Saturday, January 19, 2013

மாலையில் யாரோ மனதோடு பேச ..

இப்படி ஒரு பதிவை எழுத தூண்டுகோலாய் இருந்த நண்பர் @mokrasu அவர்களுக்கு ஒரு வணக்கம்:) 

பல நாட்களுக்கு முன் ஒரு ட்வீட் போட்டேன் சொர்ணலதா பாடியதில் மிகவும் பிடித்தது என்று.உடனே அவரவருக்கு பிடித்த பாடல்களை பகிர்ந்தார்கள் ஆனால் இவர் மட்டும் ராஜாவை விட ரஹ்மான் தான் சொர்ணலதா குரலை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார் முடிந்தால் ரங்கீலா படத்தில் ஹேய் ராமா யே க்யா ஹுவா பாடலைக் கேளுங்கள் என்று பரிந்துரைத்தார்.அண்ணனின் புண்ணியத்தில் அந்தப் பாடலையும் கேட்டிருக்கின்றேன்.ஆனால் இது ராஜா ரஹ்மான் வாதமே அல்ல சொர்ணலதா பாடியதில் எது சிறந்தது என்று வாதிட ஆரம்பித்துவிட்டார் .நான் எனக்குப் பிடித்தது என்றுதான் யதார்த்தமாய்ச் சொன்னேனே அன்றி எது சிறந்தது என்ற கேள்வியை முன்வைக்கவே இல்லை 

ஆக ஒரு ட்வீட்டையே உருப்படியாய்ப் படிக்க தவற விடுபவர்கள் எப்படி ட்விட் லான்கரைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதை எண்ணி...... :) அன்றைக்கே மனதில் தோன்றிவிட்டது இந்த பதிவு ஒன்று எழுத வேண்டும் என்று .பாடலைப் பற்றி மட்டுமல்ல இன்ன பிற விடயங்களையும் :)

முதலில் இங்கே @nchokkan  @Tparavai @Sharan_kay @Kavi_rt @Tpkd @kanapraba @rexarul @raviaditya @vrsaran இன்னும் பலர் இவர்களைப் போன்றவர்களோடு ஒரே ஜீப்பில் என்னையும் ஏற்றவேண்டாம் .நான் அவங்க அளவுக்கு விஷயம் தெரிஞ்ச ராஜா ரசிகை அல்ல.

ஏதோ என் அண்ணன் அந்த காலத்தில் T - series கேசட்ல பதிவு செய்த பாடல்களைத் திரும்ப திரும்ப கேட்கும் பழக்கம் உடையவள்.இவர்களைப் போல இளையராஜா இசையமைத்த படம் பாடல் என ஒன்று விடாமல் தெரிந்து வைத்திருக்கும் பிரகஸ்பதி அல்ல.என் அண்ணன் நல்ல இசைக்கு ரசிகர் . ராஜா ரகுமான் என்றெல்லாம் வித்த்தியாசம் பார்த்ததில்லை.ஹிந்திப் பாடல்களும் எனக்கு அவர் அறிமுகப்படுத்தியவைதான்
என் அண்ணன் வெளிநாடு சென்ற பிறகு வந்த எந்த ஹிந்திப் பாடலும் யாம் அறியேன் பராபரமே மீதி தமிழ்ப் பாடல்கள் தொலைக் காட்சி வழி மட்டுமே :)

  ரஹ்மான் மீது துளி கூட துவேஷமில்லை எனக்கு 

ஒரே ஒரு ட்வீட் மட்டும் ராஜா காப்பி என்று என் TL ல வந்த RTக்காக. 
அதுவும் ராஜா ரசிகர்கள் உசுப்பேற்றி விடுகிறார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
ரோஜாவும் எனிமா என்ற படத்தின் காப்பி இசைதான் என படித்ததைப் பகிர்ந்து இருக்கின்றேன்.அதுவும் அதை RT செய்த நபர் காரணமாக .அதற்கு முன்போ பின்போ எதுவும் ரஹ்மான் பற்றி எழுத தோன்றியதே இல்லை . 

என்னைத் தீவிர ராஜா ரசிகையாக்கியதில் ட்விட்டரில் ராஜா பாடல்களை  பிடிக்க தக்க காரணங்களோடு விளக்குபவர்களும் காரணமே இன்றி திட்டிக் கொண்டே இருப்பவர்களும் தான் :)

ரஹ்மானை  விட  ராஜாவை ஒரு படி மேலே ஏன் பிடிக்கும் என ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன் :)

ஏதேனும் மன வருத்தத்தில் இருக்கும் பொழுது எங்கிருந்தோ வரும் பாடல் வரிகள் அசரீரியாய் ஆறுதல் சொல்கின்றன.அவ்வமயம் காது யார் இசை என்றெல்லாம் உணர்வதில்லை
  
 இது  ரஹ்மான் பாடல் கேட்க கூடாது என்ற கட்டளை எல்லாம் என் காதுகள் கேட்பதே இல்லை.முத்து பட பாடலை ஒரே நாளில் ஒன்பது தடவை போட்டுக் கேட்டது நினைவிருக்கின்றது:) கொக்கு சைவ கொக்கு பாடல் ரொம்ப பிடிக்கும் எனத் தோழியிடம் சொல்லப் போக  ச்சே கேவலமான பாடல் வரிகள் என அவள் சொல்ல என்னவென்றே புரியாமல் ஓஹோ என நான் மையமாய்த் தலையாட்டியதும் :) (அவளும் யார் சொன்னதையோ அப்படியே கேட்டுவிட்டே என்னிடம் பிறழாமல் சொல்லி இருக்கக் கூடும் :)
ஆனால் அப்பவே தோன்றியது அரபிக் கடலோரம் ,முக்காபுலா எல்லாம் சீசனுக்கு மட்டுமே என்று..

 அல்லது மெல்லிசையில் நாட்டம் அதிகம் இருந்தது எனலாம் .இன்றும் ரஹ்மானின் மின்னலே நீ வந்ததேனடி ,கையில் விழுந்த கனவா நீ என்று அவரின் மெலடி யாவும் வெகுப் பிடித்தவை .

