அரும்பு(ம்) நினைவுகள்:
1 . மயில் றெக்கை குட்டி போடும் என நம்பி இருக்கேன்
2 .என் அண்ணா பம்பரத்துக்கு ஆக்கர் வைக்கிறத ஆ ன்னு வேடிக்கை பார்த்திருக்கேன்
3 .முழு நெல்லிக்காயை அழகா அரை வட்டமா சாப்பிடுவேன்
4 .லிப்ஸ்டிக் பூசிட்டு பல்லுல ஒட்டக்கூடாதுன்னு வாயை ஈ ன்னு வச்சிட்டே இருந்திருக்கேன்.(வாய் வலிச்சுச்சு ;) )
5 .உடைஞ்ச பல்லை சாணி வச்சு மூடி ஓட்டு மேல தூக்கிப் போட்டிருக்கேன்(அப்படித்தான் செய்யணுமாம் :) )
6 .பொய்க்கால் குதிரை ஆடுறவங்களுக்கு நிஜமாவே மனுஷ முகம் குதிரை உடம்புன்னு பயந்து பார்த்திருக்கேன்
7 .காந்தத்தை மணல்ல உருட்டி காகிதம் மேல மணலும் அடியில் காந்தமும் வச்சு விளையாடுவேன்
8 .ஃ ப்ரூட்டி வாங்கிக் குடிச்சு சேராம வாந்தி எடுத்ததில் இருந்து இன்றுவரை மாம்பழ சுவை ஆகாது எனக்கு
9 .இப்பவரை விசிலடிக்க முயற்சி பண்ணி தோல்விதான்.வெறும் காத்துதான் வருது ஊ ஊ ஊ :)
10 .சினிமா தியேட்டரில் கலர் ஸ்க்ரீன் அழகா மெதுவா மேல ஏறி திரும்ப படம் முடியும் போது இறங்குவதையும் பார்த்து ரசிப்பேன்
11 .தமிழக அரசு செய்தது ,வாங்கியதுன்னு சொல்றாங்களே அது எங்க,எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு இருக்கேன்.
12 .தண்ணி கேட்டா வாட்டர் பாட்டில் மூடியில் தண்ணி கொடுப்பா பக்கத்துல இருக்கிற பக்கி :)
13 .அம்மை போட்டப்போ என் பெரியம்மா பையன் போலியா சாமி ஆடுனதை பார்த்து பயந்திருக்கேன்
14 .கிரகணத்தப்போ நிலாவ பாம்பு முழுங்கிரும் ன்னு நம்பிருக்கேன்
15 .ஒரு ரூவாய்க்கு ரெண்டே ரெண்டு மிட்டாய் கொடுத்திட்டு மிச்சக் காசுதராம ஏமாத்தின பாட்டியை ரொம்ப நாள் சம்பிச்சிருக்கேன்
16 .நிலாவில் தெரியும் கறையை நுணுக்கமா ஆராய்ஞ்சு அதுல பாட்டி வடை சுடுதுன்னு நம்பிருக்கேன்
17 .பீச் ல கரை ஓரமாவே நேரா நடந்து போனா வானத்தை தொட்டுரலாம்ன்னு நம்பிருக்கேன்
18 .ஸ்லேட்டு குச்சி,செங்கல்,விபூதி எல்லாம் சாப்பிட்டுருக்கேன்
19 .சத்தியம் பண்ணி அதை மீறிட்டா பைத்தியம் பிடிச்சிரும்ன்னு நம்பிருக்கேன்
20 .வாயைத் திறக்காமலே எப்படி பாடுறாங்கன்னு அதே போல முயற்சி பண்ணி ம்ம் தான் வந்தது
21 .கரென்ட் வந்தா AREA குள்ள இருக்கிற வாண்டுகளோட சேர்ந்தே ஹே ன்னு கத்துவேன்
