ரேடியோ மிர்ச்சியில் RJ hunt நடக்கவிருப்பதாக அறிவிப்பு செய்யவும் விண்ணப்பிக்கலாமா என்ற யோசனையை ட்விட்டரில் பகிர்ந்தேன்.உடனே விண்ணப்பியுங்கள் என நண்பர்கள் தூண்டி விட்டதில் அவர்களுக்கு போன் செய்து என் பெயரை பதிவுசெய்தேன் . பதிவு செய்யப் பெயர் வாங்கிய விதத்தில் திரும்ப அழைக்க மாட்டார்கள் என்றே தோன்றியது.
ஆனால் 26 ஜனவரி சனிக்கிழமை நன்றாய்த் தூங்கிக் கொண்டிருந்த மதிய நேரத்தில் அழைப்பு.நாளை நேரடித் தேர்வு இன்ன இடத்திற்கு வாருங்கள் என்று. என்னைச் சமனப் படுத்த சிறிது நேரம் எடுத்துக் கொண்டு ஏதும் கலாய்க்கிறீர்களா ?என்றதும் சிரித்துவிட்டு நிஜம்தான் நேரிலே வாங்க என்றார்:)
நிஜமாகவே நம்பமுடியவில்லை.படித்து முடித்த புதிதில் ஆறு மாதம் வேலை பார்த்ததோடுசரி.வெளியே வேலைக்கு சென்று பழக்கமே இல்லை . . HCL காக பாண்டிச் சேரி சென்றதுண்டு .நண்பர்களின் வாழ்த்துரைகள் கொடுத்த பலத்தில் செல்வது என முடிவெடுத்து நான்கு ட்ரெஸ்ல அஞ்சாவதா பேபி பிங்க் (வாட் டு டூ அதை விட பெஸ்ட் வேற இல்ல :P )தேர்ந்தெடுத்து அழகாய் 3/4 டாப்ஸ் வித் செமி பாட்டியாலா காட்டன் சுடி எனக்கே திருப்திகரமாய்த் தோன்றியது :) பனிரெண்டு மணிக்கு வரச் சொன்னதால் மிகச் சரியாக 12:10 க்கு (ஹி ...ஹி ...எவ்ளோ பெரிய தேர்வாக இருந்தாலும் இப்படித்தான் போறது:)) ) என் வண்டி அந்த வளாகத்தினுள் சீறிப் பாய்ந்தது:)ஆனால் எனக்கு முன்னாடியே 215 வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆடிஷன் போய்க் கொண்டிருந்தது..ஆகா இவ்ளோ பேர்ல நாம எங்கே தேரப் போறோம் வந்ததுக்கு சும்மா ஹாய் சொல்லி வைப்போம் என்று முடிவெடுத்து ஒரு ஓரமாய் விண்ணப்பம் நிரப்ப ஆரம்பித்தேன்.சாதாரணக் கேள்விகள்தான் எனக்குத் தெரிந்தை மட்டும் குறிப்பிட்டேன். பாடல்கள் விரும்பிக் கேட்பதுவும், அதை ரசித்தும் சின்ன தகவல்களுடன் எழுதுவது, FM ல பாடல் கேட்பது மிகப் பிடிக்கும் ,எனது ரிபீடெட் ப்ளே லிஸ்டை விட அது பல பாடல்களை திரும்ப கேட்கவும் புதிதாய் கேட்கவும் வசதியாய் இருப்பதால், .கவிதை வரும் எனவும் blogger என்றும் குறிப்பிட்டு இருந்தேன் .தேடித் பிடித்து என் blog படிக்க மாட்டார்கள் என்று அப்படி ஒரு நம்பிக்கை :)
அப்புறம் வேடிக்கை பார்க்கிற பழக்கம் இருக்கே அது கூடவே பிறந்தது :) அதனால் வந்திருந்த பிற பெண்கள் ஆடிஷனில் நடப்பவை நடக்கின்ற இடம் என ஒவ்வொன்றாக கவனிக்க ஆரம்பித்தேன்.வந்திருந்த நபர்களின் உடையில் தான் முதல் கவனம் (பழக்க தோஷம் :) )