இந்த ராஜா -ரஹ்மான் கமல் ரஜினி சண்டை எல்லாம் எங்கள் வீட்டில்வந்ததே இல்லை .சரி சமமாக அனைத்தும் ரசித்தேப் பழக்கம் மேலும் பிடித்த நடிகர் படங்கள் வீட்டில் வைக்க அனுமதி எல்லாம் இல்லை .நல்லவேளை அது போன்ற தீவிரங்கள் இல்லாமல் வளர்க்கப்பட்டது :) எங்கள் வீட்டில் ராஜாவைத் திட்டுகின்ற ஒரே ஆள் என் தந்தை :) பல நல்ல பாடல்களை ராஜா பாடிக் கெடுத்து விட்டதாக புலம்புவார் ஒருவேளை என் இளையராஜா பதிவுகளைப் பார்த்திருந்தால்  புருவம் உயர்த்தி இருக்க கூடும் :)

நடிகர்களுக்காக சண்டை கேள்விப்பட்டிருக்கிறேன் இசையமைப்பார்களுக்காகவும்  சண்டை வருமென்பது ட்விட்டர் வந்த பின்பே அறிந்தது.முன்பு வலை பாயுதே டிவிட்ஸ்  எடுப்பவர் இளையராஜா ரசிகர் என யூகித்தும் RT காகவும் ராஜா புகழ் கீச்சிய கைகள் இன்று தனக்கென்று இடம் அமையவும் நக்கல்கள் அதே RT காக :) 

தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்காத சாமான்யர்கள் கூட மெய்நிகர் உலகத்தில் கொஞ்சம் பிரபலம் ஆகவும் போடுகின்ற ஆட்டங்களைப் பார்த்திருக்கின்றேன்.எனக்கு மிகப் பிடித்த  அதிகம் திறமை சாலி என்று நான் நம்பிய நபர் இங்கே புகழ் பெற செய்த யுக்திகளைக் கண்டு நேரடியாகவே சொல்லிவிட்டேன் ஆனால் அதற்கு அவர் உங்களைப் பாராட்டல என்ற கோபம் என திசை திருப்பி விட்டுட்டார் என் கோபமே பாராட்டிற்காக சுயம் இழக்காதே என்பதற்காகத் தான் என்று புரியாமல்
ஹ்ம்ம் ..சில பயங்கர வெறுப்பிற்கு பின்னால் அவர்கள் மீதான ஆழ்ந்த மரியாதையும் அவரின் பிம்பம் உடைந்த அதிர்ச்சியும் காரணமாயிருக்கலாம்

 சாமான்யர்களே இப்படி இருக்கும் பொழுது அப்போ பல லட்சம் ரசிகர்களின் நெஞ்சத்தில் குடியிருக்கும் ராஜா , அவர்களுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் அளித்த ராஜா ,திறமை மிக்க ராஜா கர்வத்துடனும் ஆணவத்துடன் இருந்தால் என்ன மோசம். (போலவே ரஹ்மான் இன்னும் பல மெய்யுலகப் பிரபலங்களுக்கும் இருந்தாலுமே கூட  )

 வெறும் குடங்களே அதிகம் சத்தம் எழுப்பும் பொழுது குறைகுடங்கள் கூத்தாடினாலும் நிறை குடங்கள் தளும்பினாலும் என்ன தவறு?



ராஜா கர்வி என்பவர்களுக்கான என் முதலும் முடிவுமான பதில் மேற்சொன்னவை 
ராஜா ஆணவமாய் இருந்தால் என்ன தப்புன்னு கேட்கறீங்க அதுவே நாங்க சொன்னா ஏன் கோபம் வருதுன்னு கேட்ட @Lathamagan க்கு நாங்க அவரை என்ன வேணா சொல்லுவோம் யாரும் கேட்கக் கூடாது அவரை யாரும் எதுவும் சொல்லக் கூடாது நாங்க கேட்போம் :)) 

நீண்ட நாட்களாய்ச் சொல்ல நினைத்தவை :) சொல்லியாச்சு என்ற திருப்தியுடன் 
 
இனி பாடலுக்குள் : இந்தப் பாடல் முழுக்க நீர்ச் சூழலுக்குள் அமைந்திருக்கும் (மோகத் தீ மூட்ட நீரும் காரணமாய் அமையும் எனச் சொல்லாமல் சொல்லவோ ) ஆரம்பமே நீரலைகளின் அசைவைப் பிரதிபலிக்கும் prelude மிக மெலிதான பி சுசீலா வாணி ஜெயராம் குரல் போல அல்லாமல் சற்றே கனமான குரல் போல சொர்ணலதா குரல்.பாடல் என்னவோ மெலடி ரகம் தான் ஆனால் இந்தக் குரலை அப்படியே பிரதி எடுப்பது வெகு சிரமம் என்பது மட்டும் தெளிவு.அதனால் நாம பாட ரிஸ்க் எடுக்காம இது நமக்கான பாடல் என கேட்டுக் கொள்வதே உத்தமம் :) பாடலை எப்பொழுது அர்த்தம் புரிந்து ரசிக்க ஆரம்பிக்கிறோமோ பதின்ம வயது ஆரம்பமாகிவிட்டது என அர்த்தம்.இந்தப் பாடலை சிறு வயதில் கூட நான் கேட்டிருக்கலாம்.படம் எப்போ வந்தது பாடல் எப்போ முதன் முதலில் கேட்டேன் என்பதெல்லாம் நினைவில் இல்லை .பாடல் முழுக்க மெல்லிய மலர்ப் பாதங்களைக் கொண்டு பெண் நடை போடுவது போன்ற இசை இறுதி வரை வரும்  . எந்தக் கருவி என்றெல்லாம் தெரியாது வயலினும் புல்லாங்குழலும் மட்டும் அடையாளம் கண்டு உணர முடிகின்றது :)

