பதிவு எழுதுங்கள் என்று நண்பர் கேட்கும் வரை தோனல.நிச்சயம் இரு பெரும்
திருவிழாக்கள் தான்.இவ்வளவு பேர் மதுரையில் இருக்கின்றார்கள் என்பதே இது
போன்ற திருவிழா காலங்களில் தான் தெரியவரும்.சித்திரை அமாவாசை அன்று அழகர் கோவிலும் மூன்றாம் நாளில் மீனாட்சிக்கும் கொடி ஏற்றம் நடக்கும்.அன்று முதல் சாமி மாசி வீதிகளில் ஊர்வலம் வரும்.பிரியாவிடை அம்மன் பற்றிய கதை எதுவும் அறியேன்.ஆனால் இந்த
திருவிழா காலங்களில் சிவனோடு உரிமையாக அமர்ந்து வருவது அவங்கதான்.
கோவிலில் அவருக்கு என்று தனி சன்னதி எல்லாம் இல்லை.உற்சவ மூர்த்தி
மட்டுமே.
மீனாட்சி தனியாகத் தான் வருவார்.தேரோட்டம் அன்று மாலையில்
மட்டுமே மூன்று தெய்வங்களும் ஒன்றாக வரும்.அழகர் கோவில் கள்ளழகர் தான் திருமணம் முடிக்க வருகிறார்
அவர் வருமுன் திருமணம் கோவித்துக் கொண்டு வைகை ஆற்றோடு
செல்கிறார் என்று செவி வழி செய்திகள் உண்டு.அது உண்மை அல்ல.
உண்மையில் திருக்கல்யாணம்,அழகர் ஆற்றில் இறங்குதல் இரு வேறு
விழாக்கள்.திருமலை நாயக்கர்தான்ஒன்றாக ஒரே மாதத்தில் மாற்றி

அமைத்தது.திருப்பரங்குன்றம் முருகனும் கல்யாணத்திற்கு வந்துவிடுவார்.
மதுரை சுந்தரராஜப் பெருமாளே இங்கே தாரை வார்த்துக் கொடுப்பது.சைவ
வைணவச் சண்டைகளை திசை மாற்ற என்று பின்னாளில் இது புரிந்தது.மூன்று
ஸ்தனங்களை உடையவள் மீனாட்சி என்றும் அவளுக்கே உரிய கணவனை
பார்க்கும் பொழுது மூன்றாவது மறையும் என்றும் கதையில் உண்டு.மீனாட்சி
சன்னதிக்குள் சுவற்றில் மீனாட்சி கதையை சிற்பமாக வடித்து இருப்பார்கள்.
மாசி உலாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வு ஒவ்வொரு வாகனத்தில் கடவுள் எழுந்தருளல்.
.மதுரை உண்மையில் ஒரு கட்டமைக்கப்பட்ட ஊர்.மீனாட்சி கோவிலை மையமாகக் கொண்டு சதுரமாக ஒவ்வொரு வீதியாக இருக்கும்.ஆடி வீதி,
சித்திரை வீதி,ஆவணி மூல வீதி,மாசி வீதி,வெளி வீதி,மாரட் வீதி இப்படி.
இறுதியில் தேரோட்டம் தான் முத்தாய்ப்பு.

