Tuesday, May 10, 2016

எனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2

எவ்வளவோ பேரை இங்கே பார்த்தாச்சு..கடந்து வந்தாச்சு..கை கோர்த்து நடந்தும் வந்தாச்சு.. சிலர் மட்டுமே இன்னமும் அப்படியே மனதில் நிற்கின்றனர்.. :) followers கிடைக்கும் வரை நம்மைச் சகித்துக் கொள்ளும் அமாவாசைகள்  , நம்மை விட அதிகம் கடந்த பின்பு ,  நாகராஜ சோழன்கள் ஆகி டாட்டா காட்டிட்டுப் போயிட்டே இருக்காங்க 2011ல இருந்தே அப்படித்தான் :))
@kryes  : நிறைய யோசிச்சேன்..ஏற்கனவே குறிப்பிட்ட நபர் தானே குறிப்பிடணுமா என்று..ஆனால் தமிழ் , இலக்கியம் , அறிஞர்கள் சார்ந்த தகவல்கள் பல இடங்கள் போய்ச் சேரணும் என்றே குறிப்பிடுகிறேன்..
தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகள் ஒதுக்கிட்டு ,நிதானமாக தகவல்கள் சரியாகச் சென்றடைய எழுதும் பழைய பன்னீர் செல்வமாக அவர் திரும்ப எழுதணும் என்பதே என் வேண்டுகோள்..:) பெரியார், வ.உ..சி..போன்ற தலைவர்கள் பற்றி இவர் எழுதும் தொடர் கீச்சுக்கள் மிகப் பிடித்தமானவை..தற்போது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை தொடர் மிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது..எதற்கென பார்ப்பனர்கள் எனும்போது சற்று எரிச்சலாக வரும். ஆனால் இணையத்தில் உள்ள சாதிப் பிரியர்கள் நடவடிக்கைகள் கூர்ந்து கவனித்தால் இவர் பேச்சுக்கு அவர்கள் நியாயம் செய்வதாகவே தோன்றும்.

@iamvariable: நல்ல சமூக சிந்தனையாளர்..இவரையும் முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன் ..ஆனால் மறுபடியும் குறிப்பிடக் காரணம், RJ பாலாஜி,சித்தார்த் என பிரபலங்கள் பேரிடரின் போது இறங்கி வேலை செய்திடினும், இவர் முன்பிருந்தே அதைக் கச்சிதமாகச் செய்து வருகிறார் ..கவனித்த வரையில் இவருக்கு இருக்கும் தலைமைப் பண்பு அசாதாரணமானது . சரியான திட்டமிடல் ,விவரங்கள் சேகரித்தல் , அதற்கேற்ப உதவ வரும் மற்றவர்களை redirect செய்தல் ,என்ன நடக்குது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது வரை அப்டேட் இறுதியில் கணக்கு ஒப்படைத்தல் என அத்தனையும் perfect .. :)
தர்மம் என்பது விளம்பரக் கருமாந்திரம் அல்ல என்ற தலைப்பில் தினமலர் எழுதிய கட்டுரை தான் செம ஹைலைட் செம செருப்படி டு ஸ்டிக்கர் பாய்ஸ்

இவர் படபடவென ஸீரோ following வந்ததும் உடனே தாம் தூமென விமர்சனங்கள்..எனக்கே அந்த செயல் வினோதமாகத் தெரிந்தாலும் , அதற்காக அவரின் அத்தனை செயல்களையும் ஒரேயடியாக மறந்து விமர்சனம் செய்தது அதிகப்படி..எக்கச்சக்க following செய்துட்டு followers காக கெஞ்சுனதும் ,  ஏறவும் கொத்தா அன்பாலோ செஞ்சுட்டு எழுதறவங்கள ஆளுமைன்னு கொண்டாடுறீங்க ..உங்களுக்குத் தேவையான ஆளுன்னா ஒரு மாதிரி , மற்றவர்களிடம் மட்டும் நியாயங்கள் பேசுறப்ப யோசிக்கவே மாட்டீங்களா ? :) எங்க நீங்க ரொம்பக் கொண்டாடுபவர்களிடம் சற்றே உங்க மாற்றுக்கருத்து சொல்லிப்பாருங்க அவ்வளவு நாள் பழகின முகத்தாட்சண்யமே இல்லாம மூஞ்சியில கரியப் பூசுவாங்க..  அவ்ளோதான் ட்விட்டர்.. பிடிச்சதை எடுத்துக்கணும்..ரொம்பச் சகிக்கவே முடியல எனில் விலகிப் போயிடனும்..அவங்களே அடடா !எனும் நினைக்கும் அளவுக்கு..யாரோக்களை விட மிக நெருங்கிப் பழகியவர் திடீர் விலக்கம் எனில் ,  இறுக்கம் தான் எனது பதில்..
@Jappan_ragu : 40 லட்சம் பெறுமானமுள்ள பொருட்களை , வெகு அழகாக சேரிடம் சென்று சேர்த்தது ஆச்சர்யம்..