இது போன்ற தனிமையில் காலார நடப்பது என்று பேச்சுத் தமிழில் சொல்வார்கள் அது போன்ற நடை இந்தப் பாடலில் பார்க்கலாம் மெல்ல நடை பயில்கின்றது இசை அந்தப் பாவையோடு 
 
 சின்னதாய் ஒரு கல்லைப் போட்டதும் அதை மையமாய் வைத்து விரிவடைந்து செல்லுமே அலைகள் அதைப் போல இந்த மோகம் என்ற ஒன்று வரவும் அதைச் சார்ந்து உருவாகும் கிளர்ச்சிகளைச் சொல்வது போல அந்த prelude ஐப் பார்க்கின்றேன் .பெண்ணின் மன உணர்வுகளைப் பல காலம் அருகிருந்து கவனித்திருந்தால் ஒழிய இப்படி எல்லாம் வரிகள் வந்து விழாது.வாலிக்கு ஒரு பெரிய வந்தனம் _/\_ (தகவல் உதவி : கூகிளாண்டவர் ) மயங்கும் மாலைப் பொழுதும் மார்கழி வாடையும் மெதுவாய் வீசியே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது 

மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச 
தேகம் பூத்ததே ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓ ..ஓ மௌனம் வந்ததோ 

முதன் முதலில் திருமணமான தோழியை வம்பாய் கலாய்த்த பொழுது அவள் சொன்னது "ஆண்கள் எப்படி வேணும்னா இருக்கலாம் நமக்கு feelings வந்தா நாம காட்டிக்கவே கூடாது அமைதியா இருந்துடணும் " இது எந்த விதத்தில் சரியான வழிகாட்டுதல் என்றெல்லாம் தெரியல ஆனா என் குணத்திற்கு மிக பொருந்திப் போனதால் மிக ஆழமாகப் பதிந்து போனது.
 
பெண்களின் மௌனத்திற்கு பல அர்த்தங்கள் அதில் ஒரு காரணமாக இந்த மோகமும் நிச்சயம் இருக்கும் :)

வலிய சென்று ஒரு பெண் காதலுக்காக துரத்துவதாக காட்டுவது பெரிய ஹீரோக்களுக்கு ஒரு பெருமை.ஆனால் யதார்த்தம் வேறு.ஏதேனும் ஒரு தருணத்தில் நீ தானே வலிய வந்தாய் நானில்லையே என்று ஆண் சொல்லிவிடக் கூடும் என்ற பயம் காரணமாக இருக்கலாம் அல்லது பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப் பாடுகளுக்குப் புறம்பாய் நடக்கும் பொழுது அதை பிறர் எப்படி எடுத்துக் கொள்ளக் கூடுமோ என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம் நான் இங்கே சொல்வதெல்லாம் என்னையும் நான் அறிந்த பிற பெண்களைப் பற்றியும் அதனால் அப்படி எல்லாம் பெண்கள் இப்போ இல்லை என சண்டைக்கு ஓடி வந்து விடாதீர்கள் :)


வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற 

ஆசையை நாணம் கட்டுப்படுத்துவதை வெகு இயல்பாய்ச் சொன்ன வரிகள் இவை  மனதிற்குப் பிடித்த ஒருவனை கனவுகளோடு நினைத்து சுகிப்பது கற்பனைகளை வளர்ப்பது இப்படி அனைத்தும் பதின்ம வயதுகளில் மட்டுமே சாத்தியம் பின் விளைவுகளைப் பற்றி யார் கவலைப்படப் போறோம் அப்போ?:)

அது போன்ற கனவில் மிதக்கும் பெண்ணாக மோகத்தில் ஆடை நெகிழ்ந்தும் அதைச் சரி செய்ய விரும்பாமலும் அசாதாரண லுக்குடன் அந்நியமாக்காமல் நம் பெண்களைப் போன்ற இயல்பான மாநிறத்துடனும் களையான முகத்துடனும் பார்க்க சலிக்காத ,கண்களை அதிகம் உறுத்தாத கவர்ச்சியும் பானுவின் பெரிய பலங்கள் அதிரடியான ஊர்மிளாவின் ஹே ராமா யே க்யா ஹுவா வை விட பானுவின் இந்த மென்மையான தாக்குதல் அதிகம் 

நிச்சயம் பானுவைப் பார்த்த நொடி பைத்தியம் பிடித்துவிடும் நல்ல மனநிலையில் உள்ள எந்த ஆணுக்கும் :)அலைகள் வெல்லி ஆடை போல என உச்சரித்து இருப்பார் பானு அது மட்டுமே உறுத்தல் :)




நல்லவேளை மோகம் சேர்ந்த மோனத் தவத்தைக் கலைக்கவென்று கூட்ட நடனங்கள் அமைக்காமல் விட்டது.இது போன்ற நேரத்தில் தனிமை நல்லது :)

நெஞ்ஞ்சமே பா..ஆட்டெழுது அதில் நாயகன்ன்ன் பேஏஏர் எழுது...இன்னமும் சொர்ணலதா குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது 

சமீபத்தில் கடல் படத்தில் கேட்ட நெஞ்சுக்குள்ள பாடல் சொர்ணலதா பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. ஹ்ம்ம்...இன்மை உணர்கிறோம்

இந்தப் பாடலைத் தேடிப் போய் கேட்க தோன்றியதே இல்லை என சொல்லவும் எனக்கு ஆச்சர்யமாகவே பட்டது.

ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை .ட்விட்டரில் நண்பர்  ரசனைக்காரன் தனது நாகிர்தனா பாடல் விமர்சனத்திற்கு கருத்து கேட்டிருந்தார்.அவர் அவ்வளவு உருகி இருந்த அளவுக்கு என்னை அந்தப் பாடல் ஈர்க்கவே இல்லை என் செய்வேன் ?:)எனக்கு ஈர்க்கவில்லை என்பதற்காக நல்ல பாடல் இல்லை என்றாகி விடாதில்லையா?