சென்னை அளவுக்கு மதுரை மாற இன்னும் பத்து வருடம் ஆகும் என நினைக்கிறேன் . அரிதாய் சில ஜீன்ஸ் ,படிய வாரிய தலை , ஜிகுஜிகு மசக்கலி,பொருந்தாத லெக்கின்ஸ் ,தலை நிறைய மல்லிப்பூ,எதுவும் பண்ணிடுவாங்களோ என்ற பயந்தார் போல துணைக்கு அம்மா ,அப்பா,அண்ணன் , போர்வையாய் போர்த்தப் பட்ட ஷால்,ஜீன்சுக்கு பொருந்தாத டாப் இருந்தாலும் முகத்தில் ஒரு இன்னொசன்சி அதான் மதுரைப் பொண்ணுங்க :)
அப்புறம் பசங்க மெடிகல் ரெப் மாதிரி சில formals மீதி காதுல ஒரு தோடு மாதிரி வைட் ஸ்டோன் காட்டன் ஷர்ட் ,ஜீன்ஸ் என கேசுவல் ஆடைகள்தான்.அங்கும் இங்குமாக அலைந்த ஒரு சில ரேடியோ மிர்ச்சி RJ களை பார்க்க நேர்ந்தது எங்கே ஒரு நபரின் ஜீன்ஸ் எந்த நேரம் கழண்டு விழுந்து விடுமோ என்று கழுத்தையும் கவனத்தையும் வேறு பக்கம் திருப்ப நேர்ந்தது.(இவங்க தோளோடு இறுக்கிப் பிடிச்ச பெல்ட் குட்டீஸ் பாபா சூட் மாதிரி ஒரு ஜீன்ஸ் வாங்கினாத் தேவல பாவம் இடுப்புல நிக்க மாட்டிக்கு )
மெலிதாய் ஆனால் நீளமாய் கிருதா வேறு ஏதோ வேற்று கிரக வாசிகள் மாதிரி தெரிந்தார்கள் :)
ஆடிஷன் நடக்கின்ற இடத்தில் மிர்ச்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் அழகாய் இருந்தாலும் ஏனோ சிரிக்காமல் கஞ்சத்தனம். இயல்பான அமைதியாக அல்லாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தனர்.ஆனால் ஆண் RJ கள் அரங்கையே கலகலப்பாக்கி வெகு இயல்பாக வந்தவர்களை வரவேற்று பேச வைத்துக் கொண்டிருந்தனர்.அவ்ளோ பெரிய அரங்கத்தினுள் ஒரு கடிகாரம் கூட இல்லாதது வியப்பாக இருந்தது.முதலில் வந்தவர்களை ஸ்டேஜ் performance செய்ய வைத்துக் கொண்டிருந்தார்கள்.அதிலே என்னைக் கவர்ந்தது ஒரே ஒரு ஆண் மட்டுமே அவரும் தயார் செய்து வைத்திருந்ததை ஏற்ற இறக்கங்களுடன் சொல்லிய விதம் பிடித்திருந்தது .
நன்றாய் பேச வேண்டும் என வந்தவர்களையும் சரியாய்ப் பேச விடாமல் அவர்கள் பேசுவதையும் சரியாய்க் கேட்க விடாமல் பின்னால் இருந்து மாப்பிள்ளை பெஞ்ச் வழக்கம் போல சவுண்ட்.அந்த நேரம் பார்த்து ஒரு பெண் பிடிக்காட்டி கத்திடாதீங்க என்ற வேண்டுகோளோடு பேச வந்தார் அரைமணி நேரம் மேலாக விவேகானந்தர் பற்றி பின்னால் இருப்பவர்களின் கத்தலையும் பொருட்படுத்தாது பேசி முடித்துவிட்டே அமர்ந்தார் :) எங்கே இந்த விவேகானந்தர் தேர்வாகிவிடுவாரோ என்று எனக்கு திகிலாகவே இருந்தது
.எனக்கு அருகில் இருந்த பெண் tvs wego test drive வேண்டுமானால் போய்வாருங்கள் அவங்கதான் ஸ்பான்சர் போல எனவும் சரிதான் என்று கிளம்பிவிட்டேன் அந்த வளாகத்தின் கேட் வரைக்கும் தான் டெஸ்ட் டிரைவ் அனுமதி. ஆசையாய் இருமுறை சென்று வந்தேன் :)வண்டியில் ஒரே மைனஸ் என நான் நினைப்பது அவசரத்திற்கு நிறுத்தும் பொழுது இரண்டு பக்கமும் காலைத் தரையில் ஊன்றி பேலன்ஸ் செய்வது வெகு சிரமம் ஒரு பக்கம் சாய்த்து நிறுத்த வேண்டும்.பழகினால் ஒழிய சட்டென்று அப்படி வராது.