22 .நூத்தம்பது ரூபா இருந்தா அம்புட்டுக்கும் தேன் மிட்டாயா வாங்கி சாப்பிடலாம்னு நினைச்சிருக்கேன்
23 .என் அண்ணா ஸ்கூலுக்கு போகலன்னு அப்பா வீட்டுக்குள்ள நுழையும் போதே போட்டுக்கொடுப்பேன்
24 .TV குள்ள எப்படி ஆளுங்க வராங்கன்னு TV க்கு பின்னாடி போய் ஆராய்ச்சி பண்ணிருக்கேன்
25 .செய்திகள்ன்னு போடுறப்போ அந்த FLASH சத்ததோட கூட சேர்ந்து ஷ் ன்னு கத்துவேன்
26 .பழம் சாப்பிட்டு கொட்டை துப்பாட்டி வயித்துக்குள்ள மரம் வளர்ந்து செத்துப் போயிருவேன்னு நினைச்சிருக்கேன்
27 .சினிமாக்காரங்க எல்லாரும் மெட்ராஸ் ல ஒரே வீட்ல இருப்பாங்கன்னு நினைச்சிருக்கேன்
28 .நைட் சாப்பிடாட்டி பிள்ளையார் வந்து சோதிப்பார் ன்னு அம்மா சொல்றதை நம்பிருக்கேன்
29 .maths நோட் ல அண்ணாவுக்கு லெட்டர் எழுதிருக்கேன் அது போய்ச் சேருமா சேராதா ன்னு தெரியாம
30 .ரெண்டு ரெண்டு பேரா வரிசையா போய் பாட்டு பாடி பிள்ளையாரை கரைச்சுட்டு வருவோம்
31 .ஐ லவ் யூ ரொம்ப கெட்ட வார்த்தைன்னு நினைச்சிருக்கேன்
32 .மாசமா இருக்கிறவங்களுக்கு வயிறு பெருசாகி பெருசாகி அப்படியே பாப்பா ரொம்ப ஈசியா வெளியே வந்திரும்ன்னு நினைச்சிருக்கேன்:)
33 .காப்பி கலக்க குழம்பு கரண்டி உபயோகப்படுத்தினேன் அது காரமா இருந்துச்சுன்னு அண்ணன் இன்னைக்கு வரை திட்டு :)
34 .ஏரோப்ளேன் சத்தம் கேட்டா உடனே மாடிக்கு போய் வேடிக்கை பார்ப்பேன்
35 .அரைத் தூக்கத்தில் எழுந்து தீபாவளி முதல் நாள் இரவுஎனக்கு என்ன டிரஸ் ன்னு பார்ப்பேன்
36 .சொர்க்கம் மதுவிலே சொறிநாய் தெருவிலே,நானொரு சிந்து சாக்கட பொந்து ன்னு என் அண்ணா பாடுறதுதான் சரியான பாட்டு வரின்னு நம்பிருக்கேன் (நற நற)
37 .மழை பெஞ்சு ஓய்ந்த பிறகு மரத்தின் மீது உள்ள துளிகளை உதிர்த்து விளையாடிருக்கேன்

38 .மழை ஈரமுள்ள சுத்தமான ஆத்து மணலை மிதிச்சா லைட் எரியும்ன்னு நம்பிருக்கேன்(அதுல ஒரு மாதிரி கலர் மண் தெரியும்)
39 .புது நோட்,புத்தக வாசனை பிடிப்பேன்
40 .பொன்வண்டை தீப்பெட்டிக்குள்ள போட்டு அதுக்கு இலை போட்டு பாதுகாத்தேன்
41 .நண்பர்களோட சேர்ந்து நிலா முற்றத்தில் கூட்டாஞ்சோறு சாப்பிட்டு இருக்கேன்.
41 .நண்பர்களோட சேர்ந்து நிலா முற்றத்தில் கூட்டாஞ்சோறு சாப்பிட்டு இருக்கேன்.