போலவே சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்த வேளையில் குறுக்கே ஒரு குரல் பக்கத்தில் இருந்த பெண் "அக்கா என்னக்கா இந்தப் பாட்டு நல்லாவே இல்லை ;படமும் வெளங்காத படம் "எனத் தலைசொறிந்து கொண்டே சொன்னாள் .எதுவும் பேசத் தோன்றாமல் இமையை மட்டும் கொலைவெறியோடு உயர்த்தினேன் :) 

அந்தப் பாடலுக்குத் தனி பதிவே போடும் அளவுக்கு என்னுள் தாக்கம் உண்டு :)

தளபதி படத்தில் சில காட்சிகள் தவிர முழுதாய்ப் பார்த்ததில்லை என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினாள் (முழுசா பார்க்காமலே விமர்சனம்)  பதட்டமாய் பாடல் ,படம் எப்படிப்பட்டது என்று விளக்கம் கொடுக்கவெல்லாம் முற்படவே இல்லை.அவளேதான் தினம் அலுவலகம் வரவும் கிழக்காலே செவுத்துப் பக்கம் பாடலை தவறாமல் இரண்டு முறையேனும் கேட்பவள் என்றேனும் ஒருநாள் இந்த சுந்தரி கண்ணால் ஒரு சேதி பல சேதிகள் சொல்லக் கூடும் என விட்டுவிட்டேன் :)

 நான் ரசித்த சில ராஜா டிவிட்டுகள் இங்கே 
இருந்துட்டுப் போட்டுமே.. :) 
ஆனா என் ப்ளே 
என் ஃப்ரெண்டோட அப்பா  
அதுதான் 
பரபரப்பான நிகழ்காலத்தை  
ராஜவ ரொம்ப புகழுறதா
ராசா தன் இசைக்கு
பத்து அல்லக்கைகளை
ஆனபோதும் இங்கு
சுட்டுவிரல் நீ காட்டு
மெட்டாவது, வரியாவது
தொண்ணூறுகளுக்கு முந்திய
#வந்தனமு
எண்பதுகளின் நாயகிகள்
கண் பார்வையற்றவருக்குக் கூட
இசைஞானியும் நடிகர் திலகமும்
ரஹ்மானின் ஆரம்பகாலப் பாடல்களை
ஒவ்வொரு உணர்வுகளுக்கும்
என் மனதில் பூட்டிவைத்திருக்கும்
ஜெனிபர் டீச்சர் 

13 comments:

Unknown said...

Naan kadantha vaaram Company trainingirkaga mumbai sendruerunthan ennodun tamilnaatai serntha erundu nanbargalum(Madurai) vandhu erundhargal naan rajavin esai pidikum endru sonnaen eruvarum ennai parthu sirithargal avarai ennum update agathavar endru solli sirithargal enaku avargalin Ariyamai kandu paridhabamai erunthahu endru ungalin padhivai padithan andha nigazhvu nyabagam vandhathu pagirnthu kondan...........

maithriim said...

நிதானமாகப் படித்தேன். இந்தப் பதிவை @kryes சொல்வது போல காபி உறிஞ்சி சுவைப்பது போல படித்தால் பதிவின் சுவை கூடுகிறது :-)

இசையை அனுபவிப்பதற்கு இசை ஞானம் வேண்டும். மனதை இலகுவாக்கும் சக்தியோ அல்லது உருக வைக்கும் சக்தியோ இருந்தால் அது எவருடைய இசையாக இருந்தாலும் அந்த இசையும் அருமை! அதை இரசிக்கும் மனமும் மென்மை! :-)

amas32

உமா கிருஷ்ணமூர்த்தி said...

அம்மா :))) லவ் யூ எப்பவும் ஏனோ தானோ என இல்லாமல் ரசித்து கமெண்ட் கொடுப்பதற்கு :))
thanks manoj:)

Nat Sriram said...

//இசையை அனுபவிப்பதற்கு இசை ஞானம் வேண்டும். மனதை இலகுவாக்கும் சக்தியோ அல்லது உருக வைக்கும் சக்தியோ இருந்தால் அது எவருடைய இசையாக இருந்தாலும் அந்த இசையும் அருமை! அதை இரசிக்கும் மனமும் மென்மை! :-)
//
அதே அதே..இதற்கான ஓரளவுக்கு பெரிய அட்வகேட் நான் ட்விட்டரில். இங்கு பிராண்டுக்கு தான் மதிப்பு..ஹாரிசா திட்டு..விஜய் ஆண்ட்னியா திட்டு..

Mokkarasu said...

//இவர் மட்டும் ராஜாவை விட ரஹ்மான் தான் சொர்ணலதா குரலை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்//

மன்னிக்கவும். நான் ராஜாவை ரஹ்மானோட ஒப்பீடு செய்யவில்லை. நான் சொன்னது, ரஹ்மான் மற்ற பாடகர்/பாடகியை விட சொர்ணலதா குரலை அதிகம் பயன்படுத்தியுள்ளார். ராஜா எப்படி SPB-ஜானகியை அதிகம் பயன்படுத்தினாரோ, அதைப்போல என்று சொல்லவந்தேன் ;-)

//முடிந்தால் ரங்கீலா படத்தில் ஹேய் ராமா யே க்யா ஹுவா பாடலைக் கேளுங்கள் என்று பரிந்துரைத்தார்//

நான் ரங்கீலால எந்த பாட்டுன்னு சொல்லவே இல்லை ;-) இங்குதான் ஒரு கம்யூட்டர் மிஸ்டேக் ஆகிவிட்டது :-) நான் சொல்ல வந்த பாட்டு ”பியாரு ஹே” http://www.youtube.com/watch?v=IVKqkqKLBJQ
இந்த பாடலை சொர்ணலதா பாடியதாக ரொம்ப நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன். இந்த ஒப்பீட்டு பிழைதான் உங்களை இந்த பதிவு எழுத தூண்டியிருக்கும் என நினைக்கிறேன் :-)
இந்த பாட்டை சொர்ணலதா பாடியிருந்தால் முதலிடம் இந்த பாட்டிற்கே என இப்பவும் சொல்லுவேன் :-)