மதியம் வரை 110 நபர்கள் மட்டுமே நேரடியாக ஸ்டேஜ் performance செய்தது ஒருமணி நேர உணவு இடைவேளைக்குப் பின்பு மற்ற அனைவருமே முதல் லேவலான ஸ்டேஜ் performance க்கு அனுமதிக்கப் படவில்லை நேரடியாக சில RJ களின் நேர்முகத் தேர்வுக்கு மிக மிக குறைவான நிமிடங்களில் மட்டுமே பேச அனுமதிக்கப் பட்டார்கள்.மொத்தம் ஐநூறு பேரையும் ஒரே நாளில் ஸ்டேஜில் perform செய்ய வைத்து அதன் பின்பு நேரடிக் கேள்விகள் கேட்பது சிரமமே எனினும் முதலில் வந்த நூறு பேருக்கு மட்டும் அப்படி அனுமதித்து விட்டு பின்னால் வந்தவர்களுக்கான நேரத்தை குறைத்தது எவ்விதத்தில் நியாயம் ?அனைவர்க்கும் அதே போல சமமாக ஸ்டேஜ் performance செய்ய வாய்ப்பளித்திருக்க வேண்டும் அப்படி என்றால் நிச்சயம் ஒரு நாள் போதாது தொடர்ச்சியாக இரண்டு நாள் எவரும் ஸ்பான்சர் செய்ய மாட்டார்கள் . முடியாதென்றால் காலையில் இருந்தே ஒவ்வொருவரையுமே நேர்முகத் தேர்வு மட்டுமே வைத்திருக்கலாம்.இது பெரிய சொதப்பலாக பட்டது எனக்கு.
நான் ஒரு நிகழ்ச்சி நடத்தினால் என்ன பெயர் வைத்து அதை எப்படி நடத்துவேன் என்று யோசித்து வைத்திருந்தேன் . என்னைப் போன்றே பிறரும் இருந்திருக்கலாம்.எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப் படாதது எனக்கு மிகவும் வருத்தமாக பட்டது இறுதிவரை கொடுப்பார்கள் என்றே நினைத்திருந்தேன்.காலையில் இருந்து interview செய்து அவர்களும் களைத்துவிட்டார்கள் என்ற சமாதானம் சரியா?
மதியத்திற்கு மேல் ஏற்கனவே performance செய்தவர்களை அவர்களின் அனுபவத்தை பகிரச் சொன்னார்கள் .பின்பு ஸ்பான்சர் செய்த டிவிஎஸ் வேகோ மற்றும் இதயம் நல்லெண்ணெய் நிறுவனம் சார்ந்தவர்கள் சில நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப் பட்டது.போன RJ hunt இல் final வரை வந்த நபர் அங்கே வந்து சின்னதாய் ஒரு performance கொடுத்தார்.வழக்கமான மிமிக்ரி (நம்ம ட்விட்டர் பலகுரல் மன்னன் timing இன்னும் நன்றாக இருக்குமே :) ) எனினும் அதை அவர் ப்ரெசெண்டஷன் செய்த விதம் நன்றாக இருந்தது.
வெகு இயல்பாக துறுதுறுவென கவர்ந்தவர் RJ தமயந்தி.போன வருடம் 850 பேர் கலந்து கொண்டதில் பதில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டு ஒருவார ட்ரைனிங், வோட்டிங் ப்ராசஸ் க்குப் பின் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.தன் அனுபவங்களை சுவையாக பகிர்ந்து கொண்டு உபயோகமான டிப்ஸ்-ம் கொடுத்தார்.கோலிசோடா என்ற நிகழ்ச்சி இவர் நடத்துவதுதான் ஆச்சர்யம் அந்த தமயந்திக்கும் இந்த தமயந்திக்கும் நிறைய வித்தியாசம். ஏன் என்றால் அந்த நிகழ்ச்சியில் காட்டு கத்தலாய்க் கத்துவார் எனக்கு அறவே பிடிக்காது நேரில் அப்படிஇல்லை.
அடுத்தது அபிஷேக் இவரும் வெகு நன்றாகப் பேசினார்.RJ -யின் பவர் என்ன என்பதை ஒரு மும்பை நிகழ்வைச் சொல்லி சொன்னார்.மும்பை குண்டுவெடிப்பின் பொழுது பாதிக்கப்பட்ட இடத்தில இருந்து ஒரு சிறுமி அந்த ஊர் RJ க்கு போன் செய்து பாதுகாப்பு வேண்டியதாகவும் அதன்பின் அந்தப் பெண் காப்பாற்றப் பட்டதாகவும் சொன்னார்.
RJ ஆவதில் உள்ள ப்ளஸ் மைனஸ்,பெரிய ஆட்களைப் பேட்டி எப்படி எடுக்க வேண்டி வரும்,சாமான்யர்களின் அன்பு இப்படி சுவராசியமாகச் சொன்னார்.