42 .இஞ்சினியர் ன்னா அது கட்டிடம் கட்டற வேலைன்னு மட்டும்தான்னு நினைச்சிருக்கேன்
43 .மேஜை மேல் ஏறி விளையாடி ஒரு கையை உடைச்சுகிட்டு சுண்ணாம்பு பத்து போட்டிருக்கேன்
44 .பாட்டி இறந்ததற்கு நாங்க வளர்த்த கருப்பு ஆட்டுக்குட்டியை கறியும் சோறுக்காக வெட்டினப்போ அழுதோம் நானும் என் அண்ணாவும்
45 .முதமுதல்ல டிவி வீட்டுக்கு வந்தப்போ சும்மா போட்டு வெறும் புள்ளியை வேடிக்கை பார்த்திருக்கோம்
46 ஆத்துல மணல் வீடு கட்டி ரெண்டு பக்கமும் ஓட்டை போட்டு கைகொடுத்துக்குவோம்
47 களிமண் பொம்மைகள் செய்ததுண்டு இப்போ போல நகம் அழுக்குப்படாமல் பாதுக்காக்கும் கவலை எல்லாம் அப்போ இல்லை.அப்பாவுக்கு மீன் பிடிக்க மண் புழு தோண்டி எடுத்துக் கொடுத்ததுண்டு.
48 அப்ப நல்லாப் படிச்சேன்னு சத்தியமா இப்போ என்னால நம்பவே முடியல :)(கவனம் சிதறும் வாய்ப்புகள் இப்போ போல அப்போ இல்ல )
49 வளர்ற புள்ளன்னு அளவு பெரிசா உள்ள டிரஸ் எடுத்துத் தருவாங்க.எரிச்சலா இருக்கும் எப்போ பெரிய ஆளாவோம்ன்னு.
50 இரயில் பயணங்களுக்கு ஏங்கி இருக்கேன்

15 comments:
சூப்பர்!! இதை வச்சு பசங்க-3 எடுக்கலாம் போல!! :)
கமெண்ட் போடணும்னு தோனல ..பட் ரொம்ப நல்ல இருந்துச்சு
//கமெண்ட் போடணும்னு தோனல.//
இப்படி ஒரு கமென்ட் போட்டதுக்கு நன்றி :)
நன்றி நிலா :)
சின்ன வயசில் எல்லாமே வித்தியாசமாத்தான் நமக்குத் தெரியும். அவைகளை அழகாக பட்டியலிட்டமை அருமை. வ.எண்.36 மீண்டும் 42-ல்.
தங்கமான நினைவுகள்...
:-)
//தமிழக அரசு செய்தது ,வாங்கியதுன்னு சொல்றாங்களே அது எங்க,எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு இருக்கேன்.//
எங்க ஊர்ல அரசாங்கம் என்று பேசுவாங்க,அரசாங்கம் என்றால் மேடையில் பெரிய மேசை போட்டு 10 பேர் உட்காந்து இருப்பாங்க என்று எல்லாம் நான் யோசித்திருக்கேன். நீங்க பரவா இல்ல :)
forget my sorrows while reading this
forget the sorrows while reading .
forget the sorrows while reading this
forget the sorrows while reading this
திருத்தியமைக்கு நன்றி ரேகா வேற மாத்திடறேன் :)
ஹா ஹா :) நன்றி நிஷான் :)
//forget my sorrows while reading this // thanks friend:)
நான் இணையத்தில் வெகு நேரம் இருப்பவன். காரணம் எனது வேலையே (Soft. Eng.) அதுதான். :) அதிகமா படிப்பது பிடிக்கும். ஆனால் இதுவரைக்கும் எதற்கும் யாருக்கும், எனது கருத்துகளை தெரிவித்தது இல்லை. இதுவே முதல் முறை. உங்க நினைவுகள் அனைத்தும்.... என் கண்களின் ஓரத்தில் கண்ணீர் மட்டுமே... வாழ்க!!
மிக்க நன்றி :))
Post a Comment