ஒரு தகவலுக்கு “ஹேய் ராமா யே க்யா ஹுவா” அவ்வளவு மோசமான பாட்டு கிடையாது. வீடியோ பாக்காமல் பாடல் மட்டும் கேட்டால் உங்களுக்கு பிடிக்கும். இந்த தவறான ஒப்பீட்டீலும் நீங்க சொல்லும் அளவுக்கு அயர்ச்சி கிடையாது :-)

//இது ராஜா ரஹ்மான் வாதமே அல்ல சொர்ணலதா பாடியதில் எது சிறந்தது என்று வாதிட ஆரம்பித்துவிட்டார் .நான் எனக்குப் பிடித்தது என்றுதான் யதார்த்தமாய்ச் சொன்னேனே அன்றி எது சிறந்தது என்ற கேள்வியை முன்வைக்கவே இல்லை//

எல்லோரும் ”பிடித்த” என்ற வார்த்தையை கவனிக்காமல், அவர்களுக்கு எது பிடித்ததோ( சிறந்ததாக நினைத்து) அதைத்தான் சொன்னார்கள். நானும் அதைத்தான் சொன்னேன். என்னை மட்டும் ஏன் குறி வைத்து தாக்குறீர்கள்? :-)

//ரஹ்மான் மீது துளி கூட துவேஷமில்லை எனக்கு//

எனக்கும் தெரியும். என்னோட வெ.ம லிஸ்ட்ல உங்களை ஒரு போதும் சேர்த்தது கிடையாது :-)

//என்னைத் தீவிர ராஜா ரசிகையாக்கியதில் ட்விட்டரில் ராஜா பாடல்களை பிடிக்க தக்க காரணங்களோடு விளக்குபவர்களும் காரணமே இன்றி திட்டிக் கொண்டே இருப்பவர்களும் தான் :)//

அவ்வ்.. நான் ராசாவ திட்ட ஆரம்பிச்சதே NEPV பாடல்களிருந்து தான். நானும் அந்த லிஸ்ட்ல இருக்கேனா? :-)

//திறமை மிக்க ராஜா கர்வத்துடனும் ஆணவத்துடன் இருந்தால் என்ன மோசம்//

கர்வம் இருக்க வேண்டும். தப்பில்லை. நான் மட்டுமே கம்போஸர், மற்ற யாரும் கிடையாது என மார் தட்டுவதுதான் சகிக்கல :-)

இனி பாடலுக்குள்: :-)
என்னை ஏன் இந்த பாடல் கவரவில்லை?? :-)
• நான் இசையை மட்டுமே ரசிப்பவன். வரிகளுக்கு ஒரு போதும் முக்கியத்துவம் குடுத்தது கிடையாது. முதல் இரண்டு வரிகளைத்தவிர, லாலா போட்டுத்தான் எல்லா படல்களையும் பாடுவேன் :-)
• பானுப்பிரியாவையும் ஒரு போதும் ரசிச்சது கிடையாது ( அடிக்க வராதிங்க :) )
• This song is too slow for my liking :-)
இப்பொழுது புரிகிறதா இந்த பாடல் எனக்கு ஏன் உங்களவுக்கு பிடிக்கவில்லை என்று :) என்னளவில், இந்த பாடல் சொர்ணலதாவுக்கு ஒரு சிறந்த அறிமுகம் தந்ததே தவிர, சிறந்த பாடல்(பிடித்த :)) கிடையாது

என்னைத் தொட்டு(அந்த ஆலாப்காகவே பல முறை கேட்டுருக்கிறேன்),எவனோ ஒருவன் வாசிக்கிறான், போறாளே, என்னுள்ளே, இன்னும் பல.

மலையில் யாரோ - என்னோட சொர்ணலதாவின் டாப் டென்னுக்குள்ள கூட வராது. மன்னிக்கவும் :)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

. என்னை மட்டும் ஏன் குறி வைத்து தாக்குறீர்கள்? :-)//

ஹ்ம்ம்...முதலில் ரசனைகள் வேறுபடும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அதனால் தான் இறுதியில் ரசனைகாரன் கருத்து கேட்டது பற்றியும் இன்னொரு பெண் பற்றியும் சொல்லியது :) உங்களை ஈர்க்கவில்லை என்பதற்காக உங்களை குற்றம் சொல்லவே இல்லை :) அதனால் உங்களைத் தாக்குவதாக எடுத்தால் எப்படி?முதலில் எனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் நான் பேசுவதை அறவே தவிர்த்து விடுவேன் என்னுடைய அந்த பிடிக்காதவர்கள் லிஸ்ட் ல நீங்க இல்ல அதனால் பயம் வேணாம் :)

இந்தப் பாடலைப் பிடிக்க காரணம் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது அதற்கு நீங்கள் வைத்தது ஆரம்பப் புள்ளி அவ்வளவே :) நான் ரசித்த பாடல்களைப் பற்றி நான் இதற்கு முன்பும் எழுதியே இருக்கேன் :)எவரும் உங்களைப் போல வாதிடவில்லை அவங்க அவங்களுக்கு பிடிச்சதை சொன்னாங்க யாரும் சிறந்தது என்று உங்களைப் போல ஒரு வார்த்தையை இட்டுச் சொல்லவில்லை டிவிட்ஸ் லிங்க் கீழே படிச்சீங்க ன்னா தெரியும் பாஸ் :)

