Sunday, July 28, 2013

#365RAJAQUIZ ஒரு நினைவலைகள் ..!

ட்விட்டர் @Rexarul

நடத்திய #365RajaQuiz ஐ கௌரவிக்கும் பொருட்டு என்னாலான  என் மனம் திறந்த பதிவு .இந்த நெடிய பயணத்தில் அவ்வப்பொழுது நானும் உடன் வந்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருக்கின்றது .என்ன ஒரு சமர்ப்பணம் மாஸ்டர்… மாஸ்டர் என்ற வார்த்தைக்கு முழுக்க பொருள் சேர்த்திருக்கின்றார் . நிச்சயம் ராஜா மட்டும் இவரின்  இந்த அர்ப்பணிப்பான அவருக்கு ஒரு பைசா பிரயோசனம் இல்லாத பொழுதும் காரியத்தை செய்ததை அறிய நேர்ந்தால் மனிதர் புல்லரித்துப் போகக் கூடும் இப்படி ஒரு ரசிகரை நினைத்து.. எத்தனையோ ராஜா ரஹ்மான் சண்டைகளை இந்த ட்விட்டர் பார்த்து இருக்கின்றது. ஆனால் மாஸ்டரைப்  போன்ற ஒரு ரசிகனை பார்ப்பது அபூர்வம் என்று எந்த இசையமைப்பாளரை ரசிக்கும் இதயம் சொல்லும்.. நிச்சயம் ஒரு பொறாமை கூட வரும்..

பலரின் ரசிகர்கள் அவர்கள் ரசிக்கின்ற விதத்தில் குருட்டுத் தனமான பற்றுதலில் அவர்களின் ரசனை,ரசிப்பவர்கள் மீதே வெறுப்பே வரும்.அதில் நடிகர்களுக்கோ அல்லது இசையமைப்பாளர் ரசிகளுக்கோ இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலோனோர் விதிவிலக்கே அல்ல.ஆனால் மாஸ்டர் அவர்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றார். ஒரு பாடலை ரசிப்பதற்கு அவர் வைக்கும் ஆழ்ந்த காரணங்கள் அதை அவர் ரசித்துச் சொல்கின்ற விதம் நிச்சயம் பலரை அவர் வசப்படுத்தி வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இலவசம் அவர்கள் குறிப்பிட்டது போல எவ்வளவு விஷயங்கள் எத்தனைப் பாடல்கள் ..நான் நிறைய பாடல்கள் டௌன்லோட் செய்து வைத்திருக்கிறேன் ஆனால் அவர்  இசைத்துணுக்கில் இருக்கும் க்ளாரிட்டி சத்தியமாய் இராது..அவ்வளவு அருமையாக ஒலிக்கும். ஆச்சர்யமாக இருக்கும்..எனக்கு பல நேரத்தில் ஒரு ஆகச் சிறந்த மன அழுத்த விடுதலை செய்யும் அம்சமாக இந்த #365RajaQuiz இருந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.அதனால் தான் நிறைவு தினத்தில் எந் த ஒரு திட்டமிடலும் இன்றி வந்தவுடன் மனதில் இருப்பதை படபடவென எழுதுகின்றேன்.@vrsaran . @RagavanG போன்ற நல்ல நண்பர்களைப் பெற்றுத் தந்ததுவும் இந்த #365RajaQuiz  தான் .

நீண்ட நாட்களுக்குக் பிறகு , ஒரு கண்டிப்பான அதே சமயம் தெரியாமல் முழிக்கின்ற நேரத்தில் தட்டிக் கொடுத்து கண்டுபிடிக்க வைக்கும் அருமையான வாத்தியாரும் , நான் திருதிருவென விழிக்கும் பொழுதெல்லாம் . எக்ஸ்ட்ராவாக க்ளூ கொடுத்து எனக்கு உதவி செய்யும் நண்பர்களுமாய் ஒரு பள்ளிக் காலத்தை கழித்தது போன்ற உணர்வு..திரும்ப ஒரு பயணத்தில் இணைவேனா தெரியாது.ஆனால் நிச்சயம் இதை மறக்கவே மாட்டேன் :) மாஸ்டரின் பதிவுக்கு அருமையாய் ரசித்து பின்னூட்டமிடும் பிரசன்னா போன்றோர் இன்னும் இதை அழகாக்கி இருக்கின்றார்கள்.