@ParisalCafe : கடலூர் மாவட்டத்தில் உதவச் சென்ற பலர் அங்குள்ள ஆதிக்கச் சாதியினரால் பல இன்னல்களைப் பெற, அவர்களையும் மீறி தாழ்த்தப்பட்ட ,பாதிப்பட்ட மக்களுக்குச் சென்று சேர்த்தார்கள்..அதற்கு ஒரு ஷொட்டு ..
இவங்கள மாதிரி இன்னும் பல பேர் பல விதமாக சென்னை &கடலூர் பேரிடருக்கு உதவினார்கள்..அவர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் :))

bashhu : ம்யூச்சுவல் ப்ளாக் ல இருக்கிற ஆளைப் பற்றி குறிப்பிடுவது எனக்கே வினோதமா இருக்கு.. :) எனக்கு அவர் கருத்துக்கள் செட் ஆகல..ஆனா வெறுப்பு இல்ல அவ்ளோதான். இந்தப் பேரிடரில் இவரது பணி அசாத்தியமானது.



2015 ஆம் ஆண்டின் மிக மோசமான நிகழ்வாக சென்னை &கடலூர் அதன் சுற்றுப் புற கிராமங்கள் வெள்ளப் பேரிடரில் சிக்கியது..

இவ்வாண்டில் எனைக் கவர்ந்த முதல் பதிவு 

அமீர்கானும் மத சகிப்பின்மையும் 

பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற ஏ.எஸ் பொன்னம்மாள் மறைவு .அப்ப வந்த கட்டுரை 

பத்துதான்  படிச்சு இருக்காங்களாம் இந்தம்மா....ஆனா டபுள் டிகிரி வாங்கினவங்களால் கூட இவ்வளவு தன்னம்பிக்கையுடன் ஆங்கிலம் பேச முடியாது.. அதுவும் வெள்ளம் சூழ்ந்த மோசமான தருணத்தில் இவ்வளவு வெள்ளந்தியாக சிரித்துக்கொண்டே ..அதற்கான காணொளி 

வானிலை அறிக்கை ரமணன் பற்றிய மீம்கள் தூள் பறந்தன..அதுல இந்தப் பயபுள்ள டப்ஸ்மாஷ் தான் டாப்
1
2

 இந்த வெள்ளத்திலும் இப்படி ஒரு மகாபுருஷர் :))

கண் முன்னால் ஒரு மனிதன் வெள்ளத்தில் சிக்கும் போது காப்பாற்றப் போய் நமக்கும் ஆபத்து வந்துட்டா என்ன பண்றது என்றில்லாமல் சட்டென ஒரு மனிதச்சங்கிலி உருவாக்கி காப்பாற்றிய சென்னைவாழ்மக்களுக்கு ஒரு வந்தனம் 🙏🙏


சென்னை செயற்கைப் பேரிடரில் பணியாற்றிய அத்தனை தன்னார்வலர்கள் பற்றியும் சேகரிப்பது சிரமமே..எனினும் சில நல்ல உள்ளங்கள் பற்றியபதிவுகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன்
அவற்றில் சில
ஆட்டோடிரைவர்
இதிலே பலர் இருக்கிறார்கள் 
இது எம் தமிழ்நாடு 
ராணுவத்தின் அசகாய பணி 
சென்னையை மீட்ட உண்மை நாயகர்கள் பற்றிய விகடன் பதிவு 
தன்னார்வலர்கள் பற்றி கேள்வியும் ஆச்சரியமுமான ஒரு கடலூர் தாத்தா 
தன்னார்வலர்களுக்கு கங்கை அமரனும் சன் டிவியும் சேர்ந்து செய்த சமர்ப்பணம்



எப்படி தூர்வாரனும் ஏன் என நம்மாழ்வார் விளக்கம் 

இந்தப் பேரிடர் மனிதாபிமானமிக்கவர்களை அடையாளம் காண்பித்துச் சென்றிருக்கிறது இது போல 

சென்னைக்கு ஒவ்வொரு ஆறு எங்கிருந்து வந்தது என்ற அருமையான விளக்கம்
ஒரு வடக்கன் இந்த சென்னைப் பேரிடரிலும் பேசிய சில்லறைத்தனத்துக்கு fb ல அனுஷா என்பவர் கொடுத்த செருப்படி :) 

இவ்வுலகம் வெகு வேகமாகப் போகின்றது. நாம் விழுந்தால் கூட கேட்க ஆளில்லை என்ற கவலையோடு ஓடியவர்களுக்கு சென்னைப் பேரிடர் அழிவிலும் ஓர் ஆக்கத்தை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச் சென்று இருக்கிறது.  எல்லார் மக்களின் மனத்திலும் இன்னமும் ஈரம் இருக்கிறது என்றுணர்த்தி சென்றிருக்கிறது மழை.  அதிலே ஓடிச்சென்று உதவிய முகமறியாத கரங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்..!