விகடன் அவார்ட் சமீபத்தில் சிறந்த FM என விருது கொடுத்திருக்கு காசு கொடுத்து வாங்கல (உன்னைக் கேட்டாங்களா முருகேஷா?:) ) என்றார்.விகடன் சுவராசியமான பத்திரிகை ஆனால் நடுநிலையானது அல்ல என்பது என் கருத்து . பிரபலமான சரவணன் மீனாட்சி,கல்லூரிச்சாலை கனா காணும் காலங்கள் என்று விஜய் டிவி நல்ல சீரியல்கள் இருக்க அழகி ,தென்றல்,திருமதி செல்வம் என்று அவங்க ப்ரொடெக்ஷன் சீரியல்களுக்கு மட்டுமே இதுவரை விருது கொடுத்த்திருப்பதால் ..ஹி ..ஹி .. :)) சரி அதையும் மீறி ரேடியோ மிர்ச்சி ஒரு நல்ல fm என்பதை ஒத்துக் கொள்கிறேன் .ஆனால் 25 லட்ச மதுரை மக்கள் தொகையில் 15 லட்ச மக்கள் ரேடியோ மிர்ச்சி தான் கேட்பார்கள் என்றதை மட்டும் நம்பல ஏனென்றால் மதுரை மக்களுக்கு FM கேட்கும் பழக்கத்தையே உருவாக்கியது கோடை FM பத்து வருடங்களுக்கு முன்பு இவங்க சத்தமில்லாமல் வந்தபொழுதே ஆரவாரமான வரவேற்பு.வானவில் என்று ஒரு நிகழ்ச்சி போடுவாங்க பொதுமக்கள் ஒரு பொது விஷயம் எடுத்து நல்ல கருத்துகளை முன் வைக்க வழி வகுத்தது கோடை FM இது போன்ற நிறைய நல்ல நிகழ்சிகளைச் சொல்லலாம்.24 மாவட்டங்கள் 2.5 கோடி மக்களைக் கவர் செய்யும் பண்பலை .இன்று என் மொபைலில் சரியாக கிடைக்க மாட்டேன்குது:(
RJ ,ஸ்பான்சர்ஸ் பேசியவை தவிர அனுபவம் சொல்லுங்க ஏதாவது perform பண்ணுங்க என காலையில் ஏற்கனவே பேசியவர்களைச் சொன்னதற்கு மீதி இருப்பவர்களை பேசச் சொல்லி இருக்கலாம்.
காலை 12 மணிக்கு போனதுக்கு மாலை ஐந்து மணிக்கு அழைக்கப்பட்டேன்.எனக்கு முன்பு சென்றவர் போன வேகத்தில் திரும்பி வந்தது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது.
உள்ளே நுழைந்ததும் 30 செகன்ட்டுக்குள் உங்களைப் பற்றி சொல்லுங்கள் எனச் சொன்னதை ஜீரணிக்கவே எனக்கு 30 செகண்ட் மேலாகியது.சுருக்கமாச் சொல்லனும்னா எனக்கு சுருக்கமாச் சொல்லத் தெரியாது என்ற ராஜா சந்திரசேகரின் ட்வீட் வாய் வரை வந்து மென்று விழுங்கினேன்.சீக்கிரமே துரத்திவிடுவார்கள் கிடைத்த நேரத்தை எப்படியும் அதிகப்படுத்திவிடுவது என்ற நோக்கத்தோடு பேச ஆரம்பித்தேன்.பெயர் படிப்பு ஆர்வம் உள்ள விஷயங்கள் மட்டும் முதலில் சொன்னேன்.என்னை அதிகம் சிரமப்படுத்தாமல் நான் பிடித்த விஷயங்கள் எனக் குறிப்பிட்டதைப் பற்றியே கேள்வி கேட்டார்கள்.பிடித்த இசையமைப்பாளர் என்றதும் இளையராஜா என்றேன் அடுத்த கேள்வி அப்போ அவருடைய நூறாவது படம் என்ன?(மூடுபனி என்பது அந்த நேரத்தில் நினைவு வராமல் முரண்டு பண்ணியது.ஒரு முசகுட்டி (@vrsaran )இருந்திருந்தா ஈசியா க்ளூ கொடுத்திருப்பாரே என நொந்து கொண்டு )நேரத்தை வீணடிக்காமல் நான் அதிகம் கேட்டது ராஜாவின் பாடல்கள்.பாடல்கள் பரிச்சயமே அன்றி அவரைப் பற்றிய விசயங்களைத் தேடி தெரிந்துகொண்டதில்லை என்று உண்மையைச் சொன்னேன்.ஏதேனும் பிடித்த பாடலைப் பற்றிப் பேச முடியுமா என்றார்கள் ஆகா பறவை எடுத்துக் கொடுத்தது நினைவுக்கு வர மாலையில் யாரோ மனதோடு பேச பாடலைப் பற்றி முக்கியமான சில வரிகளை மட்டும் பகிர்ந்தேன்.கைகளைக் கட்டிக் கொண்டு புன்னகைத்துக் கொண்டே அவர் ரசித்துக் கேட்டது இன்னும் கண்களுக்குள் :))
சொல்ல மறந்துட்டேனே கவிதை வரும் எனக் குறிப்பிட்டு இருந்ததால் கவிதை சொல்லச் சொன்னார் கேட்பார்கள் என்ற யூகம் இருந்ததால் யோசித்து வைத்திருந்ததைசொன்னேன்.