தெரியாத பாடல் என்றால் விட்டு விடுவதுண்டு.தெரிந்த பாடல் என்றால் திரும்பி அவர்  அடுத்த பதிவு போடும் வரை மண்டை காய்ச்சல் தான் . பல நல்ல பாடல்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி :) (ஒரு போக்கிரி ராத்திரி , ஒரு கானம் அரங்கேறும் இப்படி பல..அதே போல பல பாடல்கள் பிடித்திருந்தாலும் கேட்டு நெடு நாளாகி இருக்கும்.அவை அவர் அறிமுகம் செய்கின்ற விதத்தில் இன்னும் மெருகேறி இன்னமும் இன்னமும் பிடிக்கும். உதாரணமாக மேகம் மேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி , வானமென்ன கீழிருக்கு ,அள்ளித் தந்த வானம் அன்னை அல்லவா ,,மலேசியா ,சொர்ணலதா போன்ற பாடகர்களின் தனித்திறன் அறியப் பெற்றது மாஸ்டரைப்  போன்றோர் இங்கே பாடல் அறிமுகப் படுத்தி அதை ஒரு விவாதமாக்கும் பொழுதில் தான் .சொக்கன் சார் சொன்னது போல இதில் ராஜாவே பங்கு பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததுண்டு.ஆனால் அவர் மாஸ்டர் கொடுக்கிற க்ளூவை வச்சுப் பார்த்தா நிச்சயம் குழம்பிடுவார் என்னைப் போலவே :)

தலைப்பிலேயே க்ளூ வைக்கின்றார்  என்பதே ராமன் அப்துல்லா படப் பாடலை புதிரில் வச்சப்போ தான் தெரிஞ்சுது என்றால் நான் எவ்ளோ ட்யூப்லைட் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளவும் :) அப்புறம் அவர்  சொல்லும் வானொலி க்ளூ மண்டை காயும் .நேரில் கிடைத்தார் என்றால் எத்தனை பாட்டு சார் வானொலி ல கேட்டீங்க என்று ஒரு உலுக்கு உலுக்கனும் போல தோணும் :) தப்பிச்சுட்டார் :) 
வாய்ப்பே இல்லை மாஸ்டரைப் போன்ற ஒருவர்..

எப்பவும் அண்ணனிடம் திட்டு வாங்குவேன்..ஆனால் அவர்  இசைத் துணுக்கை ஓட விட்டு எங்க அண்ணனையும் யோசிக்க விட்டு மண்டை காய விடுவதில் ஒரு தனி ஆனந்தம் :) )

மானுத் தோலு ஒண்ணு மஞ்சக் கிழங்கு ஒண்ணு பாடலுக்கு அவர்  கொடுத்த இசைத்துணுக்கு அம்மன் கோவில் வாசலிலே பாடலுக்கும் கொஞ்சம் ஒத்து வரும் ..அதே போல பாரி சாத பூவே,நான் சிரித்தால் தீபாவளி இரண்டு பாடல்களில் interludes ..வாவ் இந்த ராஜா என்ன என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்று மாஸ்டர் மூலமாக இன்னும் அறிந்தேன்.அதே போல ஷெனாய்க்கும் நாதஸ்வரத்துக்கும் வித்தியாசமே தெரியாது.ஆனால் மாஸ்டர் கொடுக்கிற க்ளூ வச்சு இது இன்ன இன்ஸ்ட்ருமென்ட் என்று தெரியும்…ரியலி ஹேட்ஸ் ஆஃப் மாஸ்டர் :)

அள்ளித் தந்த வானம் பாடல் என்ன படம் என்றே கண்டுபிடிக்க முடியாமல் ட்விட்டர் டைம் லைனில் நான் திணற கானாபிரபா sundar 140 என்று பலரும் க்ளூ கொடுத்தும் அந்த "கடல் நண்டு"எனக்கு சிக்கவே இல்லை :) இறுதியில் ஒரு இருபது பேராவது என்னோடு மண்டை காய்ந்து அந்தப் பாடல் என்னவென்று எனக்கு சொல்லித் தந்து விட்டுப் போனார்கள் :)ஆனால் பொதுவில் க்ளூ வைத்து விவாதிப்பது புதிரை நீர்க்கச் செய்யும் என மாஸ்டர் மென்மையாக கண்டித்ததால் அத்தோடு டைம் லைனில் விவாதிப்பது கிடையாது. 

