கவிஞர் மகுடேஸ்வரன் தமிழ் இலக்கணத்தை எளிமையாகவும், சுவராசியமாகவும் சொல்லித் தரும் மெய்நிகர் தமிழாசிரியர் ..ஆர்வம் உள்ளோர் அவரது முகநூல்ப் பக்கத்தில் தொடரலாம் .
இந்த ஆண்டில் @saichithra வை நேரில் சந்தித்த அனுபவம் மறக்க முடியாதது.. தனிப்பட்ட முறையில் எவ்வளவு பெரிய பதவி , வெற்றிபெற்ற நபர் ஆனால் பழக இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா என்ற பிரம்மிப்பு இப்போ வரை அகலவில்லை.. என்னைச் சந்தித்த மகிழ்ச்சியை அவர் அதிர்ஷ்டமாகப் பார்த்த பொழுது அது இன்னமும் அதிகமானது.. கொஞ்சம் காலர் தூக்கி விட்டுக்கற மொமென்ட் :)
பொதுவாக படம் பார்க்கும் முன் திரை விமர்சனங்கள் படிப்பதே கிடையாது.. ஏனெனில் அவை சுவராசியத்தைக் கெடுத்து விடும் . பெரும்பாலும் விமர்சனம் என்கிற பெயரில் கதை சொல்லிகள் கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டுமானால் பல முந்திரிக் கொட்டைகளை உருவாக்கி இருக்கிறது இணையம்.. அவர்களிடம் இருந்து காத தூரம் ஓடி நான் தஞ்சம் புகும் இடம் @amas32 blog ... இயன்றவரை சார்பற்ற விமர்சனமும், கதை சொல்லி விடாமல் பிடித்த/ பிடிக்காதவற்றை விளக்கும் பாங்கும் , காயப்படுத்தாமல் எதிர்மறை விமர்சனம் செய்யத் தேர்ந்தெடுக்கும் சொற்களுமாக என்னைக் கவர்ந்திழுத்திருக்கிறார் :)
.இங்கே விவாதங்கள் எப்பொழுதும் இறுதியை எட்டுவதில்லை.அவரவர் அவரவர் சார்ந்த கருத்துக்களுடன் இனிப் பேசிப் பயனில்லை என விலகிச் செல்வதே உலக வழக்கம். ஆயினும் காரசார விவாதங்கள் ஒன்று சேற்றைப் பூசுபவனவாக இருக்கும் அல்லது தனி நபர் தாக்குதலாக இருக்கும். அவ்விரண்டும் அன்றி @amas32 -@kryes க்கும் இடையே நடந்த இந்த விவாதம் மிகப் பிடித்தமானது.. அமாஸ் அம்மாவின் தரப்பைத் தேடி இங்கு தர இயலவில்லை
ரஜினிக்கு ஆகச் சிறந்த சமர்ப்பணம் :)
எனக்குப் பிடித்த ட்விட்டர் உரையாடல்கள் :)
ட்விட்குறள்
பிசாசுகுட்டி-சுப்பிரமணி
ஆகச் சிறந்த நகைச்சுவை போட்டோ அந்தாக்ஷரி by @Mrelani & Bubloo
நான் ரசித்த பதிவுகள்
சில பதிவுகள் நம் அடி மனதின் ஆழம் வரைத் தாக்கி கண்ணில் நீராக வெளிப்படும்..அது போன்று ஒன்று இது..ஒவ்வொரு பெண்ணுக்குமான மன பிரதிபலிப்பு .
வெகு இலகுவான நகைச்சுவையில் கணவன் மனைவி உறவைப் பற்றிய பதிவு
பிசாசுகுட்டி-சுப்பிரமணி
ஆகச் சிறந்த நகைச்சுவை போட்டோ அந்தாக்ஷரி by @Mrelani & Bubloo
நான் ரசித்த பதிவுகள்
சில பதிவுகள் நம் அடி மனதின் ஆழம் வரைத் தாக்கி கண்ணில் நீராக வெளிப்படும்..அது போன்று ஒன்று இது..ஒவ்வொரு பெண்ணுக்குமான மன பிரதிபலிப்பு .
