ட்விட்டர் @Rexarul
நடத்திய #365RajaQuiz ஐ கௌரவிக்கும் பொருட்டு என்னாலான என் மனம் திறந்த பதிவு .இந்த நெடிய பயணத்தில் அவ்வப்பொழுது நானும் உடன் வந்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருக்கின்றது .என்ன ஒரு சமர்ப்பணம் மாஸ்டர்… மாஸ்டர் என்ற வார்த்தைக்கு முழுக்க பொருள் சேர்த்திருக்கின்றார் . நிச்சயம் ராஜா மட்டும் இவரின் இந்த அர்ப்பணிப்பான அவருக்கு ஒரு பைசா பிரயோசனம் இல்லாத பொழுதும் காரியத்தை செய்ததை அறிய நேர்ந்தால் மனிதர் புல்லரித்துப் போகக் கூடும் இப்படி ஒரு ரசிகரை நினைத்து.. எத்தனையோ ராஜா ரஹ்மான் சண்டைகளை இந்த ட்விட்டர் பார்த்து இருக்கின்றது. ஆனால் மாஸ்டரைப் போன்ற ஒரு ரசிகனை பார்ப்பது அபூர்வம் என்று எந்த இசையமைப்பாளரை ரசிக்கும் இதயம் சொல்லும்.. நிச்சயம் ஒரு பொறாமை கூட வரும்..
பலரின் ரசிகர்கள் அவர்கள் ரசிக்கின்ற விதத்தில் குருட்டுத் தனமான பற்றுதலில் அவர்களின் ரசனை,ரசிப்பவர்கள் மீதே வெறுப்பே வரும்.அதில் நடிகர்களுக்கோ அல்லது இசையமைப்பாளர் ரசிகளுக்கோ இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலோனோர் விதிவிலக்கே அல்ல.ஆனால் மாஸ்டர் அவர்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றார். ஒரு பாடலை ரசிப்பதற்கு அவர் வைக்கும் ஆழ்ந்த காரணங்கள் அதை அவர் ரசித்துச் சொல்கின்ற விதம் நிச்சயம் பலரை அவர் வசப்படுத்தி வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
இலவசம் அவர்கள் குறிப்பிட்டது போல எவ்வளவு விஷயங்கள் எத்தனைப் பாடல்கள் ..நான் நிறைய பாடல்கள் டௌன்லோட் செய்து வைத்திருக்கிறேன் ஆனால் அவர் இசைத்துணுக்கில் இருக்கும் க்ளாரிட்டி சத்தியமாய் இராது..அவ்வளவு அருமையாக ஒலிக்கும். ஆச்சர்யமாக இருக்கும்..எனக்கு பல நேரத்தில் ஒரு ஆகச் சிறந்த மன அழுத்த விடுதலை செய்யும் அம்சமாக இந்த #365RajaQuiz இருந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.அதனால் தான் நிறைவு தினத்தில் எந் த ஒரு திட்டமிடலும் இன்றி வந்தவுடன் மனதில் இருப்பதை படபடவென எழுதுகின்றேன்.@vrsaran . @RagavanG போன்ற நல்ல நண்பர்களைப் பெற்றுத் தந்ததுவும் இந்த #365RajaQuiz தான் .
நீண்ட நாட்களுக்குக் பிறகு , ஒரு கண்டிப்பான அதே சமயம் தெரியாமல் முழிக்கின்ற நேரத்தில் தட்டிக் கொடுத்து கண்டுபிடிக்க வைக்கும் அருமையான வாத்தியாரும் , நான் திருதிருவென விழிக்கும் பொழுதெல்லாம் . எக்ஸ்ட்ராவாக க்ளூ கொடுத்து எனக்கு உதவி செய்யும் நண்பர்களுமாய் ஒரு பள்ளிக் காலத்தை கழித்தது போன்ற உணர்வு..திரும்ப ஒரு பயணத்தில் இணைவேனா தெரியாது.ஆனால் நிச்சயம் இதை மறக்கவே மாட்டேன் :) மாஸ்டரின் பதிவுக்கு அருமையாய் ரசித்து பின்னூட்டமிடும் பிரசன்னா போன்றோர் இன்னும் இதை அழகாக்கி இருக்கின்றார்கள்.
தெரியாத பாடல் என்றால் விட்டு விடுவதுண்டு.தெரிந்த பாடல் என்றால் திரும்பி அவர் அடுத்த பதிவு போடும் வரை மண்டை காய்ச்சல் தான் . பல நல்ல பாடல்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி :) (ஒரு போக்கிரி ராத்திரி , ஒரு கானம் அரங்கேறும் இப்படி பல..அதே போல பல பாடல்கள் பிடித்திருந்தாலும் கேட்டு நெடு நாளாகி இருக்கும்.அவை அவர் அறிமுகம் செய்கின்ற விதத்தில் இன்னும் மெருகேறி இன்னமும் இன்னமும் பிடிக்கும். உதாரணமாக மேகம் மேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி , வானமென்ன கீழிருக்கு ,அள்ளித் தந்த வானம் அன்னை அல்லவா ,,மலேசியா ,சொர்ணலதா போன்ற பாடகர்களின் தனித்திறன் அறியப் பெற்றது மாஸ்டரைப் போன்றோர் இங்கே பாடல் அறிமுகப் படுத்தி அதை ஒரு விவாதமாக்கும் பொழுதில் தான் .சொக்கன் சார் சொன்னது போல இதில் ராஜாவே பங்கு பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததுண்டு.ஆனால் அவர் மாஸ்டர் கொடுக்கிற க்ளூவை வச்சுப் பார்த்தா நிச்சயம் குழம்பிடுவார் என்னைப் போலவே :)
தலைப்பிலேயே க்ளூ வைக்கின்றார் என்பதே ராமன் அப்துல்லா படப் பாடலை புதிரில் வச்சப்போ தான் தெரிஞ்சுது என்றால் நான் எவ்ளோ ட்யூப்லைட் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளவும் :) அப்புறம் அவர் சொல்லும் வானொலி க்ளூ மண்டை காயும் .நேரில் கிடைத்தார் என்றால் எத்தனை பாட்டு சார் வானொலி ல கேட்டீங்க என்று ஒரு உலுக்கு உலுக்கனும் போல தோணும் :) தப்பிச்சுட்டார் :)
வாய்ப்பே இல்லை மாஸ்டரைப் போன்ற ஒருவர்..