மாஸ்டர் முதல் நாள் கொடுத்த பாடலையே கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்போம் நானும் @amas32 அம்மாவும்..ஆனால் மிஸ்டர் முசகுட்டி @vrsaran அடுத்த பாடலுக்கு மாஸ்டர் ப்ளீஸ் செக் டிம் என் விடை சரிதானா பார்த்துச் சொல்லுங்கள் எனும் பொழுது முதல் பெஞ்ச் ல உட்கார்ந்து முந்திகிட்டு பதில் சொல்வோர் மீது ஒரு ஆதங்கம் வருமே அது போல வரும்.
அதுக்குள்ள என்ன அவசரம் என்று தலையில் கொட்டி விடத் தோன்றும் :) ஆனால் அவரை விட @yezhara இன்னும் சிலர் பல பதில்களை மிகச் சரியாக ஊகித்து முதல் இடத்தில் இருப்பதைப் பார்த்தால் மலைப்பாகவே இருக்கும்.

எந்த ஒரு விசயத்தையும் வெறும் நுனிப்புல்லாக மேயாமல் மனதிற்குப் பிடித்த விசயத்தை ஆழ்ந்து அதில் தேர்ந்த அறிவு பெறுவது எப்படி என்று இங்கே மாஸ்டர் @rexarul ,@nchokkan ,@kryes @kanapraba இன்னும் சிலரிடமும் கற்றுக் கொள்ளலாம்..விரல் நுனியில் வைத்திருப்பார்கள் சேதிகளை.
எத்தனை பஞ்சாயத்துகள் ட்விட்டரில் ஓடினாலும் #365Rajaquiz இந்த ஒரு வருடத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம் என்றே நினைக்கின்றேன்.

ஊரடங்கும் சாமத்திலே ,காதல் மயக்கம்  இன்னும் பல பாடல்கள் இந்த #365Rajaquiz ஆல் மறக்க முடியாத ஒன்றாகிப் போனது.

மொத்தத்தில் ஒரு அருமையான சுகானுபவம் இனிமையான பயணம் இந்த #365Rajaquiz .
மாஸ்டர் @rexarul -ன் அர்ப்பணிப்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!

13 comments:

SHAIJU SGR said...

அருமையான பதிவு. தூரத்தில் இருந்து 365 குவிசை அவ்வபோது ரசித்திருக்கீறேன்.. இசையை இப்டி கூட விளக்கலாமான்னு ஆ போட வைத்து விட்டார் மாஸ்டர்.

SHAIJU SGR said...

அருமையான பதிவு. 365 குவிசை அவ்வபோது ரசித்திருக்கிறேன்.. இப்டி கூட கேள்விகளை எழுப்பலாமா என ஆச்சரிய படுத்தியிருக்கிறார் மாஸ்டர். நேற்று நடந்த 365 ஃபைன்லே ஃபோட்டோகளை பார்த்து பொறாமையே வந்துவிட்டது..

Shanthi Vaidyanathan said...

மயிலிறகாய் உங்கள் பதிவு எப்போதும் போல் clear, crisp and to the point... நன்றாக உள்ளது

உமா கிருஷ்ணமூர்த்தி said...

மிக்க நன்றி கனல் மற்றும் ஷாந்தி :)

amas said...

super Uma! பின்னிட்டீங்க! உண்மையிலேயே இந்த பயணம் என்னை நிறைய விஷயத்தில் மாற்றியுள்ளது.

amas32

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எத்தனையோ ராஜா ரஹ்மான் சண்டைகளை இந்த ட்விட்டர் பார்த்து இருக்கின்றது. ஆனால் மாஸ்டரைப் போன்ற ஒரு ரசிகனை பார்ப்பது அபூர்வம்//

One line says it all...

