ஏதாச்சும் ஒரு படம் பார்த்துட்டு அதற்கு விமர்சனம் என்கிற பெயரில் தாளிப்பதை விடுத்து மனசுக்கு பிடிச்ச படங்களைப் பத்திப் பகிர்வது இன்னமும் மகிழ்வான ஒன்று.இனி அது போல ஒவ்வொரு பிடித்த படம் பற்றி எழுத முடிவு.சமீபத்தில் சுற்றுலா சென்ற பொழுது அக்னி நட்சத்திரம் போட்டார்கள் பேருந்தில்.எத்தனை முறை பார்த்திருந்தும் ஒரு காட்சி கூட போரடிக்காம ஏதோ இப்பொழுதுதான் புதிதாய்ப் பார்ப்பது போன்ற உணர்வு.கார்த்திக்கும் சரி பிரபுவும் சரி ஒருவருக்கொருவர் சளைக்காமல் வாழ்ந்திருக்கின்றார்கள் அந்த கதாபாத்திரங்களாகவே.இரண்டாவது துணைவியின்(courtesy :கலைஞர்) மகனாக அவமானமும் கோபமும் கலந்த உணர்வுகளை கார்த்திக் காட்டினால் அம்மாவுக்கு அப்பா செய்த துரோகம் தாளாத மகனாக பிரபு பட்டாசாய் வெளுத்து வாங்கி இருக்கிறார்.எண்பதுகளில் கார்த்திக்
அதிக அழகே எனினும் பிற பிடங்களில் இல்லாத அளவு இந்தப் படத்தில் படு ஸ்மார்ட் பிரபு.
"நீங்க உதாரணம் காட்ட என் குடும்பத்தை இழுக்காதீங்க"ன்னு கதவை அறைஞ்சு சாத்துவாரே பிரபு அடடா கோபத்தையும் ரசிக்க வைத்திருக்கின்றார்.
ஏதோ ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிராங்கன்னு இல்லாம அதிக வார்த்தைகளில் விவரிக்காம இருவருக்குமுண்டான பகையை நம்மை உணர வைத்த விதத்தில் மணி ரத்னம் மிளிர்கின்றார்.
படத்தில் காதலிப்பது தவிர வேறு வேலை கொடுக்கப்படாவிட்டாலும் நிரோஷாவும் அமலாவும் நிறைவாய்ச் செய்திருக்கின்றார்கள் ரசிக்கும்படியாகவே.
அமிதாப் இந்தப் படம் பார்த்து நிரோஷா வெகு அழகு என நம்பி நேரில் பார்த்து வெறுத்துப் போனதாக என் அண்ணன் சொன்னதுண்டு:)
ஜெயச்சித்ராவிடம் "அவர் பேர் கெட வேணாம்ன்னு தான் வந்தேன் புள்ளைய ஒழுங்கா வளர்க்கப் பாருங்கன்னு"சுமித்ரா நறுக்கென கொட்டு வைக்கிறார்.அளவான நடிப்பு இருவருமே
இளையாள் மகளே எனினும் எவரோ இரயிலில் வம்பிழுத்ததும் அண்ணனாக பிரபு படும் கோபம் செம்ம:)
தனி ட்ராக்காக ஓடும் ஜனகராஜ் -VKR காமெடி பெரிதாக ஈர்க்கவில்லை எனினும் நோ தங்கமணி என்ஜாய் தமிழ்நாட்டில் எவரும் மறக்கமாட்டார்கள்
குற்ற உணர்ச்சியில் அமைதியாகவே இருந்துவிட்டு இறுதியில் பொங்கும் விஜயகுமார் பாசமான அப்பா
இளையராஜா -எங்க சுத்தினாலும் நிச்சயம் இவர்கிட்ட வந்துதான் ஆகணும் படத்தை இன்னமும் சுவராசியமான ஒன்றாக வைத்திருப்பதில் இவர் பின்னணி இசையின் பங்கும் அதிகம்.தங்கையைப் பெண் பார்க்க வந்தவர்கள் திரும்பிச் சென்ற கோபத்தில் கார்த்திக் விஜயகுமார் வீட்டுக்குச் சென்று கத்தும் பொழுது சூழ்ந்துள்ள அமைதி சொல்கின்றது ஏதோ நடந்திருக்கிறது என்பதை. காமிராவும் இசையும் மெதுவாக எட்டிப் பார்க்கின்றன பாட்டியின் சடலத்தை அதிர்ந்தே போகிறோம் நாமும் கார்த்திக் போலவே.
இருவரும் ஒன்றாய்த் தந்தையைக் காக்க முற்படும் நேரத்தில் இப்பவாச்சும் சேர்ந்தாங்களேன்னு ஆசுவாசம் வருது.இறுதிக் காட்சிகளின் முடிவு தெரிந்தே இருந்தாலும் புதிதாய்ப் பார்ப்பது போல படபடப்பு பற்றிக்கொள்கின்றது.
ஒரு படத்தின் வெற்றி என்பது தனிப்பட்ட ஒருவரினால் மட்டும் அல்ல
ஒட்டுமொத்த குழுவின் கடின உழைப்பு என்பதை நிரூபித்த படங்களில் ஒன்று அக்னி நட்சத்திரம்

அதிலும் இந்தப் பாடலில் 0 .25 ல பிரபு நிற்கும் அழகே தனி ஸ்டைல்.

பாடல்களுக்குப் பெரிதாய் விளம்பரம் தேவையில்லை ஒவ்வொன்றும் நல்முத்து.ராஜாதி ராஜா பாடலில் கார்த்திக்கின் பின்புறம் பிரபுதேவாவும் க்ரூப் டான்சர்களில் ஒருவராக நடனமாடுகிறார்.நிச்சயம் வில்லன் பாத்திரமும் படு நேர்த்தி.(பெயர் தெரியல)