :)இவர் ட்விட்டர் விட்டு போறேன்னு சொன்னதோட நில்லாமல் பச்ச புள்ள நட்டுவை கோர்த்து விட்டுச் சென்றதில் நட்டு டைம் லைனில் புலம்போ புலம்பென புலம்பியது எவர் கிரீன் ரசனைக்குரியது:)
அப்பப்போ இது மாதிரி காதல் கவிதை(?!) வரும் :)
 புதியதாய் யாரோ பின்தொடர்ந்ததை இவர் கேட்டப்போ தாத்தா சொன்னது :)
அப்ப நானும் பெரியாளுதான் போல :) 
பாடல் விமர்சனம்  
எனக்கும் இது போலத் தோணிருக்கு 
போனை எந்தத் திசையில் எறிய? 
“மாட்னா செத்தடி :) 
தமிழ்கூறும் நல்லுலகம்  
யார் எதை சொன்னாலும் :) 
விதி 

பாட்டுப் புத்தகம் பற்றிய பதிவு என் அண்ணன் பாட்டுப் புத்தகம் சிறு வயதில் நிறைய சேர்த்து வைத்திருந்ததை நினைவூட்டியது.குழந்தை இல்லாத நபர்களிடம் அதை துக்கமாக விசாரிப்பது எவ்வளவு அபத்தம் என்பதை உணர்த்துவதால்  இந்த பதிவும் பிடிக்கும் .