உழைப்பில் "வெறி"யுண்டு!
இசையில் "ரசிப்பு" மட்டுமே; "வெறி"யல்ல!

//ராஜாவே பங்கு பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததுண்டு.
ஆனால் அவர் மாஸ்டர் கொடுக்கிற க்ளூவை வச்சுப் பார்த்தா நிச்சயம் குழம்பிடுவார் என்னைப் போலவே :)//

யோவ் ரெக்சு, இந்தப் பொண்ணு, பதிவு போட்டே ஒம்மைக் கவுத்துருச்சி:))

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் = தெரியும்!
ராஜாவைக் குழப்பிடும் மாஸ்டர் = இன்றே அறிந்தேன்; நறுந்தேன்:))

G.Ragavan said...

நல்ல பதிவு. எல்லாரிடமும் ராஜகுயிஜ்ஜின் தாக்கத்தைப் பார்க்க முடிகிறது.

Rex Arul said...

உமா - உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். மிக்க நன்றி!

உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் தெளிந்த நீரோடை போலத் தெளிவாக இருக்கிறது.

பொதுவாகவே, இரு பாலாரையும் ஒரே மாதிரி கட்டிபோட்டு வைத்து ஊக்கத்தோடு நடை போடச் செய்யும் விசயங்கள், இணையத்தில் குறைவு தான். ஒன்று மகளிர் மட்டும் என்ற ரீதியிலோ, அல்லது பாய்ஸ்-கிளப் என்ற ரீதியிலோ தனித்தே இருப்பது போல பல விசயங்கள் இருக்கும். ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதைக் கண்டது உண்டு.

இந்த நம் புதிர் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே, சிறியவர் பெரியவர், டாப்பர்ஸ் - லாஸ்ட் பெஞ்சு :), ஆண்-பெண் என்ற வேறுபாடுகள் எல்லாம் இல்லாமல், முதலில் இருப்பவரும் பின்னால் கஷ்டப்பட்டு மேடு ஏறுபவருக்கு ஒரு வித ஆறுதல் கலந்த ஊக்குவிப்பை அளிப்பவராக இருக்க வேண்டும் என்று எல்லாம் நிறைய யோசித்தது உண்டு. இசைஞானியின் இசைக்கு அந்த மகத்துவம் இருக்கும்போது, அதை புதிர் என்றும் வலைப்பதிவு என்றும் நாம் வழங்கும்போது இருக்க வேண்டும் அல்லவா? இதில் கூடுதலாக கவனம் செலுத்தினேன். நீங்கள் சுட்டிக்காட்டியது போல, பல நண்பர்களும் ஊக்குவித்தார்கள் :) @vrsaran, @ragavang இன்னும் நிறைய பேர்... இவர்கள் எல்லாரும் எனக்கும் இதன் மூலமாக கிடைத்த நண்பர்களே :) 365/365ல் பின்னூட்டம் இட்டிருக்கும் சாந்தி அவர்கள் சொன்னது போல, வெறும் டாப்பர்ஸ் என்று மட்டும் அல்லாமல், குறைவாகவே மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களிடமும் அதே மரியாதையோடு நடந்துக்கொண்டது பாராட்டத்தக்கது என்றார். பாருங்கள், இதையே நீங்களும் சுட்டிக்காட்டுகின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி, உமா. இணையத்தில் கண்ணியமான பேச்சு நடக்க வேண்டுமானால், இம்மாதிரியான பாஸிடிவ் விசயங்களை, வெளிப்படையாக நாம் சுட்டிக்காட்டித் தான் ஆகவேண்டி இருக்கிறது.