திருக்கல்யாணத்தன்று சுமங்கலிப் பெண்கள் அனைவரும் பழைய கயிறு மாற்றி
புது மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள்.அதனால் மஞ்சள் கயிறை தனிப்பட மக்களும்இலவசமாக போவோர் வருவோருக்கு அளிப்பதுண்டு.அது
மட்டுமின்றி பக்தகோடிகளுக்கு நீர்,மோர் பந்தல் மற்றும் உணவுப் பொட்டலம்
விசிறி என்று வழிநெடுக எவரேனும் கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு எல்லாம் உண்டு.திருமணம் முடிந்து சாப்பாடும் மொய்யும் கூட உண்டு:)மதுரை என்றதும் மீனாட்சி ஆட்சியா வீட்டில் என்ற கிண்டல்கள் உண்டு.உண்மையில் கடவுளே ஆனாலும் கணவனுக்கு அடங்கிய பெண் எனக்காட்ட ஒவ்வொரு வருடமும் இரு பங்காக பிரிக்கப்பட்டு ஆட்சிக்காலம் மீனாட்சியை விட சிவனுக்குத்தான் அதிகம்கொடுக்கப்படுகிறது:)உலக அதிசயத்தில் மீனாட்சி
மிகையல்ல.பணம்இழந்ததை விடஅதிசயப்பட்டியலில் எங்கள் கோவில்
வரவில்லையே என்ற ஆதங்கம் பெரும்பாலோருக்கு உண்டு.
மட்டுமின்றி பக்தகோடிகளுக்கு நீர்,மோர் பந்தல் மற்றும் உணவுப் பொட்டலம்
விசிறி என்று வழிநெடுக எவரேனும் கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு எல்லாம் உண்டு.திருமணம் முடிந்து சாப்பாடும் மொய்யும் கூட உண்டு:)மதுரை என்றதும் மீனாட்சி ஆட்சியா வீட்டில் என்ற கிண்டல்கள் உண்டு.உண்மையில் கடவுளே ஆனாலும் கணவனுக்கு அடங்கிய பெண் எனக்காட்ட ஒவ்வொரு வருடமும் இரு பங்காக பிரிக்கப்பட்டு ஆட்சிக்காலம் மீனாட்சியை விட சிவனுக்குத்தான் அதிகம்கொடுக்கப்படுகிறது:)உலக அதிசயத்தில் மீனாட்சி
கோவில் பட்டியலில் இருக்குஎனத் தெரியவும் ஆங்காங்கே பெரிய அளவில்
விளம்பரம் வைத்துஓட்டுசேகரித்தார்கள்.ஓவ்வொரு சாமான்யனும் கூட
வெளிநாட்டிற்குஅழைத்துதன் ஓட்டைப் பதிவு செய்தும் முன்னால்கொண்டு
வராத நுண்ணரசியல்வெளிநாட்டுத் தேர்வுக்குழு செய்தது என்றால் அதுமிகையல்ல.பணம்இழந்ததை விடஅதிசயப்பட்டியலில் எங்கள் கோவில்
வரவில்லையே என்ற ஆதங்கம் பெரும்பாலோருக்கு உண்டு.
வாராரு ...வாராரு...அழகர் வாராரு..
அடுத்த பெரும் திருவிழா இது.திருக் கல்யாணக் கூட்டத்தை விட மதுரையைச்
சுற்றியுள்ள கிராமத்து மக்கள் அதிகம் வருகை தருவது இந்த விழாவிற்குத்தான்.
வண்டி கட்டிவருவார்கள்.அழகரை வரவேற்று வழியனுப்பும் வரை
மதுரைவாசம்தான்.மதுரையில் சௌராஷ்டிரா இனத்தவர்கள் அதிகம்.கைத்தறி
தான் இவர்களில் பெரும்பாலோர் தொழிலாக இருந்தது.வீதியில் பட்டு நூலை வைத்து இழைப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது ஒரு காலத்தில்.
இன்று அதெல்லாமில்லை:((இவர்களில் குல தெய்வம் தெரியாதவர்களுக்கு
குல தெய்வமாய் விளங்குவது அழகர்தான்.(சௌராஷ்டிரா தோழி கொடுத்த தகவலில் அடிப்படையில்).சாமியை நாம் சென்று கோவிலில்

வழிபடுவதுதான் வழக்கம்.வழக்கத்திற்கு மாறாக சாமி நம்மைப் பார்க்க
வருகிறார் என்றுதான் அத்தனை மகிழ்வாக கொண்டாடப்படுகின்றது.அழகர்
வைகை ஆற்றில் இறங்குவதற்கு பல கதைகள் சுவராசியமாக
புனையப்படுவதுண்டு.மீனாட்சி திருமணத்திற்கு வந்தவர் தான் வருவதற்கு
முன் தன்னுடையநகலான சுந்தரராஜப் பெருமாளைவைத்து சிவன் திருமணம்
முடித்ததால் கோபம் கொண்டுஆற்றோடுதிரும்புகிறார் என்பதும்,
மண்டூக மகரிஷிக்குமோட்சம் கொடுக்கவருகிறார்என்றும் பல கதை உண்டு.
ஆனால் சிவன்முதன்முதலில்தன்பக்தன்தாகம்தீர்க்க உருவாக்கிய வைகையை
முதலில் கடந்தவர் என்றும் சொல்வதுண்டு.

