Saturday, March 3, 2012

எனக்குப் பிடித்த பாடல்கள்!

ஆகாய கங்கை பாடலின் பொழுது ஸ்ரீதேவிக்கு கால் வலியால்(எதுவும் விபத்தா என தெரியவில்லை) அதிகம் ஆடாமல் அமர்ந்தே நடனம் அமைக்கப்பட்டதாம் .மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகியின் அருமையான குரல்களில்
************************************************************************
கங்கை அமரன் படத்திற்காக ராஜா இசையமைத்த பாடல் அமரனுக்கு பிடிக்கவில்லையாம்.ராஜா படத்தில் வை மக்கள் நிச்சயம் இந்த பாடலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என சொன்னாராம்..அப்படி ஹிட் ஆன பாடல் தான் மாங்குயிலே பூங்குயிலே..
யூ ட்யூபில் இளையராஜா ஹிட்ஸ் எனத் தேடினால் முதல் பக்கத்தில் நிச்சயம் இந்தப் பாடல் இருக்கும்.பிளாட்டினம் ஹிட்சில் ஒன்றாகவும்
**************************************************************************
 கண்ணா என ஏக்கமாக ஜானகி அழைத்ததும் வயலின் வெளிப்படுத்தும் உணர்வுகள் அபாரமானது .வேகமாக மூச்சிரைக்க ஓடினால் எப்படி இருக்கும்?அது போல விரைந்து சென்று தவிப்பை அவ்விடம் சொல்கின்றது.(.013 to ௦.26 )
 கண்ணா உனைத் தேடுகிறேன்வா என்றதும் வயலின் கொஞ்சிக் குழைந்து அழைப்பை ஏற்கின்றது.உன்னோடுதான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை இரண்டுக்கும் இடைப்பட்ட புல்லாங்குழல் ம்ம் என்று செல்லம் கொஞ்சுகிறது ஆனந்தத்தில்:)
***************
என் அண்ணனின் தோழர் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை பார்த்தவர்.அங்கே வேலை பார்க்கும் பொழுது ஆகாய கங்கை மற்றும் காத்திருந்து காத்திருந்து பாடலை திரும்ப திரும்ப கேட்பாராம் உடன் வேலை செய்த வட இந்தியர் ஒருவர்.




அதிலும் பாடலின் இடையில் வருமே
"பாடா படுத்தும் காடா கருப்பா வாடா நீயும் இறங்கி வாடா வந்துரு வந்துரு தானா வந்துரு இல்லன்னா பாட்டு படிப்பேன் உடுக்கை அடிப்பேன் சாத்தானோட கூட்டில் அடிப்பேன் வந்துரு வந்துரு தானா வந்துரு"
இதை திரும்ப திரும்ப கேட்டு அவன் என்ன சொல்றான் அர்த்தம் சொல்லுடா எனக் கேட்பாராம்.இந்தப் பட இயக்குனர் சுந்தர ராஜன் வேறு நடிகரை சிபாரிசு செய்த தயாரிப்பாளரை புறக்கணித்து விட்டு விஜயகாந்தையே பிடிவாதமாக படத்தில் போட்டாராம்..அப்படி எல்லாம் விஜயகாந்த் ஐ ஏத்தி விட்டேன் அவர் என் மகன் இறந்ததற்கு அடுத்த தெருவில் இருந்து கொண்டு வரல இதுதான் சினிமா உலகம் என வருத்தத்துடன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
*****************************************************************************
நீலக்குயிலே பாடலில் அடக்கிவாசித்து இருக்கிறார்SPB அப்படி நல்லபிள்ளையாக ஜானகியை மிஞ்சாத சிஷ்யனாக சொல்லிக்கொடுத்ததை சமர்த்தாகப்பாடுகின்றார்.ஒரு இடத்தில் கூட எல்லாம் தெரிந்த பாடகர் என்ற நினைவு இல்லாமல் புதியதாய் பாடல் கற்கும் மாணவனை அப்படியே பிரதி பலித்து இருக்கிறார்.

பாடல் காட்சிகளை படமாக்கி விட்டு ராஜா கையில் கொடுப்பார்களா என்றதொரு சந்தேகம் எனக்கு இருந்ததுண்டு.அவ்வளவு பொருத்தமாக பாடலை கேட்கும் போது நாம் முதன்முறை கற்பனை செய்ததற்கும் படத்திலும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.சமீபத்தில் என்றென்றும் ராஜா நிகழ்ச்சியில் எப்படி படமாக்கக்கூடும் என்று கற்பனை செய்தே இசையமைத்ததை குறிப்பிட்டார் ராஜா.இந்த வீடியோ இரண்டு நாட்கள் முன்பு தான் பார்த்தேன்.அப்படியே நளினி சொல்லிக் கொடுக்க மாணவனாக மோகன்.





5 comments:

பாண்டியன் said...

செம., பீல் பண்ணி எழுதி இருக்கீங்க .

பாண்டியன் said...

செம., பீல் பண்ணி எழுதி இருக்கீங்க .

பாண்டியன் said...

செம., பீல் பண்ணி எழுதி இருக்கீங்க .

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நன்றி :)

Unknown said...

ரசிக்க கற்றுக்கொள்கிறேன். நன்றி :))