நான் மட்டுமே கம்போசர் // சொல்லிட்டுப் போகட்டுமே ஒரு இசையை வரிகள் கூட கவனிக்காம சும்மா ரசிக்கிறீங்க அது எப்படி எடுக்கப் பட்டது அது என்ன சொல்ல வருகிறது என ஆழத் தெரிந்து விட்டு பேசணும் அரைகுறையா கேட்டுவிட்டு நீங்களே இவ்ளோ நீட்டி முழக்கி பேசும் பொழுது.....சார் ராஜா..சார்...திரும்ப நான் சொன்னதைப் படிங்க புரியும் :))உங்கள் ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக எதுவும் சிறந்தது இல்லை என்றாகி விடாது என்பதையும் ஒத்துக் கொள்ளுங்கள் :)
ஹே ராமா ஏ க்யா ஹுவா மோசம் பிடிக்கலன்னு என்று எங்கேனும் சொன்னேனா ?:)அதை விட இது பெட்டர் என்று மட்டுமே சொன்னேன்
எனக்கு அந்தப் பாடலும் fav லிஸ்ட் ல ஒண்ணுதான் அந்தப் படம் எனச் சொல்லவும் எனக்கு சட்டென அந்தப் பாடல் மட்டுமே நினைவுக்கு வந்தது மேலும் நான் அதைப் பத்தி சொல்லவும் நீங்க அந்த நேரம் அதை மறுக்கவும் இல்லை .
மாலையில் யாரோ உங்க டாப் டென் குள்ள வராட்டி அந்தப் பாடலின் தரம் குறைந்துவிடப் போவதில்லை உங்களுக்குப் புரிந்தது அவ்வளவே என நகர்ந்து விடுவேன் :)


நான் உங்களைப் பின்தொடரவில்லை ஆனால் உங்க ட்வீட்ஸ் முன்னாடி சில பேரால் RT ஆகி வந்தது.பல பேரு ராஜா பத்தி நக்கல்கள் அடிச்சுட்டு தான் இருக்காங்க ராஜாவின் தீவிர ரசிகர்களால் நான் வெறுத்து விட்டேன் எனச் சொன்னீங்களே அது போல நீங்க &மற்றும் பலர் அவரைப் பற்றி விமர்சனம் வைக்கின்ற விதத்தில் எனக்கு இன்னமும் ராஜாவைப் பிடிக்கவே செய்கின்றது :)

பொதுவாகவே இங்கே ராஜா ரசிகர்களை வம்பிழுப்பதைப் பார்த்திருக்கிறேன் :) பண்டிட் பாலேஷ் ,சுகா எழுதிய ஜாஸ் வால்ட்ஸ் கட்டுரை ,இயக்குனர் மகேந்திரன்,பாலு மகேந்திரா என ராஜாவை உணர்ந்தவர்கள் சொன்னதைப் பற்றி படித்து விட்டு அப்புறமா பேசுங்க ராஜா மார் தட்டுவதில் உங்களுக்கு அப்புறம் பிரச்சனை இருக்காது :)ஆனா ஒருத்தரைத் திட்ட வேண்டும் என முடிவெடுத்து விட்டால் பிறவற்றைப் பார்க்காமலே பேசுபவர்கள் லிஸ்ட் ல நீங்களும் ஒருத்தர் என்றால் இதற்கு மேல் உங்களுக்கு நான் உதவ முடியாது :)ஏன் என்றால் பாடலை ஆழ்ந்து கேட்காமல் இசையை மட்டும் ரசிக்கிறேன் எனச் சொல்வதே வினோதமா இருக்கு :))))நீங்க மொழி அறியாத பாடல்களை அப்படிச் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம் :)நானும் ஹிந்திப் பாடல்கள் கேட்பேன் அதிலும் ரசித்துச் சொல்ல விஷயம் உண்டு எனக்கு :)

மொக்கராசு said...

//“என்னை மட்டும் ஏன் குறி வைத்து தாக்குறீர்கள்? ://

நான் நக்கலுக்காக சொன்னதிற்க்கு இவ்வளவு விளக்கமா??.. ரொம்ப நன்றி :-)

//ஒரு இசையை வரிகள் கூட கவனிக்காம சும்மா ரசிக்கிறீங்க அது எப்படி எடுக்கப் பட்டது அது என்ன சொல்ல வருகிறது என ஆழத் தெரிந்து விட்டு பேசணும் அரைகுறையா கேட்டுவிட்டு//

பாடல்களுக்கு வரிகள் முக்கியமில்லைனு நம்ம ராசா சாரே சொல்லியிருக்காரு. எந்த வார்த்தை போட்டு பாடினாலும் இசை இசை தான். நானும் அதை வழிமொழிகிறேன் : -)

உங்களைப்போல பாடல் வரிகளை கவனிக்க முயல்வேன். இசை ஒரு போதும் என்னை கவனிக்கவிட்டதில்லை : -) சோகப்பாடல்கள் இதற்க்கு விதிவிலக்கு : -)

//ஹே ராமா ஏ க்யா ஹுவா மோசம் பிடிக்கலன்னு என்று எங்கேனும் சொன்னேனா ?:)அதை விட இது பெட்டர் என்று மட்டுமே சொன்னேன்//

”ஹேய் ராமா யே க்யா ஹுவா கேட்டிருக்கேன் எல்லாத்துக்கும் ஒப்பீடு அயர்ச்சி :) “ – அயர்ச்சிக்கு என்ன அர்த்தம்?

//மாலையில் யாரோ உங்க டாப் டென் குள்ள வராட்டி அந்தப் பாடலின் தரம் குறைந்துவிடப் போவதில்லை உங்களுக்குப் புரிந்தது அவ்வளவே என நகர்ந்து விடுவேன் :) //

ஹ்ம்ம் : -( வாழ்க்கையில் நான் ஏதோ மிஸ் செய்கிறேன் போல : -)

//நான் வெறுத்து விட்டேன் எனச் சொன்னீங்களே//

நீங்க ராசா ரசிகர்களோட டிவிட்டப் அட்டண்ட் பண்ணியிருக்கீங்களா?..ஒரு தடவ அட்டண்ட் பண்ணுங்க. அப்புறம் தெரியும். ராசாவ தவிற 90% ரகுமான் பற்றியே பேசுகிறார்கள் : -)


