Tuesday, November 29, 2011

பெருமூச்சு ...6!

ஆகச் சிறந்த மெத்தை
உன் மார்பு..
************
உன் நினைவுகள்
சம்மணமிட்டு அமர்ந்துகொள்கின்றன
என் இதழ்களில் ...
****************
நீ புத்தகம் படிக்கின்ற பொழுதெல்லாம்
உன்னிரு கைகளுக்குள் புகுந்து
உன் உறுதியையும் 
படித்துவிட ஆசை எனக்கு
ம்ம்ம்ம் ..படி..dடா.. பார்க்கலாம் ;)
*************************************  
அகராதி "பிடித்தவன் நீ 
என் நினைவலைகளில்
என்றுமே நீங்கா இ (அ)டம் 
பிடித்தலைகிறாய்
******************************
எனை அணைக்கும் பொழுதெல்லாம்
என் வெட்கத்தையும் சேர்த்தே
அணைத்து விடுகின்றாய் ;)
***************************
வேண்டாம் தள்ளிப் போ

என்ற முணுமுணுப்புகள் எல்லாம்
காற்றில் எங்கோ தூர
ஒலித்துக் கரைகின்றன
உன் வெற்றிச் சிரிப்பு நெருங்கி வந்தபின்..
*******************************************
என் மறுப்புகள் யாவற்றையும்
அழைப்புகளாய் மாற்றும் 
வித்தை கற்றவன் நீ ..! 
*******************************
என் நாணம் தலை கவிழ்ந்தபின் 
நிமிர்ந்தெழுகின்றதென் மோகம் 
********************************************
காது மடல் கவ்வி 
நீ சொல்லும் மௌனங்களை 
சத்தமாய் வா(இம்)சித்துக் 
கொண்டிருக்கின்றன அங்கங்கள் யாவும்
நி..று..த்..து..
****************
உன்னுடனான ஊடல்
பொழுதுகளின் தவிப்புகளையும்
உன் தோள்களையேத்
தாங்க இறைஞ்சும் 
வெட்கம் கெட்ட மனம்
*******************************

  



4 comments:

hey itz me kuruvu said...

உன்னிரு கைகளுக்குள் புகுந்துஉன் உறுதியையும் படித்துவிட ஆசை எனக்கும்ம்ம்ம் ////இது வில்லித்தனம் ..படிக்கறப்போ டிஸ்டர்ப் லாம் பண்ணகூடாது ..

....................................
புனைவுகள் நனவாக வாழ்த்துக்கள் தோழி

உமா கிருஷ்ணமூர்த்தி said...

ஹா ஹா ஹா மிக்க நன்றி :)

jroldmonk said...

இதை எல்லாம் டிவிட்டா போட மாட்டீங்களா? பார்த்த ஞாபகம் இல்லை.

உமா கிருஷ்ணமூர்த்தி said...

யாராச்சும் இருக்கும் போது சங்கடம் மென்ஷன் ல வந்து எதையாச்சும் உளர்றாங்க ஒருத்தரை விட்டுட்டு இன்னொருத்தருக்கும் பதில் சொல்ல முடியல யாரும் இல்லாத நேரம் போட நினைக்கறேன் எப்பவும் யாராச்சும் ONLINE ல இருக்காங்க :) என்ன பண்றது ?:-O