நேற்று யாரோ ஒருவர், வேறு இசையமைப்பாளரைத் திட்டியோ கம்பேரோ செய்யாமல் இசைஞானியைப் பற்றி யாராவது வலைப்பதிவு எழுத முடியுமா என்று கேள்வி கேட்டதாக நினைவு. அதற்கு, வேறு யாரோ ஒருவர். தாராளமாக. போய் பாருங்கள் இங்கே என்று #365RajaQuizஐ சுட்டிக் காட்டினார்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், நாம் கடந்து வந்த பயணம், நம் எல்லாருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மட்டுமல்லாமல், நம் ரசனைக்கு ஊற்றாக விளங்கும் இசைஞானிக்கும் அவரின் இசைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. "பலரின் ரசிகர்கள் அவர்கள் ரசிக்கின்ற விதத்தில் குருட்டுத் தனமான பற்றுதலில் அவர்களின் ரசனை,ரசிப்பவர்கள் மீதே வெறுப்பே வரும்." என்று நீங்கள் சொன்னதற்கு சொல்ல வருகிறேன்... (to be contd)

Rex Arul said...

(contd..)
எனக்கு சங்கீதம் தெரியாது. ரசிக்கத் தெரியும். அவ்வளவே. ஆக, வலைத்தளத்தில் காலைப் பதித்த போது, எப்படி நிறைய பேரை கட்டி இழுப்பது என்று அஞ்சினேன். புதிர் என்றாலே நடுங்கப்போவது பலர்! அவர்களே அப்படி சொல்லி இருக்கிறார்கள், இல்லையா? பதில் சொல்வதில் குறைந்து மதிப்பெண் பெற்றால் தான் ஒரு ரசிகன் என்று ஆகிவிடாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினால் பலர் வராமல் போய்விடும் என்று உணர்ந்ததால், கைப் பிடித்து இழுத்துச் செல்லும் ஆசிரியன் ஆனேன்.

”நீண்ட நாட்களுக்குக் பிறகு , ஒரு கண்டிப்பான அதே சமயம் தெரியாமல் முழிக்கின்ற நேரத்தில் தட்டிக் கொடுத்து கண்டுபிடிக்க வைக்கும் அருமையான வாத்தியாரும்”

மிக்க நன்றி உமா. நீங்கள் நினைவுகூரும் சம்பவத்தில், சிலர் வெளிப்படையாக க்ளூக்களைப் பற்றி indirectஆக க்ளூ கொடுக்கிறேன் என்று விடையையே சொல்லிவிடும் அளவுக்கு போக, சிலர் வருந்தி என்னிடம் முறையிட்டார்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உங்களிடம் தனிப்பட்ட முறையில், “வேண்டாமே உமா” என்று மட்டும் தான் சொன்னதாக நினைவு. பெரிய உரை எல்லாம் கொடுக்கவில்லை. ஏனென்றால், ஆடியன்ஸாக உங்கள் மீது எனக்கு நம்பிக்கை அதிகம் இருந்தது. நீங்களும் உடனே புரிந்துகொண்டு “சாரி மாஸ்டர்” என்றீர்கள். நானும் ”அதெல்லாம் நோ பிராப்ளம், தினமும் வந்து பதிலைப் பதியுங்கள்” என்று சொன்னதாக நினைவு. சில சமயங்களில் அதிகம் தென்படாதபோது, எல்லாம் சௌக்கியம் தானே என்று விசாரிக்கத் தவறியது இல்லை. இது, நாம் பள்ளியில் சந்தித்த நல்ல ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது. வெறும் டாப்பர்ஸை மட்டும் கவனிக்காமல், மற்ற மாணவர்களையும், “எப்படி இருக்கப்பா” என்று விசாரிப்பாங்களே. அது மாதிரி.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் மீண்டும் மீண்டும் நன்றி. ஏனென்றால், உங்களை மாதிரியான நல்ல participantsஆல் தான் இந்தப் பயணம் இன்னும் பெருமை அடைந்திருக்கிறது.

உங்களுக்குள்ளும் ஒரு தேடலையும் ஒரு killer-instinctஐயும் இது உருவாக்கி இருக்கிறது என்பதை அறிய, மகிழ்ச்சியாக இருக்கிறது.

மற்றபடி, ஆல் இந்தியா ரேடியோ, கோயமுத்தூர் வானொலி நிலையம் (பாருங்க, இங்கேயும் அதை சொல்லியே விட்டேன்... விவிசி ;)))))-ல நான் கேட்ட பாட்டு எல்லாமுமே, எத்துணை முறை என்னை அடித்து விசாரித்தாலும் நான் தவறாமல் உங்களுக்கு லிஸ்ட் கொடுத்து கலக்குவேன். ஹஹஹா.. ஆனா பாவம் உங்க அண்ணா!