"தோல்வியே வெற்றிக்கு முதல் படியாம் திரும்பிப் பார்த்தேன் படிகளுக்கொன்றும் குறைச்சலில்லை" tweet link
நிஜமாகவே நீங்க எழுதினது தானா ரொம்ப நல்லாருக்கே என சந்தேகத்துடன்
கேட்டார். நிதானமாக நிஜம் தான் ஸார் இமயமலை ஏறும் அளவுக்கு படிக்கட்டுகள் இருக்கு என்றதும் சரி என்றுவிட்டார் .
fm கேட்கும் பழக்கம் உண்டா எது மிகப் பிடிக்கும் எனக் கேட்டார். .என் வேலை காரணமாக பகல் பொழுதில் (ட்விட்டர் சேவை பற்றி சொல்லாமல் விடுத்தேன் :P ) கேட்பது சிரமம்.அப்படியே கேட்க நேர்ந்தாலும் சார் ஜெனூயினாச் சொல்லனும்னா பகலில் படபடவென கத்திப் பேசுவது ,அதிக விளம்பரம் இடைவேளை,பாடல் போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே பாதியில் நிறுத்திவிட்டுப் பேசுவது பிடிக்காது.அதனால் இரவு நேரங்களில் செந்திலின் NNR (நீங்க நான் ராஜா சார் )மிகப் பிடிக்கும்.தகவல்களோடு அவர் பேசுவதும் சுவராசியம் இயக்குனர் வசந்த் பேட்டி எடுத்தது கூட அருமை என்றேன்.பிற FM ல சமீபத்தில் கவர்ந்தது சூரியன் FM -இல் யாழ் சுதாகர் உச்சரிப்பே தனி காற்று மண்டலத்தைக் கற்கண்டு மண்டலமாக்க பூக்களான பாடல் தெரிவில் ய்யாழ்ழ்ழ் சுதாகர் என அவர் சொல்வதே அழகு என்றேன் உடனே அவர் நாதகாலா ஜ்ஜோத்தி இளையராஜ்ஜாவின் என நானும் இணைந்தே இசை வார்ப்பில் என முடித்தேன்:) . அப்புறம் 12 மணிக்கு மேல் ஹெலோ fm ல வாடாத ரோசா வாடிப் பட்டி ராசா பிரபு கலக்குறார் சார் எனச் சொன்னேன்.அவர் கவனித்ததாகவே தெரியவில்லை. ம்ம் கொடுக்காததால் நம் சிட்னி fm பற்றி அறியும் அரிய வாய்ப்பை இழந்துவிட்டார்:)நீங்கள் கேட்க வ்வ்வேண்டும் என்று இதோ உங்களுக்கான பாஆடல் வழங்குவது உங்கள் கானாஆ ப்ரபா என்று சொல்லிருப்பேன் :))
ரேடியோ மிர்ச்சியில் NNR தவிர பிடித்த ஒன்று ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பாடல் மெட்டில் ரேடியோ மிர்ச்சி இது செம ஹாட் மச்சி என்பதை விதம் விதமாக பாடுவார்கள் அது ரொம்ப பிடிக்கும் என்பதைச் சொன்னேன்.ஒருவேளை இந்த வேலை கிடைத்தால் எப்படி உணர்வீர்கள் என்றார் .RJ ஆக வேண்டும் பெரிய கனவு இருந்ததில்லை நட்பு வட்டம் உங்களால் முடியும் எனச் சொல்லி அனுப்பினார்கள்.எனக்கு சின்ன வயதில் இருந்து இசை ஒரு நல்ல நண்பன்.எங்களுக்கு ஒரு கம்பெனி இருக்கு இருப்பினும் இங்கே வந்தது மனதிற்குப் பிடித்த விசயமே வேலையாக கிடைப்பது ஒரு வரம் என்பதை உணர்ந்த காரணத்தினால்தான். IF I GET IT I ll DO MY BEST என்றேன்.சரி இன்னும் நிறைய levels இருக்கு இன்னும் நாங்க நிறைய பேரை interview செய்ய வேண்டி இருக்கின்றது நேரம் ஆகிவிட்டதால் (மாலை ஐந்து மணிக்கு மேல் )நீங்கள் இப்பொழுது கிளம்பலாம் நாங்கள் மொத்தமாக முடித்துவிட்டு பிடித்திருந்தால் call செய்வோம் என்றார்.