இது போல பலரைப் பிடித்திருக்கிறது என்று நான் ப்ளாக் எழுதினாலும் அதிலே சிலருடன் இப்போ பேசுவதேயில்லை மாற்றம் ஒன்றே மாறாதது. வெளிப்படையாகப் பேசுவது என்பது ஒருவரை பாராட்டும் போதே விரும்பப்படுகிறது.. நமக்குப் பிடிச்சவங்க தவறு செய்யும்போது தான் ரொம்பக் கோவம் வருது. ஆனா அதைச் சொல்ல முடியாவிடில், கேள்வி கேட்டாலே உடனே விலகிச்செல்லும் நட்பு  என்ன நட்பு.. எவரோ செய்த தவறுக்காக ஒட்டுமொத்த இணைய நட்பே இப்படித்தான் என்று ஒருவரையறைக்குள் கொண்டு வர விருப்பமில்லை. ஆனால் சற்று இடைவெளி விட்டுப் பழகுவதே சாலச்சிறந்தது என்ற எண்ணம் வந்திருக்கிறது. 

திடீரென நான் உபியாக மாறி விட்டேன் என்று பலவிதமான விமர்சனங்கள்.  ஒவ்வொரு அரசு ஊழியர் வீட்டிலும் திமுகவால் பலன் அனுபவித்த நன்றி சிறிதளவேனும் இருக்கும். அதே போல திமுக மீதான விமர்சனங்களையும் ஓர் உரிமையாகவே வைப்பார்கள்.. அது போலத்தான் நானும்.. 2011 ல் ஒரு பொதுஜனமாகவே என் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறேன். அப்பொழுது இருந்தவர்களுக்கு என்னைத் தெரியும்.. ஆனால் நேர்மையாக விமர்சிக்க நான் ரெடி..நடுநிலைகள் என்பவர்களிடமோ மாற்றுக் கட்சியினரிடமோ அது அறவே இல்லை எனும்போது நம் நேர்மையை ஏன் இவர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்றாகிவிட்டது . தங்கள் சாதியினருக்காக அவர்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொது ஜனம் பற்றிக் கவலைப்படாமல் ஒரு சார்பான நடுநிலைகள் பேசும்போது திமுக குறைகளைப் பற்றிப் பேச அலச எனக்கு விருப்பமில்லை . ஒவ்வொரு நடுநிலைகளும் சந்தர்ப்பம் வாய்க்காத குமாரசாமிகள்.  அதற்கு மேல் ஊடகங்கள் . ஒரு முதலமைச்சரே தண்டனை பெற்று உள்ளே சென்று வந்தபின்பும் அதன் காரண காரியங்களை மக்களிடம் எடுத்துச் செல்லாமல் பீப் பாடலுக்கும் நமீதாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அதி அக்கறையாளர்கள்.. இதிலே நானும் ஒரு சராசரியாகவே இருந்துவிட்டுப் போகிறேனே.. 
நான் நானாகவே இருப்பதாக நம்புகிறேன்.. இதிலே என்னைக் கேட்காமல் என்னைப் பற்றி நீங்கள் வைத்த பிம்பம் உடைந்திருந்தால் பொறுப்பேற்க இயலாது.. 
எனது ட்விட்டர் பயணம் மெதுவானதே.. பிடிச்சதை பிடிச்சவங்களோட பேசி பிடிக்காதவர்களை வம்படியாக ஒதுக்கி ஆயிரம் பெண்ணியம் பேசினாலும் பிடிக்காத பெண் எனில் வார்த்தைகளிலாவது வன்புணர நினைக்கும் ஆட்கள் மத்தியில் இவ்வளவு நாள் நிலைத்து நின்றதே எனக்குப் பெரிதுதான்.. 
அதே நேரம் நான் ஒருமுறை கூட பேசி இராத எவர் என்றே தெரியாத ஆட்கள் எப்பொழுதாவது நம்மைப் பற்றி நல்லதாக நினைத்ததைச் சொல்லும்போது மனசுக்குள் ஓர் ஆசுவாசம் விரவுவதை தவிர்க்க முடியவில்லை.. :) ஏனெனில் வெறும் எழுத்தில் நம் கோபம் ஆதங்கம் திமிர் எனப் பன்முகங்களையும் காட்டிய பிறகும்கூட இவங்களுக்கு எப்படி இவ்ளோ மதிப்பு அதுவும் நம்ம மேல என்ற ஆச்சரியம்தான் :) அது போன்ற நெகிழ்வான தருணங்களும் என் எழுத்தை மேம்படுத்த நண்பர்கள் கொடுத்த விமர்சனங்களும் ஊக்கங்களும் தான் என் எழுத்துக்களை இங்கே இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன :)  நாச்சியார் திருமொழி விளக்க உரைகள் அவர்களாலேயே சாத்தியம் ஆனது. நாம் செய்கின்ற காரியங்கள் நமக்கே பிடிக்குமே அது போல எனக்கு இந்த விளக்க உரைகள் 

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !!!