மிக்க நன்றி உமா. அருமையான பதிவு. Thanks for being part of our #365RajaQuiz family. I couldn't control my laughter on how you joked @vrsaran's "Please check my DM" ROFL. அன்று கீச்சிலும் அவரை ஓட்டினீர்கள், இங்கும் ஓட்டிவிட்டீர்கள்.

அதற்காகவே கூடுதல் +1000 ;)))))))

உமா கிருஷ்ணமூர்த்தி said...

இணையத்தை எப்படி கையாள வேண்டும் என பிறருக்கு ஒரு நல்ல முன்மாதிரி மாஸ்டர் நீங்க :)நெகட்டிவாக பேசாமல் நல்லதை மட்டுமே ரசிக்கும்படி பேச உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் .நிஜம் தான்...உங்களின் மென்மையான மறுதலிப்புகள் நினைவில் இருக்கின்றன...கூடவே எங்க காணோம் என விசாரிக்கும் பொழுது டெஸ்ட் க்கு டிமிக்கி அடிக்கிற மாணவியை ஆசிரியர் எங்கே என விசாரிப்பது போன்றே இருக்கும் எனக்கு..:) அதனால் தான் உங்களை ஒரு நல்ல ஆசிரியர் என்கிறேன் நான் . நல்ல ஆசிரியர் என்று நம் மனதில் பதிந்தவர்கள் யாவரும் பள்ளி ஆசிரியர்களே..அவர்களின் பிரதிபலிப்பை உங்களிடம் உணர்ந்திருக்கின்றேன்.சாதாரண புதிராக ஆரம்பித்து இன்று அதன் கீழ் பல உறவுகளை உருவாக்கி மனதில் ஆழமான நினைவுகளை விதைத்துச் சென்று இருக்கின்றீர்கள் .அது நிச்சயம் மறக்கவே முடியாத ஒன்று..:))உங்களின் வெளிப்படையான பகிர்தலுக்கு
நீங்கள் சொன்னது போல ஆண் பெண் இருபாலரையும் இணையத்தில் ஒரு சேரக் கட்டிப் போடுவது மிகச் சாதாரண விடயம் அல்லவே..இதற்கு நீங்கள் செய்த மெனக்கெடல்களே ராஜாவுக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் பல ரசிக வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கின்றது என்றால் மிகை ஆகாது :) நான் வெறும் வழிப்போக்கனாக வந்து பயணத்தில் இனிமையாக கலந்துகொண்டேன்..போலவே பலரும் .இனி திரும்ப ஒரு கைகோர்த்த பயணம் ஆரம்பிக்க வேண்டும்...நிச்சயம் உங்கள் தலைமையை விரும்புகிறோம் மாஸ்டர்..தினம் செய்வது சிரமம் என்றாலும் சற்று ப்ரேக் எடுத்து வாரா வாரம் கூட வையுங்க :)

நிச்சயம் ரஹ்மானை இழுக்காமல் ஒரு ராஜ புராணம் அதுவும் மிகத் தெளிவாக மறுக்கவே முடியாத வகையில் நீங்கள் வைத்தது ஆகச் சிறந்த ஒன்று என்பதில் ஐயமில்லை :)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

முருகா இதற்கு மட்டும் மிகச் சரியாக வந்து கத்திவிடும் பல்லியை வரவேற்கிறேன் :) எப்பொழுதுமே ஊக்கம் கொடுப்பதில் உங்களுக்கு நிகரில்லை..வருக வருக :)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

மிக்க நன்றி ஜிரா..உங்களைப் போன்ற நண்பர்களை பெற்றுத் தந்ததற்கே மாஸ்டர் க்கு நன்றி சொல்லணும் :)

Rex Arul said...

@kryes - எனக்கு இவரிடம் பிடித்ததே, அந்த நகைச்சுவை தான் :)

நம் சரணை அங்கும் இங்கும் கலாய்க்காததை விடவா? ஹஹஹா :)