கிளம்புகின்ற நேரத்தில் RJ தமயந்தி வந்து நீங்கள் இவ்வளவு நேரம் பேசியது யாரிடம் தெரியுமா?எனக் கேட்டார்.தெரியாது என்றேன்.அதற்கு அவர் அவங்க பகலில் FM கேட்கவே மாட்டாங்களாம் செந்திலின் NNR மட்டும் தான் கேட்பாங்களாம் என்றபோது அந்தக் குரலில் இருந்த ஏதோ ஒன்று உறுத்தியது.அவர் சொன்ன முக பாவத்தில் சிரிப்பே வந்துவிட்டது.(நல்ல குழந்தை மாதிரி அழகு :))சைக்கிள் கேப்பில் சைட்டடிச்சேன் :) ) நிச்சயம் பகல் நேரத்தில் அவர் செய்யும் நிகழ்ச்சிக்கு போன் செய்து உங்களை ரொம்ப பிடிக்கும் சார் என்று சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டேன் :))
அவர் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார்.பின் அந்தப் பெண்தான் ரமணா என்றார் விளம்பரம் கூட கேட்க மாட்டீங்களா என கேட்க அவங்களுக்கு விளம்பரமும் பிடிக்காதாம் என்றார் :) மிகச் சிரமப்பட்டு பெயர் கேட்டிருக்கிறேன் என்றேன் நிச்சயம் நம்பி இருக்க மாட்டார் :)) கதவை மூடி விட்டு வெளியே வந்த பொழுது மூடு பனி நினைவுக்கு வந்து தொலைத்தது.ஆனால் திரும்பப் போய்ச் சொல்ல மனம்வரல
இதன் மூலம் நான் தெரிந்து கொண்டவை :
1.அபிஷேக் சொன்னது போல திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ரஜினி தான் எழுதினார் என்று பொய்யைக் கூட சுவராசியமா சொல்லத் தெரியனும் .
2.எந்த வேலைக்குச் செல்கிறோமோ அதன் மீது முதலில் இருந்து ஈடுபாடு இருந்திராவிட்டாலும் ஈடுபாடு மிக்க ஒன்று எனச் சொல்லத் தெரியனும்
3. fm interview என்ற பட்சத்தில் முதல் நாள் அந்த சம்பந்தப்பட்ட FM நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் கேட்டு அதில் சுவராசியமான பகுதிகளை ரசித்துச் சொல்ல வேண்டும்.பிடிக்காததை தவிர்க்கலாம்.
4. RJ தானே நல்ல லூசு மாதிரி பேசினாப் போதும்பா என்று என அண்ணன் அறிவுரை கொடுத்தது போலவே தான் பொதுவாக RJ பற்றி பரவலான கருத்து.ஆனால் அவர்களைத் தேர்ந்தெடுக்க எவ்வளவு டெஸ்ட் வைக்கிறாங்க அதில் எவ்வளவு திறமையுடன் அவங்க செயல்பட்டு பல நூறு பேரில் ஒன்றாக வருகிறார்கள் என்பது தெரிந்தபின் மலைப்பு.நிச்சயம் அவர்கள் திறமைசாலிகளே.கலகலவென கூட்டத்தில் முன்பின் அறியாதவர்களிடம் சமயோசித புத்தியுடனும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவது என்பது அசாத்திய திறமையே .நம்ம ட்விட்டரில் கௌண்டர் கொடுத்து உடனுக்குடன் நுட்ப மொக்கை போடும் கார்க்கி போன்றோர் இதற்கு முழுத் தகுதியானோர் :)
5. 60 செகண்ட்ஸ் என்பது எவ்வளவு நீளம் என்பது நீங்கள் ஒரு RJ ஆனபின்பே தெரியும் என்று அபிஷேக் சொன்னார்.சொல்லாமலே புரிந்து கொண்டது ஏதோ படபடவென வேகமாப் பேசுறாங்க என்பது மட்டுமே நம் பக்கம் தெரியும்.உண்மையில் அவர்கள் கொடுக்கின்ற நேரத்திற்குள் ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்குள்ளும் சீக்கிரம் பேசி முடிக்க வேண்டும் என்பது டார்கெட் அதில் அப்படித்தான் பேச முடியும்
இரவு நேரங்களில் விளம்பர இடைவேளை இல்லாததால் தான் அவ்வளவு நிதானமும் இலகுத் தன்மையும் என கணிக்கிறேன்
6.அத்தனை பேருக்கும் நேரம் குறைக்கப்பட்டாலும் வெறும் கண் துடைப்பு நேர்முகத் தேர்வு எனச் சொல்ல முடியாது வேறு பிரபலங்களின் தெரிந்தவர்களின் reference பற்றிக் கேட்கவில்லை ஏதேனும் மீடியாவில் முன் அனுபவம் உண்டா என்பதைத் தவிர .இறுதியாக ஒருவாரம் சென்னையில் பயிற்சி அதன்பின்பு மக்களிடம் ஓட்டெடுப்பு என நிறைய நிறைய levels உண்டு.பார்த்து filter பண்ணிதான் தேர்ந்தெடுக்கிறார்கள்.
