ஏதோ 2012 ஆம் ஆண்டு இறுதியில் மனத்தைக் கவர்ந்தவர்கள் பற்றி ஆத்மதிருப்திக்காக எழுத ஆரம்பித்தது.. அதிலே அவர்களுக்கும் ஒரு சிறு மகிழ்ச்சி கிடைத்தது எனக்கு இன்னமும் உற்சாகம் தந்தது இது போன்று எழுத.. நான் சொல்வதாலோ அன்றி அவர்கள் நன்றி நவிலலோ எங்கள் இரு தரப்பு வாழ்க்கையில் எள்ளளவும் பயனுறப் போவதில்லை. போலவே அன்று மனம் கவர்ந்தவர்கள் எல்லாம் என்றுமே கவர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. கடந்த இரு ஆண்டுகள் எனக்குப் பிடித்தவர்கள் பட்டியலில் இருந்தவர்கள் தாமாகவே முன் வந்து , தாங்கள் அதற்குத் தகுதியில்லை என்பதை ஒரு வலியோடு உணர்த்திச் சென்றார்கள்..
ஆமாம்..இவங்க கொடுக்கிற நல்லவங்க பட்டம் வச்சுத் தான் வாழப் போகிறோமா சரிதான் போடி என்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம்
" நான் இழந்தது என் மீது மரியாதை அற்றவர்களைத் தான் ; ஆனால் நீங்கள் இழந்தது உங்கள் மீது மரியாதை வைத்திருந்த ஒருத்தியை "
எதற்குமே கவலை இல்லை என்பவர்கள் ஏதேனும் ஓர் இடத்தில் ஓங்கி அடி வாங்கும்போது முன்னம் செய்த அத்துணைப் பிழைகளும் கண்முன் வந்துபோகும் என் துணிபு.
தனிப்பட்ட முறையில் ட்விட்டர் பற்றிய அனுபவம் தனிப் பதிவாகவே போடும் அளவுக்கு இருப்பதால் இங்கே பிடித்தவை பற்றி மட்டும் பகிர விழைகிறேன்:) இவ்வாண்டு பிடித்தவர்கள் என எவரை எடுப்பது எவரை விடுப்பது எனக் குழம்பும் அளவுக்கு ஏகப்பட்ட ட்ராபிக். எவரையும் பிடிக்காமல் பின்தொடர்வதே இல்லை என்கிற முன்மொழியோடு அதிகம் ஈர்த்தவர்கள் பற்றி சில :)
"ட்வீட் போடாத நாளில் தான் நிறைய followers இப்போத் தான் புரியுது நான் நானாத் தான் கெட்டுப் போயிருக்கேன் " என்ற இவர் ட்வீட் பார்த்து புன்னகைத்துப் பின் தொடர்ந்தது :)
@DiNationS_ அநேகமாக இவரை அனைவருக்குமே பிடிக்கும் என்றே நினைக்கின்றேன்.. சமீபமாகவே தொடர்ந்தாலும் , எனக்கு mention tab மூலம் நன்கு பரிட்சயம்.. எதற்கும் கருத்து ஆழமாகச் சொல்லாமல் எப்பவும் ஒரு safe mode லயே திரிபவர் :) கலகல பேர்வழி .. சுமைலி மட்டுமே போட்டுக்கிட்டு திரிஞ்ச ஆளையும் நொந்துடிவிட்லான்கர் போட வைத்த பெருமை இசைச் சண்டையாளர்களையே சாரும் :-))
@bommaiya யதார்த்த ட்விட்டர் .."தாஜ்மஹால் கட்டுன ஷாஜகானைத் தான் உலகம் நினைக்குது ..பொண்டாட்டிக்காக மாசாமாசம் EMI கட்டுற கணவர்களை அல்ல "என்றொரு நச் ட்வீட் மூலம் என்னை ஈர்த்தவர்.. சமீபமாக லிங்கா ரஜினியின் உறவுகளை ஆராய்ந்து அதிகம் பாராட்டு பெற்றவர்.