உண்மையில் கள்ளர் இனத் தலைவன் வைகை ஆற்றுவரையிலான பகுதியில்
தொடர்ச்சியாக கொள்ளையடித்து விட்டு அப்படியே தன வைப்பாட்டியான
துலுக்க நாச்சியார் (இஸ்லாமியப் பெண்மணி) வீட்டிற்கும் சென்று வருவதுண்டு.இன்றும் கள்ளர் இனத்தவர்கள் அழகர் மலை அருகில்
வசிக்கவே செய்கின்றார்கள்.எனவே இவர் எம்இனம் எம் தெய்வம் என்று
கள்ளழகரைதமக்கே சொந்தம்கொண்டாடுகின்றார்கள்.யாரோ ஒரு கள்வன்
எப்படி பெருமாள் அவதாரம் எடுத்தார் என யாம் அறியோம்:) ஆனால் வருடா வருடம் அழகர்வருவது அந்தக் கள்ளனின் வேடத்தில்தான்.
பூட்டியே கிடக்கும் (ஒருதடவை கூட திறந்து நான் பார்த்தது இல்லை) பதினெட்டாம்படிகருப்பு காவல் தெய்வம்.பொதுவாக சாமி பார்க்க அசைவம்
தவிர்த்து செல்லும்பழக்கம் நமக்கு உண்டு.நம்ம கிராமத்து சனங்க அதெல்லாம்
பார்க்கிறது இல்லை.கெடாவெட்டி மொட்டை அடிச்சு சாமி கும்பிட்டு
அழகரையும் பார்த்துட்டுதான் போவாங்க.அழகரை எதிர்கொண்டு அழைக்கும்
நிகழ்ச்சி எதிர்சேவைஎனப்படும்.தமுக்கம்சிக்னல் தாண்டி போக்குவரத்து
நிறுத்தப்பட்டுவிடும்.எவ்ளோதூரமென்றாலும்நடந்துதான் போகணும்
அதன்பிறகு.இருந்தாலும்போவோம்ல:) சாமிவரும் வழியில் எல்லாம்
மண்டகப்படிவைக்கப்பட்டிருக்கும்.தங்கள் இடத்தில் சாமியை வரவழைக்கப் பணம் கட்டிஇருப்பார்கள்.அங்கே சில நிமிடங்கள் தங்கி தங்கி வரும்.
முன்பெல்லாம் ஒரு சிலதான் இருந்தன.இப்போ ஆள் ஆளுக்கு பணம் கட்டி

வைத்திருக்கின்றார்கள்.அந்தக் காலத்தில் இருந்தே பேர் போனது ராமராயர்
மண்டகப்படிதான்.எங்கேனும்வெளியே சென்ற இடத்தில தெரிந்தவர்களை
சந்தித்துப் பேசிநேரம்சென்றுதிரும்பிவந்தால் என்ன மண்டகப்படியில்
இருந்தியா என்ற கிண்டல் இன்றளவும் உண்டு மதுரையில்.அதே போல
உள்ளூர்ச்சானல்கள் எல்லாம் இல்லாத அந்நாளில் சாமி பார்க்க செல்ல முடியாவிடில் "ஆத்தைக் கண்டேனா அழகரை கண்டேனா?"என்ற சொல்லாடலும் உண்டு.(என் அம்மா சொல்வாங்க உங்கப்பாவைக் கட்டி

ஆத்தைக் கண்டேனா அழகரைச் சேவிச்சேனா?":))அந்த அளவுக்கு அழகரைப்
பார்ப்பது பெரும் பாக்கியமாக கருதப்படுகின்றது.மூன்று நாட்கள் முன்பே
வைகை அணையில் நீர் திறந்துவிடப்பட்டுவிடும்.வரலாற்றிலேயே முதன்முறையாக மில்லேனியம் ஆண்டா அல்லது2003ஆ சரியாகத் தெரியல)
அழகர் நீரே இன்றிஇறங்கியதாகஎன் தந்தைசொன்னதுண்டு.அன்றைய தினம்
மட்டும்அழகரைதரிசிப்பவர்கள் எண்ணிக்கை சில பல லட்சங்கள் தாண்டும்
என்றால் நம்புவீர்களா?நம்பித்தான் ஆகவேண்டும்.தங்கள் இன,சொந்த
மண்டபங்களில்

முதல்நாளே வந்து தங்கிவிடுவார்கள்.மேலே படத்தில் பார்க்கும் கூட்டம்
ஏதோ ஒரு மூலையின் ஒரு பகுதிதான்.கண்டிப்பா எல்லாரும் சாமி பார்க்க
முடியாதுதான்.தள்ளி நின்று நாராயணா கோஷம் விண்ணைப்பிளக்கும்.