7.பெரிய எதிரி தயக்கம்.சரியோ தவறோ அதை வெளிப்படுத்தும் விதம்தான் முக்கியம்.இலகுவாக பிறரிடம் பழகும் தன்மை நல்லது.
8. பெரிதாக வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை பேசுகின்ற திறன் மட்டுமே கவனத்தில் கொள்ளப் படுகின்றது
9. RJ என்றால் ஏதோ படபடவென பேசிவிட்டு ஜாலியாக பார்ட் டைம் ஜாப் சம்பளம் வாங்கிட்டு இருக்கலாம் என்பதல்லவாம் .தீபாவளி,பொங்கல் என்று விடுமுறை எல்லாம் கிடையாது அந்த நாட்களிலும் ஒலிபரப்பு இருக்கும் என்பதால் (அபிஷேக் சொன்னது)
10. ஆதலால் பொறுப்பை உணர்ந்தே இருக்க வேண்டும் ஏனோ தானோவென சும்மா அட்டெண்ட் பண்ணப் போன எனக்கு இது ஒரு நல்ல அனுபவம் :)
சொக்கன் #4varinote -இல் நண்பர் @RagavanG விஸ்வநாதன் பற்றிய ஒரு பதிவு போடவும் உடனே ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா என MSV பாடியதை உடனே கேட்க வேண்டும் எனத் தோன்றியது.அந்த நேரத்தில் சூரியன் FM RJ யும் அழகி சீரியலில் நடிப்பவருமான குருவி கோபால் இந்தப் பாடலை நீங்கள் RJ ஆக இருந்து ஒரு காதல் நிகழ்ச்சிக்காகவோ காமெடி நிகழ்ச்சிக்காகவோ வழங்க வேண்டி வந்தால் எப்படிப் பேசுவீர்கள் எனக் கேட்டார் .எனக்கு பதில் சொல்லத் தெரியல அவரே சொன்னார் அவரது timing ஆன சட்டென மனதில் உதித்து அவர் சொன்ன விதத்தை ரொம்ப ரசிச்சேன் RJ என்றால் என்ன என அபிஷேக் கொடுத்த விளக்கத்திற்கு வெகு பொருத்தமாக இருந்தது :))
நீங்களும் ரசிக்க கீழே :
காதல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்றால் :
உங்கள் உமா கிரிஷ் உடன் நீங்க கேட்டுகிட்டு இருக்கீங்க காதல் காதல் ..தினமும் நான் ஏங்குகிறேனே..உனக்காக… ஒரு சில நிமிடமாவது
என்னை நினைப்பாயா அன்பே எனக்காக...ஒரு காதலினின் காத்திருப்பு இது ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் தான்
இருக்காங்கிறதசிலர் ஒத்துக்க மாட்டாங்க .. ஆனா அவங்களுக்கேதெரியாமல் இருக்கும் அவ்ளோதான் .காதலுக்காக போராடுறவங்க அதற்கான வெற்றி கிடைக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு நிகர் வேறேதும் இல்ல
காதல் ல போட்டி வரலாம் காதலர்களுக்கிடையே போட்டி வந்துச்சுன்னா
ஆனா அதையும் தனக்கு சாதகமாக்கி வெற்றி பெறுபவர்கள் தான் வாழ்க்கையிலும் வெற்றி அடையிறாங்க அதுக்கு உதாரணம் இந்த பாடல் .." ... " உங்கள் உமா கிரிஷ் உடன் நீங்க கேட்டுகிட்டு இருக்கீங்க காதல் காதல்..