வெகு இலகுவான நகைச்சுவையில் கணவன் மனைவி உறவைப் பற்றிய பதிவு
வயிறு வலிக்கச் சிரிக்க "தீனித் தின்னிகள் :)
நான் மிகவும் ரசித்த இன்னும் சொல்லப் போனால் அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் ஆத்மார்த்தமாக உணர்ந்த சொற்களைக் கொண்ட டிவிட்லான்கர் இது by @selvarocky
போரடித்து மொபைலைத் திறக்க , பேருந்து நிலையம் எனப் பாராமல் வாய் விட்டுச் சிரிக்க வைத்த டிவிட்லான்கர் இது :-)) by @MrElani
நாடி நரம்பு எல்லாம் குறும்பும் , நகைச்சுவை உணர்வும் ஊறிப் போன ஒருத்தரால தான் , இப்படி பெண்கள் விலகிப் போற டாபிக்ல கூட, நிறுத்திப் படிக்க வைத்து வயிறு வலிக்கச் சிரிக்க வைக்க முடியும் :-)) அது முத்தலிப்பின் இந்தப் பதிவு லிங்க் திறக்காமலே எதுவெனத் தெரிந்திருக்குமே :)
எத்தனையோ பிரபலங்கள் இந்த ஆண்டு இப்பூலகை விட்டுப் பயணித்திருந்தாலும் என் மனதில் ஆழப் பதிந்து போனவர் விகடன் ஆசிரியர் S.பாலசுப்பிரமணியன் . அவரைப் பற்றி ஓரளவே முன்பு அறிந்திருந்தாலும் தற்பொழுது , அவரைப் பற்றிய கட்டுரைகள், பகிர்வுகள் படிக்கப் படிக்கப் பிரம்மிப்பு.. விகடனின் முன்பு உங்கள் மனம் கவர்ந்தவர்களைச் சந்தியுங்கள் என்று ஒரு நிகழ்ச்சி வைத்து அதில் நமக்குப் பிடித்தமான பிரபலங்களைச் சந்திக்க வைத்து , அதைக் கட்டுரையாக பிரசுரிப்பார்கள்.. இப்பொழுது மட்டும் எஸ் பி அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் , அப்படி ஒரு வாய்ப்பை அவருடன் எனக்கு வழங்குமாறு கேட்டிருந்திருப்பேன்.. அந்த அளவுக்கு என் மனதில் உயர்ந்து இருக்கிறார் . பல எழுத்தாளர்களை ஊக்குவித்த அந்த நல்லாசிரியருக்கு என் மனமார்ந்த அஞ்சலி!
நான் மிக மிக ரசித்தக் குறும்படம் எனைச் சாய்த்தாளே .. ஒரு நண்பரின் மூலம் அறிமுகம் ஆகி, அதை டைம் லைனில் பகிர்ந்த பின் , இப்போ மூஞ்சிபுக்ல பரவிகிட்டு இருக்கு வைரஸ் மாதிரி ..இந்தப் பெண்ணின் ஒவ்வொரு முகபாவமும் ரசிக்க வைக்கிறது . அட தமிழ் சினிமாவே எப்படித் தவற விட்டாய் இப்படி ஒரு நாயகியை :-))
ராஜாவைப் பற்றி பண்டிட் பாலேஷ்.. பத்திரப் படுத்த வேண்டிய ஒன்று
சிவன் தருமிக்குக் கொடுத்த பாடல் அன்று ஒரு புலவர் தமிழுக்கு அளித்த குறுந்தொகை ..அதற்கான அருமையான விளக்கம் சொக்கன் குரலில்
மன்னிச்சூ ..மிக தாமத வெளியிடலுக்கு ..மனசுக்குப் பிடிச்ச விசயங்களை மட்டும் எடுத்துகிட்டா ட்விட்டர் ஓர் அருமையான பொழுதுபோக்குத் தளம்..
பலதரப்பட்ட மக்களைக் கையாளுவது எப்படி என்பதைப் பற்றி அனுபவப் பாடம் கொடுக்கும் இடமும் கூட :) நான் தொடராவிட்டாலும் எனைப் பின் தொடருபவருக்கு என் நன்றி :) பலரைப் பிடித்தும் பின் தொடராமல் இருக்கக் காரணம் அவர்களுக்கும் எனக்குமான wavelength முற்றிலும் வேறாக இருப்பதால் தான்..இயன்றவரை சகிக்கக் கூடிய , அல்லது கடக்கக்கூடிய நபர்களாகப் பார்த்தே தேர்ந்தெடுக்கிறேன்.. படக்கென அன்பாலோ வேண்டாம் எனத் தோன்றினால் mute போட்டுவிட்டு சகஜமாக இருக்க முடிகிறது.. ட்விட்டர் முழுதுமாய் வசப்பட்டு இருக்கிறது.. ட்விட்டர் விட்டு விலகி இருத்தலும் கூட ...என் எழுத்தை ரசிக்க,விமர்சிக்க என ஒரு நட்பு வட்டம் என்னை நன்கு செதுக்கவே செய்திருக்கிறது..அவர்களுக்கு என் சிறப்பு நன்றி :)
இனி எல்லாம் சுகமே.. :-)
2 comments:
மிக்க நன்றி
நல்ல எழுத்து கிடைப்பது அரிது
தான்பெற்ற இன்பம் இவ்வய்யகம் பெற உதவும் உங்களுக்கு
மிக்க நன்றி
நல்ல எழுத்து கிடைப்பது அரிது
தான்பெற்ற இன்பம் இவ்வய்யகம் பெற உதவும் உங்களுக்கு
Post a Comment