Sunday, July 1, 2012

ட்விட்டர் அப்டேட்ஸ்..!

கார்ல போறவனுங்களுக்கு டூ வீலர்ல போறவங்களைப் பார்த்தா எப்டி இருக்குமோ ஹாரன் அடிச்சே கொல்றான்#நாங்களும் கார் வாங்குவோம்டா :)


ATMல 5000ரூ.பணம் எடுக்க ஒருவருக்கு உதவினேன் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு 5000க்குஇத்தனை சைபர் போடணுமான்னு கேட்டார்:)


பக்கத்துக்கு வீட்டு வாண்டுவிடம் ஒருநாள் தான் பேர் கேட்டேன் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் தன் பெரைச்சொல்லிவிடுகிறது வாண்டு:)


வாழ்க்கை என்பது.......................... #இன்னமும் இது போல முழுமையடையாதாகவே இருக்குன்னு சொல்ல வந்தேன் :)  


அடிக்கடிநடக்கின்ற ட்விட்டர் சண்டைகளில் யதார்த்தமாகவும் பல நல்ல விசயங்களை பகிரும் அருமையான டிவிட்டர்கள் கழண்டு கொண்டிருக்கின்றார்கள்  


வெறுப்பதற்கு கூட இடமின்றி மனதிலிருந்து முற்றிலுமாக அகற்றிவிட்ட பின்னர் முன்னம் பழகியவர்களின் எந்தச்செயலும் துளி கூட பாதிப்பதில்லை 


பிடிக்காதவன் என்ன செய்யறான்னு பின்னாடியே போய் வேடிக்கை பார்த்துகிட்டே அலையறவங்களுக்கு பொழைப்புன்னு ஒன்னு இருக்காதா?#சீரியஸ் டவுட்


நூறு சதவிகிதம் உண்மையா இருந்தும் காதல் தோல்வி போல நயன்தாராவுக்கு எனக்கென்னவோ ரமலத் விட்ட கண்ணீர் வீண் போகலன்னு தோணுது

தேவை இருக்கோ இல்லையோ பொருள் அழகா இருந்தா வாங்கிடனும்ன்னு தான் தோணுது #ஷாப்பிங் விதிகள் 

மைதிலி என்னைக் காதலியில் செட்டிங்க்ஸ் என்ற பெயரில் சில இடங்களில் தெர்மாகோல் வச்சு போட்டிருக்கார் TR :) 
தவறே செய்யாதவர்களுக்கு வருகின்ற கோபம் அவ்வளவு எளிதில் அடங்காது #படித்ததில் பிடித்தது


லொள்ளு சபா மனோகர் லொள்ளு சபாவின் இயக்குனர் ராம்பாலாவிடம் இருந்தவரை தான் மதிப்பு #கம்பன் வீட்டுக் கட்டுத்தறி


தனக்குத்தானே பேசிக்கிறவங்களுக்கு ஜனகராஜ் குரலை டப்பிங் செய்து கேட்டுக்கொள்கிறேன் #என்னமோ போங்க எனக்கு சிரிப்பா வருது :)


நீ சொன்ன பேச்செல்லாம் நான் கேட்க மாட்டேன் போடா # ஏதோ என்னால முடிஞ்ச கவித:)


என் ஒட்டுமொத்த உறுதியையும் உன் ஒற்றைத் தீண்டல் குலைத்து விடுகிறது #தூக்கம்ம்ம்ம்


சாரு,ஜெமோ,மாமல்லன் MD முத்துகுமாரசாமி இவங்க ஒருத்தரை ஒருத்தர் சாடிக்கிறதை படிச்சா எளக்கியவாதி ஆகிறலாமா?#யோசனைதான் கேக்கறேன்:)


 இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் -இந்த வரிகள் ராஜா &SPB இருவருக்குமே பொருந்துகின்ற வரிகள் 


இங்க்லிஷ்காரன் தமிழைத்தப்பா பேசினா கேட்டுக்கறோம் (தஞ்சாவூர்-தேஞ்சூர்,)ஆங்கிலம் தப்பா பேசினா கேலி பண்றோம்#நம்மநேர்மையில் ரெண்டு அடிஅடிக்க 


ஜெ கபட நாடகம் ஆடுவதாக முக பேட்டி ஏதோ ஒரு டிவி யில் பார்த்தேன் #பாம்பின் கால்... 


கை கொடுக்கும் கை -ரஜினி அருமையான காதலனாக மிளிர்ந்த படங்களில் இதுவும் ஒன்று ஆனால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது புதுக்கவிதைதான் 


ரஜினிகாந்த்தின் அருமையான படங்களில் கை கொடுக்கும் கையும் ஒன்று #தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப் பேசு 


விடிந்த பின்னும் அணைத்துக் கொண்டு அகல மறுக்கின்றாய் வெட்கம் கெட்ட தூக்கமே கண்கள் விட்டு விலகிப் போ 


 புதிதாய்ப் பேசிப் பழகும் வாண்டு உறவுமுறை சொல்லி முதன்முதலாய் அழைக்கும் பொழுது குழலினிது யாழினிது நினைவுக்கு வருகின்றது