உங்கள் உமா கிரிஷ் உடன்
என்னை நினைப்பாயா
ஒவ்வொரு ஆணின்
அவ்ளோதான்
காதலுக்காக போராடுறவங்க
அதுக்கு உதாரணம் ஆனா அதையும்
காதல் ல போட்டி
காதலுக்காக போராடுறவங்க
காமெடி நிகழ்ச்சி என்றால் :
காமெடி ஷோ ன்னா.. ஏம்பா ..அப்பா அம்மா சொல்பேச்ச கேளுங்கன்னா கேக்குறாங்களா இந்த காலத்து பசங்க
இதே ஒரு பொண்ணு சொன்னா உடனே கேட்பாங்க ..என்னங்க நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையா / இந்த பாட்டுல பாருங்க மகனே வா மகனே வா ன்னு எத்தன தடவ அப்பா கூப்பிற்றாரு.திரும்பி பார்த்தாரா ? இதே ஒரு பொண்ணு பார்த்தேலே பின்னாடியே போவாங்கஇன்னும் நம்பிக்கை இல்லான்னா இந்த பாட்டகேளுங்க " ஆலாலகண்டா. " 2/4 நீங்க கேட்டுகிட்டுஇருக்கீங்கஉங்கள் உமாகிருஷ் உடன் தமாஷ் நேரம்
காமெடி ஷோ ன்னா
இதே ஒரு பொண்ணு
மகனே வா மகனே
இன்னும் நம்பிக்கை இல்லான்னா
ஒருவேளை நான் RJ ஆகி தமிழ் நாட்டின் தலை எழுத்து மாறிவிட்டால் எனது முதல் பாடல் நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாலையில் யாரோ வும் என் மரியாதைக்குரிய சொக்கன் அவர்களுக்காகவென்று பாடலாசிரியர் கங்கை அமரன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று செய்வேன் என்றும் உறுதி அளிக்கிறேன் :))
அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்காத பட்சத்தில் வழக்கம் போல ட்விட்டர் ஜாக்கியாக நீங்கள் கேட்காமலே பாடல்களை டைம் லைனில் வாரி வழங்கி உங்களை வெறுப்பேற்றுவேன் என்றும் என் செல்லம் ஜான் சேனாவின் மீது ஆணையிட்டு கூறுகிறேன் :))

9 comments:
அஹாஹாஹா.. சூப்பர்! வாழ்த்துகள் உமா! :)
விழுந்து விழுந்து சிரித்தேன் :-) சூப்பரா எழுதறீங்க! RJவாக வாழ்த்துகள். போய் ரேடியோ மிர்ச்சியில் கலக்குங்கள்! சீக்கிரம் அடுத்த ரௌண்டுக்குக் கூப்பிடுவார்கள், அதைப் பற்றியும் விரிவாக எழுதுங்கள் :-)
amas32
செம்ம அனுபவம் போல..
கடமையைச் செஞ்சாச்சு, பலன் ஆண்டவன் தருவான் :)
உங்கள் எழுத்து நன்றாக உள்ளது உமா - தொடர்ந்து எழுதுங்கள் : ரேடியோ ஜாக்கி ஆகாவிட்டால் என்ன - எழுத்தாளி ஆகி விடலாம் - உங்கள் அப்சர்வஷன் நன்றாய் இருக்கு : வாழ்த்துக்கள் உமா கிருஷ்
வாழ்த்துக்கள் உமா -
(எங்கக்கா பெரும் உமா தான் )
எழுத்து நன்னாவே இருக்கு
தொடர்து எழுதுங்கோ
ரேடியோ ஜாக்கி ஆகாட்ட என்ன ?
மிக்க நன்றி நிலா :)
மிக்க நன்றி சிவகுமார் எழுதுவதில் நான் சோம்பேறி இரண்டு வருடமாகியும் இப்போதான் ஐம்பது தாண்டி இருக்கு பாருங்க :)எழுதுனா நிறைய எழுதணும் மனதில் இருப்பதை எல்லாம் இல்லாவிடில் அப்படியே கிடப்பில் கிடக்கும்.இனி முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன் .உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி :)
Superb post uma:))
I felt I was with you in that interview room, very observant, lived the reference to the clothes and the interview :)))
Rock on Uma:))
மிக்க நன்றி :)))நீளமா போடுறோமே எவ்ளோ பேர் ரசிப்பாங்களோ என நினைச்சேன் டிவிட்டரிலும் இங்கேயும் கிடைக்கும் ரெஸ்பான்ஸ் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது :))
Post a Comment