இங்கு ராசா ரசிகர்கள்னு சொல்லிக்கொண்டு சில வெ.ம ரகுமானை இகழ்வாதே பொழப்பாக கொண்டுள்ளார்கள். நான் அவர்களை வெறுப்பேத்துவதற்க்காகவே போட்ட டிவிட்டுகள். உங்களைப் போன்றோரை காயப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லை :-)

//இங்கே ராஜா ரசிகர்களை வம்பிழுப்பதைப் பார்த்திருக்கிறேன் //

இங்கு ராஜா ரசிகர்களை யாரும் வம்பிழுப்பதில்லை. இவிய்ங்களா வாய கொடுத்து மாட்டிக்கிறாய்ங்க :-)

//பண்டிட் பாலேஷ் ,சுகா எழுதிய ஜாஸ் வால்ட்ஸ் கட்டுரை ,இயக்குனர் மகேந்திரன்,பாலு மகேந்திரா என ராஜாவை உணர்ந்தவர்கள் சொன்னதைப் பற்றி படித்து விட்டு//

ராஜாவின் இசைய உணர இவர்கள் சொல்லுவதை கேட்கவேண்டிய அவசியமில்லை. என் காதுகள் போதும். அதற்க்கு தெரியும் எது இனிமை என்று ; -)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

அயர்ச்சிக்கு அர்த்தம் பாடல் பிடிக்கல என்பதல்ல நீங்க பொதுவாகவே வம்பு இழுப்பவர் என்ற பிம்பம் எனக்கு :)(இல்லை என்றால் மகிழ்ச்சி ) சாதரணமா ஒரு பாடல் பிடிச்சது எனச் சொன்னது ஒரு குத்தமா அதிலும் இது அதை விட பெட்டர் என்ற வாதம் நீங்க வச்சது தான் எல்லாம் பிடிச்சதை சொன்னாங்க நீங்க மட்டும் தான் சற்று வித்தியாசமாக பேசியது .பொதுவாக எந்த ஒரு நபரையும் பிடிக்குது பிடிக்கல என சொல்கின்ற விதத்தில் தான் பார்ப்பவர்கள் அதை முடிவு செய்வது உங்களுக்கு ஒரு அனுபவம் அப்படி போல ஆனால் நீங்க அதனால் மட்டுமே வெறுத்தேன் எனச் சொல்வது நம்பமுடியல நீங்க ரஹ்மான் ரசிகர் என உங்கள் பக்கம் பறை சாற்றுகின்றது அதை தைரியமாகவே பெருமையோடு சொல்லுங்க இதனால் தான் ராஜாவை வெறுத்து ரஹ்மான் பக்கம் போனேன்னு சொல்லாதீங்க :)
சொல்ல வேணாம் நினைச்சேன் இருந்தாலும் சொல்ல வைக்கிறீங்க கானா பிரபாவைக் கூட ராஜா ரசிகர்களுக்கு மட்டுமே பாடல் போடுவதாக குற்றம் சொல்லி இருந்ததை பார்த்தேன் யார் எப்படி என்று தராதரம் புரியாமல் விளையாட்டுக்கு கூட பேசுவது தவறு

சேட்டை,தோட்டா ,என் தோழி குருவு ,ஓல்ட் மாங் என அத்தனை பேரிடமும் சொந்தப் பெயர் கேட்டே அவர் பாடல் போட்டு பார்த்திருக்கிறேன்.இப்படி நீங்க எல்லாரையும் வம்பு செய்தால் உங்களைப் பற்றி அபிப்பிராயம் அப்படிதானே விழும் .அப்புறம் நல்ல இசைக்கு காது மட்டுமே போதும் .ஆனால் ஒருவரைப் பற்றி குறை சொல்வதற்கு அந்த நபரைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் நல்ல இசை என்பது நீங்கள் ஒத்துக் கொண்டால் மட்டுமே என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள் .உலக இசை பற்றி எல்லாம் பேசுவதற்கு முன் அதை பற்றி யாராச்சும் கேட்டா பதில் சொல்லவேணும் தெரியனும் :)நிச்சயம் நீங்க இன்னமும் நிறைய தெரிஞ்சுக்கணும் நிஜமாகவே மிஸ் பண்றீங்க இத்தோட டாட் வைக்கிறேன் பதிவை விட கமெண்ட் நீளமாகிட்டே போவதால் :)

ஏதேனும் பேச வேண்டும் விவாதத்தில் விட்டுக் கொடுக்கவே கூடாது என்று பேசுவது உங்களுக்கு பழக்கமாக இருந்தா தொடருங்க ஆனால் வீண் எனத் தெரிந்தால் நான் நிறுத்திடுவேன் உங்களுக்கு பயந்துட்டு நிறுத்திட்டதா நினைச்சுக்காதீங்க :)

மொக்கராசு said...

//பொதுவாகவே வம்பு இழுப்பவர் என்ற பிம்பம் எனக்கு//
ஹாஹா. நான் கேலி செய்வதை வம்பு இழுப்பதாக புரிந்து கொண்டீர்கள் போங்கள் : -)

//ரஹ்மான் ரசிகர் என உங்கள் பக்கம் பறை சாற்றுகின்றது அதை தைரியமாகவே பெருமையோடு சொல்லுங்க //

எல்லோருக்கும் தெரியும் நான் ரகுமான் ரசிகர் என்று. நீங்கள் ஃபாலோ செய்யவில்லை, அதனால் உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ரகுமான் ரசிகரென்றால் ராஜாவை பிடிக்காது என்ற அர்த்தமில்லை. ராஜா பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

//சொல்ல வேணாம் நினைச்சேன் இருந்தாலும் சொல்ல வைக்கிறீங்க கானா பிரபாவைக் கூட ராஜா ரசிகர்களுக்கு மட்டுமே பாடல் போடுவதாக குற்றம் சொல்லி இருந்ததை பார்த்தேன் யார் எப்படி என்று தராதரம் புரியாமல் விளையாட்டுக்கு கூட பேசுவது தவறு//