ஒரு சொம்பில் நிறையசக்கரைவைத்துஅதில் சூடம் வைத்துக் காட்டுவார்கள்
சாமிக்கு.டிவியில்பார்த்துக்கொள்ளும் வசதி வந்தாலுமே கூட வீட்டில்
இருப்பவர்கள் குறைவே.அழகர்,கருப்பசாமி வேடமிட்டு ஆடி வருபவர்களைப்
பார்க்கவே ஆசையாக இருக்கும்.

இப்பொழுதாவது டிவி மூலம் சாமி எந்த இடத்தில இருக்கு என்று அறிய முடியும்
.அந்தக் காலத்தில் இருக்கும் இடம் எவரேனும் சுற்றி அலைந்து திரிந்தேனும்

பார்த்து விடுவதுண்டு.டிவி பார்க்காமலே இந்நேரம் சாமி எங்கே இருக்கும் எங்கு
சென்றால் சாமி பார்க்கலாம்என்று மிகத் துல்லியமாக அம்மா சொல்வதுண்டு
(அனுபவம்).வெயிலில் வரும் சாமிக்கு நீர் பீய்ச்சி அடிப்பார்கள்.அப்படியே
நமக்கும்தான்.அதனால் அன்று வெயிலே தெரியாது.வெண்பட்டு அல்லது
பச்சைப்பட்டு உடுத்தி எழுந்தருள்வார்.பச்சை என்றால் மழை பொழியும்
விவசாயம் கொழிக்கும் என்றுநம்பிக்கை உண்டு.தேவா இசையமைத்ததிலேயே
உருப்படியான பாட்டுஅழகருக்கென்றே அட்டகாசமாக அமைந்த பாடல்
என்றால் அது வாராருவாராரு பாடல்தான்.அழகர் வரும் இடமெல்லாம் இந்தப்
பாடலை

சலிக்காமல் ஒலிபரப்புவார்கள்(வீடியோவை பார்க்காமல் பாட்டை மட்டும்
கேட்கவும்.ஒரிஜினல் வீடியோகிடைக்கல:)வண்டியூரில் மண்டூக மக ரிஷிக்கு
மோட்சம் கொடுத்துவிட்டுதுளுக்கநாட்சியார் வீட்டுக்கெல்லாம் போயிட்டு
சாமி திரும்பிச் செல்லும்வரைமதுரை களைகட்டி இருக்கும்.வரும் பொழுது
பூப்பல்லாக்கில் வந்த தெய்வம்போகும் பொழுதுபூவெல்லாம் உதிர்ந்து
நாரோடு செல்லும்.போய்வருகின்றேன் என்று சொல்கிறாராம்:) அட இப்படியெல்லாம் சென்ற அழகர் கோவிலுக்குள் உடனே உள்ளே விடப்படுவாரா என்றால் அதுதான்இல்லை.தீட்டு பட்டதாகச் சொல்லி ஒதுக்கி
உட்கார வச்சிடுவாங்க.ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்றுதான் தீட்டு கழித்து உள்ளே விடுவாங்க.(என்ன தீட்டோ?:) கள்ளழகர் திருவிழா பிரபலம் என்பதாலோ என்னவோ அழகர் மலையில்

இருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலை முருகன்
அதிகம் கவனிக்கப்படுவதில்லை.அருமையான மூலிகை வனம் நிறைந்த மலை
அழகர்மலை.இப்பொழுது ஆபத்தும் அதிகம் நிறைந்த மலை என்றே
ஆகிவிட்டது.தனித்து சென்றால் அழகாக இருக்கின்றது என்றே சற்று உள்ளே
ஆள் நடமாட்டம்இல்லாத மலைப்பகுதிகளில் சென்று அமர்வதை தவிர்க்கவும்.
கள்ளர்கள்சாக்கிரதை.மலை உச்சியில் ராக்காயி அம்மன் கோவில் உண்டு.
அங்கே இருக்கும்நீர் ஊற்றின் மூலம் தெரியவில்லை.எனினும் வற்றாத ஊற்று.
அருமையான நீரும் கூட.எனக்கு தெரிஞ்சதை செவி வழி அறிஞ்சதை விபரம்
அறிஞ்சு பார்த்ததை சொல்லியாச்சு.பிழை இருப்பின் பொறுத்தருள்க:)

படங்கள் உதவி :கூகிள்