எப்பவும் அண்ணனிடம் திட்டு வாங்குவேன்..ஆனால் அவர் இசைத் துணுக்கை ஓட விட்டு எங்க அண்ணனையும் யோசிக்க விட்டு மண்டை காய விடுவதில் ஒரு தனி ஆனந்தம் :) )
மானுத் தோலு ஒண்ணு மஞ்சக் கிழங்கு ஒண்ணு பாடலுக்கு அவர் கொடுத்த இசைத்துணுக்கு அம்மன் கோவில் வாசலிலே பாடலுக்கும் கொஞ்சம் ஒத்து வரும் ..அதே போல பாரி சாத பூவே,நான் சிரித்தால் தீபாவளி இரண்டு பாடல்களில் interludes ..வாவ் இந்த ராஜா என்ன என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்று மாஸ்டர் மூலமாக இன்னும் அறிந்தேன்.அதே போல ஷெனாய்க்கும் நாதஸ்வரத்துக்கும் வித்தியாசமே தெரியாது.ஆனால் மாஸ்டர் கொடுக்கிற க்ளூ வச்சு இது இன்ன இன்ஸ்ட்ருமென்ட் என்று தெரியும்…ரியலி ஹேட்ஸ் ஆஃப் மாஸ்டர் :)
அள்ளித் தந்த வானம் பாடல் என்ன படம் என்றே கண்டுபிடிக்க முடியாமல் ட்விட்டர் டைம் லைனில் நான் திணற கானாபிரபா sundar 140 என்று பலரும் க்ளூ கொடுத்தும் அந்த "கடல் நண்டு"எனக்கு சிக்கவே இல்லை :) இறுதியில் ஒரு இருபது பேராவது என்னோடு மண்டை காய்ந்து அந்தப் பாடல் என்னவென்று எனக்கு சொல்லித் தந்து விட்டுப் போனார்கள் :)ஆனால் பொதுவில் க்ளூ வைத்து விவாதிப்பது புதிரை நீர்க்கச் செய்யும் என மாஸ்டர் மென்மையாக கண்டித்ததால் அத்தோடு டைம் லைனில் விவாதிப்பது கிடையாது.
மாஸ்டர் முதல் நாள் கொடுத்த பாடலையே கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்போம் நானும் @amas32 அம்மாவும்..ஆனால் மிஸ்டர் முசகுட்டி @vrsaran அடுத்த பாடலுக்கு மாஸ்டர் ப்ளீஸ் செக் டிம் என் விடை சரிதானா பார்த்துச் சொல்லுங்கள் எனும் பொழுது முதல் பெஞ்ச் ல உட்கார்ந்து முந்திகிட்டு பதில் சொல்வோர் மீது ஒரு ஆதங்கம் வருமே அது போல வரும்.
அதுக்குள்ள என்ன அவசரம் என்று தலையில் கொட்டி விடத் தோன்றும் :) ஆனால் அவரை விட @yezhara இன்னும் சிலர் பல பதில்களை மிகச் சரியாக ஊகித்து முதல் இடத்தில் இருப்பதைப் பார்த்தால் மலைப்பாகவே இருக்கும்.
எந்த ஒரு விசயத்தையும் வெறும் நுனிப்புல்லாக மேயாமல் மனதிற்குப் பிடித்த விசயத்தை ஆழ்ந்து அதில் தேர்ந்த அறிவு பெறுவது எப்படி என்று இங்கே மாஸ்டர் @rexarul ,@nchokkan ,@kryes @kanapraba இன்னும் சிலரிடமும் கற்றுக் கொள்ளலாம்..விரல் நுனியில் வைத்திருப்பார்கள் சேதிகளை.
எத்தனை பஞ்சாயத்துகள் ட்விட்டரில் ஓடினாலும் #365Rajaquiz இந்த ஒரு வருடத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம் என்றே நினைக்கின்றேன்.
ஊரடங்கும் சாமத்திலே ,காதல் மயக்கம் இன்னும் பல பாடல்கள் இந்த #365Rajaquiz ஆல் மறக்க முடியாத ஒன்றாகிப் போனது.
மொத்தத்தில் ஒரு அருமையான சுகானுபவம் இனிமையான பயணம் இந்த #365Rajaquiz .
மாஸ்டர் @rexarul -ன் அர்ப்பணிப்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!