நான் பெரிதும் வியந்து மதிக்கும் இசை ரசிகன் கானா பிரபா. இதுவரை இப்படி ஒரு ரசிகனை பார்த்தது இல்லை. உங்களைப்போல நானும் கானா பிரபாவை ஒரு முழு நேர ரேடியோ ஜாக்கி என நினைத்துக்கொண்டிருந்தேன். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அதனாலே அவரை நக்கலுக்கு வம்பிழுத்தேன். ஏனென்றால் 1. என்னை அன்ஃபாலோ செய்துவிட்டார் ராஜாவை பற்றி டிவிட்டியதால் : -) 2. தன்னை நடுநிலை ரசிகனகனாக காட்டிக்கொண்டு ரகுமனை பற்றி டிவிட்டுகளுக்கு அமைதி காத்தும், ராஜாவை பற்றிய டிவிட்டுக்கு பொங்கினார். அதனாலே வம்பிழுப்பு :-)

மொக்கராசு என்ற பேரில் பல முறை எனக்கு பாடல்கள் போட்டு இருக்கிறார். இம்முறை என் மேல் உள்ள கோபத்தின் கரணமாக நான் கேட்ட ரகுமான் பாட்டு போடவில்லை. அதற்க்காகத்தான் நான் அப்படி சொல்லி அவரை வம்பிழுத்தேன் :-)

//ஒருவரைப் பற்றி குறை சொல்வதற்கு அந்த நபரைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் //

எனக்கு ராஜாவை ரொம்ப பிடிக்கும். அதனாலே அவரைப்பற்றி ஓரளவுக்கு தெரியும்....ராஜா ரசிகர்களை கலாய்க்குமளவுக்கு :-)

//ஏதேனும் பேச வேண்டும் விவாதத்தில் விட்டுக் கொடுக்கவே கூடாது என்று பேசுவது உங்களுக்கு பழக்கமாக இருந்தா தொடருங்க//

நான் பெண்களிடம் ஈகோ பார்ப்பதில்லை ;-) எனக்கு உங்களையும் பிடிக்கும் ஒரு இசை ரசிகராக :-)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

http://www.twitlonger.com/show/kkqrhq
என்னைப் பிடிக்கும் எனச் சொன்னது மிக்க மகிழ்ச்சி :)
இது உங்க ட்விட் லாங்கர் தானே ?:) நான் ஒரு தீவிர ராஜா ரசிகன் என எழுதி இருக்கீங்களே அது நீங்க தானே ?ஆனால் ட்விட் அப் பிறகே பிடிக்கல எனச் சொன்னதும் நீங்க தானே ?:)

எனக்கும் அவரை தெரியும் நீங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை பாடல் கேட்பவர்களின் வரிசைக் கிராமமாகவே போடுவார் முடிந்தவரை பெயரை சொல்லச் சொல்லி வற்புறுத்துவார் அதே போல அவர் ரஹ்மானை விட ராஜா அதிகம் பிடித்த நபர்.
அவங்க ரஹ்மானைத் திட்டுவது எவ்வளவு வெறுப்பை ஏற்படுத்துமோ அது போலத் தானே நீங்க செய்வதும்
ஆக உங்களுக்கு ராஜாவை விட (உங்களுக்குப் பிடிக்காத )ராஜா ரசிகர்களை தாக்க ராஜாவை விமர்சிக்கின்றீர்கள் என்பது தெளிவு :)இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல :)

மொக்கராசு said...

//நான் ஒரு தீவிர ராஜா ரசிகன் என எழுதி இருக்கீங்களே அது நீங்க தானே ?ஆனால் ட்விட் அப் பிறகே பிடிக்கல எனச் சொன்னதும் நீங்க தானே ?:) //

ஆம். இப்போதும் கூட. ஆனால் அவர் பேசுவது எல்லாம் சரியென்று நினைக்குமளவுக்கு ஜல்லி கிடையாது :-)

//ஆக உங்களுக்கு ராஜாவை விட (உங்களுக்குப் பிடிக்காத )ராஜா ரசிகர்களை தாக்க ராஜாவை விமர்சிக்கின்றீர்கள் என்பது தெளிவு :) //

தங்களின் புரிதலுக்கு நன்றி :-)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

ராஜா ரசிகர்ன்னு சொல்றீங்க இல்ல ரஹ்மான் ரசிகர்தான் சொல்றீங்க அப்புறம் நல்ல இசைக்கு ரசிகர்ன்னு சொல்றீங்க அப்புறம் உங்களுக்கு நல்ல இசை என்பதற்கு ஒரு இலக்கணம் வேற சொல்றீங்க :)
ராஜா ரசிகர்களைத் தாக்கவென்று நீங்கள் பேசுவதற்கும் அவங்க ரஹ்மானைப் பேசுவதற்கும் வித்தியாசமே இல்லை
உங்க இரு தரப்பிற்கும் இது தான் முடிவான என் கருத்து
"பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பிடிக்காதவர்களின் ரசனையை நக்கலடித்துக் கொண்டே இருப்பது ஒருவித மனநோய்"

மொக்கராசு said...

//ராஜா ரசிகர்ன்னு சொல்றீங்க இல்ல ரஹ்மான் ரசிகர்தான் சொல்றீங்க அப்புறம் நல்ல இசைக்கு ரசிகர்ன்னு சொல்றீங்க அப்புறம் உங்களுக்கு நல்ல இசை என்பதற்கு ஒரு இலக்கணம் வேற சொல்றீங்க :)//

ஹாஹா. கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கீங்க. நான் ஒரு கமல் மாதிரி: -)

//ராஜா ரசிகர்களைத் தாக்கவென்று நீங்கள் பேசுவதற்கும் அவங்க ரஹ்மானைப் பேசுவதற்கும் வித்தியாசமே இல்லை//

சிலி விஷயங்களை பப்ளிக் ஃபாரத்தில பேச முடியாது :-) தங்களுக்கு ஆச்சேபனை இல்லையென்றால் உங்க பிளாக் மேயில் ஐடி இருந்தால் கொடுக்கவும் :-)