@2nrc பெரிதாக ஈர்க்கும் கீச்சுகள் இல்லை எனினும் நல்ல மனிதர்.. எவரையும் காயப்படுத்திப் பார்த்ததே இல்லை. சமையல் விரும்பிகள் தாராளமாகப் பின்தொடரலாம்.. இவரது நளபாகம் தளத்தில் நிறைய இருக்கின்றன. ஒருமுறையேனும் மும்பை சென்று இவரைச் சமைக்கச் சொல்லி சாப்பிட்டு வரும் அளவுக்கு ஆசை இருக்கிறது :)
இந்தக் கோரஸ் புதிரில் மறக்கவே முடியாத நபராக இவர் @kuumuttai இருப்பார் :) இவர் பதிலை மட்டும் வேகமாக ஸ்க்ரோல் செய்து படிப்பதில் ஓர் அலாதி இன்பம் .. ஏகப்பட்ட பதிலைப் போட்டு பிடிச்சதை எடுத்துக்கிடுங்க என்ற தாராள மனப்பான்மையில் ஆரம்பித்து , ராஜா கிவிஸ் ல ரஹ்மான் பாட்டு போட்டு அதிரடி செய்யும் வரை இவரது ரகளைகள் ஏராளம் :)) போற போக்குல எல்லா ரசிகர்களையும் வம்பு இழுத்துட்டு , சோடா பாட்டில் சைக்கிள் செயின் அறுந்த பிறகு ரிலாக்ஸ் ஆ வருவாரு சாக்கிரத :)
ட்விட்டர் வந்த புதிதில் இருந்தே அறிமுகம். சினி டேட்டாபேஸ்ல இன்னும் ஒரு கெட்டி @kaarthikarul
இங்கே புகைப்படக் கமெண்ட்களில் சிறந்தவர்களாகவும் நல்ல பொழுதுபோக்காளர்களாகவும் இவர்களைச் சொல்லலாம் @su_boss2 @roflkanth @MrElani @karuthujay
@Mr_vandu நல்ல பொழுதுபோக்கும் நகையுணர்வும், குறிப்பாக எழுத்துப் பிழை சொன்னால் கோச்சுக்க மாட்டாருங்க :-))
ஒரே மாதிரி ஏழு
இவருடைய இன்னொரு ட்வீட் லிங்க் தேடினேன் கிடைக்கல "இன்னிக்கு நீ ட்வீட் போடுவ நாளைக்கு உன் மவன் ட்வீட் போடுவான் ஆனா முதல்ல ட்வீட் போட்டு நாசமாப் போனது நானு இதெல்லாம் பெருமையா கடமை"
அருமையான தமிழ்ப்புதிர்போட்டி அதிலும் ஏகப்பட்ட தகவல்கள் எளிமையான விளக்கம் @naatupurathan
@sivaramang பாடல்கள் வெறும் சினிமா என்ற அடையாளத்தோடு நில்லாமல் நம் வாழ்க்கையில் எந்த அளவுக்குப் பின்னிப் பிணைந்தவை என்பதை அனுபவத்தின் வாயிலாக சுவராசியமாகச் சொல்வதில் வல்லவர். இவரின் முகநூல்ப் பதிவுகளைத் தேடிப் படியுங்கள்.. அல்லது இவரது புத்தகம் முன்னேர்ப் பதிப்பகம் வாயிலாக வெளி வரும்போதே பெற்றுக் கொள்ளுங்கள்.. உங்கள் பணத்திற்குத் தகுதியானதாகவே இருக்கும் என்கிற உத்தரவாதம் அளிக்கிறேன்.
அரசியல்சார் கீச்சுக்கள் விரும்புபவர்களுக்கு இவர் @saysatheesh கீச்சுகள் நல்ல தீனி.. கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு இவர் தான் பிள்ளையார் சுழி என அறிவீர்களா ?:)
தமிழில் வெகு நேர்த்தியாக இவர்கள் @tamilLogos வடிக்கும் லோகோஸ் ஈர்க்கிறது.. ஆண்ட்ராயிட் போன் பற்றிய தகவல்களுக்கு ==> @TamilDroid
கிருஷ்ணனைப் பிடிக்காதவர்களுக்குக் கூடப் பிடித்து விடும்.. இவர் @keshav61 வரையும் கிருஷ்ணன் ஓவியங்களைக் கண்டால்.. கிருஷ்ணர் எங்கே என்றால் இவர் விரல் நுனிகளில் விளையாடுகிறார் என்றே சொல்லுவேன் .பெண் உருவங்களில் கூட கிருஷ்ணனின் பிம்பமே பிரதிபலிக்கிறது :)
வாட்டர் கலர் பெயிண்டிங் க்கு @tparavai என்றால் ஆயில் பெயிண்டிங் @PrasannaArtz மிகச் சிறந்த ஓவியர் ..அதிலும் அப்படியே தத்ரூபமாக வரைவதும், ஓவியத்தில் உயிரோட்டம் உணரச் செய்வதும் இவருக்குக் கை வந்த கலை :-)
@iamvaalu பெண்களில் , அரசியல் கமென்ட்கள் ஆண்களுக்கு இணையாகப் போட வல்லவர்.. காங்கிரஸ் மொத்தமும் தோற்ற பொழுது வெகு டைமிங்காக இவர் அடித்த "டேய் தகப்பா " போட்டோ கமென்ட் ட்விட்டர்,fb ,வாட்சப் என மிகப் பிரபலமாக வலம் வந்தது.. அதே போல கேப்டனின் தொகுதிப் பங்கீடுக்கான ,சின்னவனுக்கு பேன்ட் பெரியவனுக்கு கறுப்புக் கண்ணாடி கருப்பு கேட்கறான் என்ற டைமிங் டயலாக் -ம் .. ஏனோ ஜெ விசயத்தில் மட்டும் அதிகம் அடக்கி வாசித்ததோடு அல்லாமல் அத்தோடு இங்கே ஆளையே காணோம்..மேடம் வி மிஸ் யூ :)
நான் ரசிக்கும் பெண் கவிஞர்கள் @dhivisdreams @i_Soruba நாலு வரி எழுதவே எனக்கு நாக்கு தள்ளுது..இவங்க நீளம் நீளமா எழுதறாங்க..அதுல திவி உங்களைப் பார்த்து தான் மேடம் கவிதை எழுத ஆரம்பிச்சேன் ன்னு சொன்னப்ப ,கண் வேர்த்தாலும் ,பொறாமையில் கட்டை விரலைக் கொடு என்று கேட்கத் தோன்றியது. அவரது மோகத் திணை கவிதை பார்த்து :) ஏன் எனில் அதில் வரும் ஒவ்வொரு கற்பனையும் கண்டு,சொற்களைத் தேடிக் களைத்திருந்தேன் :)
படிக்க இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்,நீளம் கருதியும் பாகங்களாகப் பிரித்திருக்கிறேன் ..பொறுத்தருள்க :)
பிடித்தவர்கள் பட்டியல் தொடரும் .... :-))